Small Scale Business Ideas For Women In Tamil : நம் நாட்டில் கடந்த சில நாட்களாக, வேலை தேடுபவர்கள் அதிகரிப்பதை விட, தொழில் முனைவோர்கள் அதிகரித்து வருகின்றனர். பலருக்கு தற்போது ஒருவருக்கு கீழ் வேலை பார்ப்பதிலோ, அல்லது அவர்களிடம்பதில் சொல்வதிலோ விருப்பமில்லை. சுய தொழில் ஒன்றை ஆரம்பித்தால், கண்டிப்பாக நமக்கு வரும் வருமானத்தை மீண்டும் அதில் முதலீடு செய்து தொழிலை இரட்டிப்பாக்கலாம் என்ற புரிதல், தற்போது பலரிடம் இருக்கிறது. உலகளவில் உள்ள தரவை எடுத்துப்பார்த்தால், ஆண் தொழில் முனைவோர்களை விட, சுய தொழில் செய்யும் பெண்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றனர். அப்படி குறைவாக இருக்கும் பெண்களும், தங்களது சுய தொழில் மூலமாக நன்கு சம்பாதித்தும்/சாதித்தும் வருகின்றனர். அப்படி, பெண்களுக்கு கை நிறைய வருமானத்தை கொடுக்கும் சுய தொழில்கள் எது என பார்ப்போமா?
உணவு தொழில்கள்:
பெண்கள் என்றாலே உணவு தொழில்தானா என்று நினைத்து விட வேண்டாம். பல பெண்களுக்கு பல துறைகளில் ஆர்வம் இருப்பது போல, சில பெண்களுக்கு சமையல் கலையிலும் ஆர்வம் இருக்கும். அப்படி, சமையல் கலையில் நீங்கள் ஆர்வமுள்ள பெண்ணாக இருந்தால், கண்டிப்பாக் உணவு தொழில் ஒன்றை நீங்களே தொடங்கலாம். எப்போது ஆரம்பித்தாலும், எங்கு ஆரம்பித்தாலும் மக்களால் அதிக வரவேற்பை பெறப்படும் தொழில்கள்தான், உணவு தொழில். இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால், இந்த தொழிலை சிறிய முதலீட்டுடன் கூட ஆரம்பிக்கலாம்.
வீட்டு அலங்கார தொழில்:
வீட்டு அலங்கார தொழிலில், சில பெண்கள் பல மடங்கு வருமானத்தை அள்ளி வருகின்றனர். கொரோனா காலத்தில் தங்கள் வீட்டில் இருந்த பொருட்களை வைத்து பலர் இல்லங்களை பிரமாதமாக அலங்கரித்தனர். இது இப்போது மட்டுமல்ல, பல ஆண்டுகளாகவே இந்தியாவில் ட்ரெண்டில் உள்ள தொழிலாக உள்ளது. இதற்கு சரியான வாடிக்கையாளர்கள் கிடைத்துவிட்டால், தொடர்ந்து முன்னேற்ற பாதையில் சென்று கொண்டே இருக்கலாம். இதற்கு நல்ல கலையறிவு இருப்பதும் முக்கியம்.
ஆன்லைன் பாடம்:
கடந்த சில ஆண்டுகளாக, ஆன்லைனில் பாடம் எடுப்பது என்பது அதிகரித்து வருகிறது. ஆன்லைனில் பாடம் எடுப்பதை பள்ளிகள் கல்லூரிகள் தாண்டி, இன்னும் சில கல்வி நிறுவனங்களும் பின்பற்றி வருகிறது. எனவே, ஆன்லைனில் பாடம் கற்றுக்கொடுக்கும் தொழிலையும் செய்யலாம். அது மட்டுமன்றி, கற்றுக்கொடுக்கும் பாடத்தை ரெக்கார்டு செய்து அதை எந்த கல்வி நிறுவனத்தின் வாயிலாக பாடம் நடத்துகிறீர்களோ, அவர்களிடமே விற்கவும் செய்யலாம்.
காளான் வளர்ப்பு:
இந்தியாவை பொறுத்தவரை காளான் காய்கறிக்கு நல்ல வியாபாரமும் வருமானமும் உண்டு. இந்தியாவில் 4 வகை காளான்களை விற்பனை செய்கின்றனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை, இந்தியாதான் காளான் விற்பனையிலும் ஏற்றுமதியிலும் 5வது இடத்தில் இருந்தது. இந்த தொழிலை தொடங்க, வங்கியில் இருந்து கடன் பெறலாம்.
கைவினை தொழில்கள்:
பெண்கள் பலருக்கு எம்பிராய்டரி, ஸ்வெட்டர் பின்னுதல், வரைதல் போன்ற பல கைவினைக்கலைகளில் ஆர்வம் அதிகமாக இருக்கும். இந்தியாவை பொறுத்தவரை, கைவினை பொருட்கள் தொழிலில் பெண்கள்தான் முன்னோடிகளாக உள்ளனர். இந்த தொழில், நல்ல வருமானம் தருவதாகவும் பார்க்கப்படுகிறது. கம்மல், செயின் முதல் டிஷர்ட், கர்சிஃப் வரை கைவினை பொருட்களின் விற்பனை அதிகரித்து வருகிறது.
(பொறுப்பு துறப்பு: தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள இந்த குறிப்புகளை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக துறை சம்பந்தப்பட்டவர்களிடம் ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | பெண்கள் அதிக லாபம் பார்க்கும் தொழில்கள்! ‘இதை’ செய்தால் நீங்களும் ஆகலாம் Boss Lady!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ