ஒருவர் பணிபுரியும் வரை அவருக்கு எவ்வித நிதி சிக்கல்களும் ஏற்படாது, ஏனெனில் மாதந்தோறும் அவருக்கு தகுந்த ஊதியம் கிடைத்துவிடும், அதனால் கவலை எதுவும் இருக்காது. ஆனால் பணியிலிருந்து நின்றபின் அவருக்கு கிடைக்கும் ஊதியம் நின்றுவிடும், இதனால் வயது முதிர்ந்த பின்னர் பலரும் நிதி சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்த காரணத்தினாலலேயே பலரும் பணிபுரியும் காலத்திலேயே பல்வேறு முதலீடு திட்டங்களில் பணத்தை முதலீடு செய்து ஓய்வுக்குப் பின் நிதி சிக்கல்களை சமாளிக்க விரும்புகின்றனர். எல்லா வகையான முதலீடுமே பாதுகாப்பானது தானா என்றால் இல்லை, சில முதலீடுகள் மட்டுமே உங்களுக்கு நம்பகத்தன்மையை தருகிறது. அப்படிப்பட்ட நம்பகத்தன்மை வாய்ந்த ஒரு திட்டம் தான் எஸ்ஐபி. சிறந்த வருவாயை பாதுகாப்பாக நீங்கள் பெற விரும்பினால் எஸ்டபுள்யூபி-ஐ பரிசீலிக்கலாம், இது எஸ்ஐபி-ல் உள்ள சிஸ்டமேட்டிக் வித்ட்ராவல் பிளான் ஆகும்.
இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தால் ஓய்வூதியம் கிடைக்கும், அதாவது ஒவ்வொரு மாதமும் ரூ.5000 வீதம் 20 ஆண்டுகளுக்கு எஸ்ஐபி-ல் முதலீடு செய்தீர்கள் என்றால் உங்களுக்கு மாதந்தோறும் ரூ. 35,000 வரை ஓய்வூதியம் கிடைக்கும். சிஸ்டமேட்டிக் வித்ட்ராவல் பிளான் (எஸ்டபுள்யூபி) என்பது ஒரு முதலீடு ஆகும், இந்த திட்டத்தில் எப்போது எவ்வளவு தொகை எடுக்கலாம் என்பதை முதலீட்டாளர்களே முடிவு செய்துகொள்ளலாம். தினசரி, வாராந்திர, மாதாந்திர, காலாண்டு, 6 மாதங்கள் அல்லது ஆண்டு அடிப்படையில் முதலீட்டாளர்கள் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். ஈக்விட்டி மற்றும் டெட் ஃபண்டுகளில் உள்ளதைப் போலவே இதற்கு வரியும் உண்டு. இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் தங்களது பணத்தை 12 மாதங்களுக்கு மிகாமல் வைத்திருந்தால் , முதலீட்டாளர்கள் குறுகிய கால மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும். இப்போது வெறும் ரூ.5000 முதலீடு செய்து எப்படி இவ்வளவு பெரிய தொகையை ஓய்வூதியமாக பெற முடியும் என்பதை பற்றி பார்ப்போம்.
மேலும் படிக்க | ஆதார் கார்டில் மாற்றங்கள் செய்யணுமா? இனி உங்கள் மொபைல் மூலமே செய்யலாம்!
- எஸ்ஐபி 20 ஆண்டுகள் வரை
- மாதாந்திர எஸ்ஐபி ரூ 5000
- பதவிக்காலம் 20 ஆண்டுகள்
- மதிப்பிடப்பட்ட வருவாய் 12%
- நிகர மதிப்பு ரூ 50 லட்சம்
- பல்வேறு திட்டங்களில் முதலீடு 50 லட்சம்
- மதிப்பிடப்பட்ட வருவாய் 8.5%
- ஆண்டு வருமானம் ரூ.4.25 லட்சம்
- மாத வருமானம் 4.25 லட்சம்/12 = ரூ 35417
மேலும் படிக்க | லக்ஷ்மண் நரசிம்மன்: ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ