இந்திய இரயில்வே வழங்கியுள்ள இந்த எண்களுக்கு என்ன அர்த்தம்: இந்திய ரயில்வே பயணிகளின் வசதிகளை மனதில் வைத்து அவ்வப்போது பல விதிகளை உருவாக்குகிறது. பல பழைய விதிகளில் மாற்றம் செய்கிறது. இவற்றை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில் நீங்களும் தற்போது ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால், இந்த செய்தைக் கட்டாயம் படித்துக்கொள்ளுங்கள். பொதுவாக இந்திய ரயில்வே மூலம் மக்களுக்கு பல வகையான வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வசதிகள் மூலம், மக்கள் பயணம் செய்யும் போது நிறைய வசதிகள் கிடைக்கும். அதே நேரத்தில், பல நேரங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு மற்றும் பிளாட்பாரத்தில் உள்ள மற்ற வசதிகள் குறித்த முழுமையான தகவல்கள் மக்களிடம் இருப்பதில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், பல்வேறு இடங்களில் பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கும் பணியையும் ரயில்வே செய்கிறது. அத்தகைய சூழ்நிலையில், சில தொலைபேசி எண்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவற்றை பற்றி இங்கே விரிவாக தெரிந்துக்கொள்வோம்.
இந்திய ரயில்வே முக்கிய விவரம்
தற்போது அனைத்து தகவல்களும் ஆன்லைனில் கிடைக்கின்றன, ஆனால் அந்த தகவலைப் பெற ரயில்வேயால் வெவ்வேறு தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளன. ஆன்லைனில் தகவல்களைப் பிரித்தெடுப்பதில் பலர் நிறைய சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும், அத்தகைய சூழ்நிலையில், அந்த நபர்கள் இந்த எண்கள் மூலம் நிறைய உதவிகளைப் பெறுகிறார்கள். இந்த தொலைபேசி எண்கள் மூலம், மக்கள் தங்கள் தேவைக்கேற்ப தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் படிக்க | ரயில் கட்டணம் அதிரடியாக குறைப்பு... ஆஹா அசத்தல் அறிவிப்பு - பின்னணி என்ன?
ரயிலின் தற்போதைய நிலை மற்றும் PNR இன் நிலையை அறிய மக்கள் இந்த எண்களைப் பயன்படுத்தலாம். இது தவிர, புகார் ஏதேனும் இருந்தால், ரயில்வே மூலம் அதற்கான எண் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பயணத்தின் போது கேட்டரிங் அல்லது இ-கேட்டரிங் மூலம் பயன்பெற ரயில்வே எண்களையும் வெளியிட்டுள்ளது. இப்போது அதைப் பற்றி தெரிந்து கொள்வோம்...
மேலும் படிக்க | ITR தாக்கல் செய்ய மிக எளிய வழி: வீட்டிலேயே ஆன்லைனில் செய்யலாம்... முழு செயல்முறை இதோ
இவை தான் இந்தியன் ரயில்வே வழங்கிய முக்கிய எண்கள்
139 (பிஎன்ஆர் அல்லது ரத்துசெய்தல் அல்லது கட்டண விசாரணை அல்லது இருக்கை இருப்பு அல்லது தற்போதைய ரயில் இயங்கும் நிலை)
138 (புகார் தெரிவிக்க எண்)
1800111139 (பொது விசாரணை)
1800111322 (ரயில்வே போலீஸ்)
1800111321 (கேட்டரிங் புகார் அல்லது பரிந்துரை)
155210 (விஜிலென்ஸ்)
182 (குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான ஹெல்ப்லைன்)
1512 (ரயில் பயணிகளின் முழுநேர பாதுகாப்பு சம்மந்தமான புகார்களுக்கு, இருப்புப்பாதை காவல் துறையினர் உதவி மைய நம்பர்)
1098 (இழந்த அல்லது காணாமல் போன குழந்தைக்கு உதவி செய்ய ஹெல்ப்லைன்)
1323 (இ-கேட்டரிங் சேவை நிறைவேற்றிக் கொடுக்கும்)
மேலும் படிக்க | Indian Railways: பயணத்தில் லக்கேஜ் தொலைந்தால் கவலை வேண்டாம், இப்படி திரும்ப பெறலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ