தமிழ்நாட்டில் நவம்பர் 1 முதல் சாலை வரி அதிகரிக்கிறது! எந்த வாகனத்துக்கு எவ்வளவு?

Increasing Taxes In Tamil Nadu: நவம்பர் முதல் மோட்டார் வாகனங்களுக்கான வரி உயரலாம்... இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் சுற்றுலா வண்டிகளின் விலை 5% வரை உயர வாய்ப்புள்ளது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 20, 2023, 02:48 PM IST
  • நவம்பர் முதல் மோட்டார் வாகனங்களுக்கான வரி உயர்கிறது
  • வாகனங்களின் விலை 5% வரை உயர வாய்ப்புள்ளது
  • எந்த வாகனத்திற்கு எவ்வளவு வரி அதிகரிக்கும்?
தமிழ்நாட்டில் நவம்பர் 1 முதல் சாலை வரி அதிகரிக்கிறது! எந்த வாகனத்துக்கு எவ்வளவு? title=

சென்னை: தமிழ்நாட்டில், மோட்டார் வாகனங்களுக்கான சாலை வரி இன்னும் பத்து நாட்களில் உயர்கிறது. நவம்பர் முதல் மோட்டார் வாகனங்களுக்கான வரி உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டார் வாகனங்களுக்கான வரிகளை உயர்த்தும் மசோதா சில தினங்களுக்கு முன் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, வரும் முதல் தேதியில் இருந்து தமிழகத்தில் இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் சுற்றுலா வண்டிகளின் விலை 5% வரை உயர வாய்ப்புள்ளது.

புதிய வாகனங்களுக்கு ஆயுட்கால சாலை வரியையும், ஏற்கனவே உள்ள வாகனங்களுக்கு ஆண்டு மற்றும் காலாண்டு வரியையும் உயர்த்துவதற்காக, 1974ஆம் ஆண்டு தமிழ்நாடு மோட்டார் வாகன வரிச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான திருத்த மசோதாவை, தமிழக போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிமுகப்படுத்தினார்.  

புதிய வரி விதிப்புகள் குறித்த உத்தரவுகள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு இன்னும் அனுப்பப்படவில்லை என்றாலும், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் நவம்பா் 1-ந்தேதி முதல் இதற்கான தயாா் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தல் விடப்பட்டிருப்பதால், கட்டண உயா்வு நடைமுறைகள் நவம்பா் மாதம் தொடக்கம் முதலே அமல்படுத்தப்படும் என யூகிக்கப்படுகிறது. புதிய கட்டணங்களுக்கான பட்டியலும் இன்னும் ஓரிரு நாள்களில் வெளியிடப்படலாம் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | HRA கொடுப்பனவிற்கு வரி விலக்கு... ‘இந்த’ தவறுகளை செய்யாதீங்க... சிக்கல் ஏற்படும்!

இதற்கு முன்னதாக, சாலை வரி விகிதங்கள் ஜூன் 2008 மற்றும் ஜூன் 2010 இல் திருத்தப்பட்டன. சுற்றுலா வாகனங்களுக்கான சாலை வரி 2012 இல் உயர்த்தப்பட்டது. 150 சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட இன்ஜின் திறன் கொண்ட இரு சக்கர வாகனங்களுக்கான சாலை வரி, தற்போதுள்ள 8 சதவீதத்தில் இருந்து 4 சதவீதம் உயர்த்தப்படும். 

இந்த வரி உயர்வு, வாகன விற்பனையை பாதிக்கும் என்று பலரும் கருதுகின்றனர். ஏனென்றால், ரூ.20 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரையிலான விலை வரம்பில் உள்ள கார்களுக்கு, தற்போதுள்ள 15% வரியில் இருந்து 5% கூடுதல் சாலை வரி விதிக்கப்படும். இதனால் அவற்றின் விலை ரூ.1.2 முதல் ரூ.2.4 லட்சம் வரை உயரும்.

ரூ.10 லட்சத்துக்கும் குறைவான கார்களுக்கு தற்போது 10% வரி விதிக்கப்படுகிறது. தற்போது அதனுடன் 3% சாலை வரி உயர்த்தப்படும் என்பதால், ஜிஎஸ்டி உட்பட கார்களின் விலை ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை விலை உயரும். பைக், கார் மற்றும் பிற வாகனங்களுக்கான சாலை பாதுகாப்பு வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. வரி உயர்வினால், ஏற்கனவே வாகனம் வாங்க திட்டமிட்டவர்கள், தங்கள் திட்டத்தை ஒத்திப்போடும் அல்லது மாற்றிக் கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதாக வாகன விற்பனையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தற்போது, இரு சக்கர வாகனங்களுக்கு 15 ஆண்டுகளுக்கு ஒரே மாதிரியான சாலை வரி உள்ளது. தற்போது  8% வரி உள்ள நிலையில்,  புதிய மசோதாவின்படி ரூ.1 லட்சம் வரையிலான மோட்டார் சைக்கிள்களுக்கு 10% சாலை வரியும், ரூ.1 லட்சத்துக்கு மேல் உள்ள மோட்டார் சைக்கிள்களுக்கு 12% வரியும் விதிக்கப்படும். 

மேலும் படிக்க | EPF தொகைக்கு வரி விதிக்கப்படுமா? ஓய்வுக்கு முன்னரே முழு பிஎஃப் தொகையை எடுக்க முடியுமா?

வாடகைக்கு விடப்படும் வாகனங்களில், சுற்றுலா மற்றும் ஒப்பந்த வாகனங்களுக்கு காலாண்டு வரி ரூ.4,900-ஆகவும், 35 பேருக்கு மேல் பயணித்தால் இருக்கைக்கு ரூ.3 ஆயிரமும், படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையிலும் வரி உயா்கிறது.

சென்னை, மதுரை, கோவை நகர சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயக்க அனுமதி பெற்ற் பிரத்யேக பேருந்துகளுக்கு மேல்வரியும் விதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் போக்குவரத்து, வாடகை வாகனங்களுக்கு 5 ஆண்டு வரியாக ரூ.1,400 முதல் ரூ.6,000 வரை வரி உயா்த்தப்படுகிறது.

கல்வி நிறுவனங்களால் இயக்கப்படும் மாணாக்கர்கள் மற்றும்  பணியாளா்களுக்கான பேருந்துகளுக்கு 7 நாள்களுக்கு ஒரு இருக்கைக்கு ரூ.45 என்றும், பிற நிறுவனங்களின் பணியாளா் போக்குவரத்துக்கான வாகனங்களுக்கு 7 நாள்களுக்கு ஒரு இருக்கைக்கு ரூ.100 என வரி விதிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் அவதிப்படும் மக்கள்! அதிர்ச்சி புகார் உண்மையா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News