SCSS vs Banks Senior Citizen FDs: மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி தரும் ஜாக்பாட் திட்டம் எது?

SCSS vs Banks Senior Citizen FDs: மூத்த குடிமக்களுக்கு ஏற்ற பாதுகாப்பான திட்டம் எது? SCSS மற்றும் வங்கி FDகள் வழங்கும் வட்டி விகிதங்களின் முழுமையான ஒப்பீட்டை இங்கே காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 11, 2024, 12:18 PM IST
  • கனரா வங்கி 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலய்த்திற்கு 3.50% முதல் 7.75% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.
  • பஞ்சாப் நேஷனல் வங்கி மூத்த குடிமக்களுக்கு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை 4% முதல் 7.75% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.
  • HDFC வங்கி மூத்த குடிமக்களுக்கு 4% முதல் 7.75% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.
SCSS vs Banks Senior Citizen FDs: மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி தரும் ஜாக்பாட் திட்டம் எது? title=

SCSS vs Bank senior citizen FDs: தபால் நிலையம் மூலம் வழங்கப்படும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Saving Scheme) மற்றும் வங்கிகளில் நிலையான வைப்புத்தொகைகள் (Fixed Deposit) பொதுவாக வயதான நபர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதலீட்டு வழிகளாக உள்ளன. இந்த இரண்டில் மூத்த குடிமக்களுக்கு ஏற்ற பாதுகாப்பான திட்டம் எது? SCSS மற்றும் வங்கி FDகள் வழங்கும் வட்டி விகிதங்களின் முழுமையான ஒப்பீட்டை இங்கே காணலாம். 

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS Interest Rate) 

SCSS திட்டத்தின் வட்டி விகிதம் (Interest Rate) ஜனவரி-மார்ச் 2024க்கு 8.2% ஆக உள்ளது. சமீபத்தில் இதில் எந்த மாற்றமும் செய்யபப்டவில்லை.

இந்தத் திட்டமானது 5 ஆண்டு காலத்தைக் கொண்டுள்ளது (5 Year Tenure). இதை 3 ஆண்டுகள் நீட்டிக்கலாம். இதில் காலாண்டுக்கு ஒருமுறை வட்டி செலுத்தப்படுகின்றது. இது முழுமையாக வரிக்கு உட்பட்டது. இதன் குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ. 1000. ரூ. 1000 இன் மடங்குகளில் அனைத்து SCSS கணக்குகளிலும் ஒருவர் அதிகபட்சமாக ரூ. 30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். மேலும், இந்தத் திட்டத்தில் முதலீடுகள் வருமான வரிச் சட்டம் (Income Tax Act), 1961ன் கீழ் பிரிவு 80C வரி சலுகைகளுக்கு தகுதி பெறுகின்றன.

இப்போது, மூத்த குடிமக்கள் (Senior Citizens) நிலையான வைப்புத்தொகைகளுக்கு 5 வருட காலவரையறையுடன் பெரிய வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களைப் பார்க்கலாம்.

எஸ்பிஐ மூத்த குடிமக்கள் எஃப்.டி (SBI senior citizen FD)

SBI இணையதளத்தின்படி, வங்கி, 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு SBI We Care உட்பட, 4% முதல் 7.50% வரையிலான வட்டி விகிதங்களை வங்கி வழங்குகிறது. குறிப்பாக, 5 ஆண்டு காலத்திற்கான வட்டி விகிதம் 7.25% ஆக உள்ளது. 

மேலும் படிக்க | Budget 2024: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு... 8வது ஊதியக் கழு, சம்பள உயர்வு!!

கனரா வங்கி மூத்த குடிமக்கள் FD (Canara Bank Senior Citizen FD)

கனரா வங்கி 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலய்த்திற்கு 3.50% முதல் 7.75% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. குறிப்பாக, 5 ஆண்டு காலத்திற்கு 7.30% வட்டி விகிதம் உள்ளது.

PNB வங்கி மூத்த குடிமக்கள் FD (PNB Bank Senior Citizen FD)

பஞ்சாப் நேஷனல் வங்கி மூத்த குடிமக்களுக்கு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை 4% முதல் 7.75% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. சூப்பர் மூத்த குடிமக்களுக்கு, விகிதங்கள் 4.30% முதல் 8.05% வரை உள்ளன. குறிப்பாக, மூத்த குடிமக்களுக்கு 7% வட்டி விகிதத்தையும், சூப்பர் மூத்த குடிமக்களுக்கு 7.30% வட்டி விகிதத்தையும் 5 ஆண்டு காலத்திற்கு வங்கி வழங்குகிறது.

HDFC வங்கி மூத்த குடிமக்கள் FD (HDFC Bank Senior Citizen FD)

HDFC வங்கி மூத்த குடிமக்களுக்கு 4% முதல் 7.75% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது, இதில் HDFC வங்கி மூத்த குடிமக்கள் பராமரிப்பு FD அடங்கும். குறிப்பாக, வங்கி 5 ஆண்டு காலத்திற்கு 7.50% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

ஐசிஐசிஐ வங்கி மூத்த குடிமக்கள் எஃப்.டி (ICICI Bank Senior Citizen FD)

ஐசிஐசிஐ வங்கி 3.50% முதல் 7.50% வரையிலான வட்டி விகிதங்களை வழங்குகிறது, இதில் ஐசிஐசிஐ கோல்டன் இயர்ஸ் எஃப்டியும் அடங்கும். குறிப்பாக, வங்கி 5 ஆண்டு காலத்திற்கு 7.50% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

ஆக்சிஸ் வங்கி மூத்த குடிமக்கள் FD (Axis Bank Senior Citizen FD)

ஆக்சிஸ் வங்கி மூத்த குடிமக்களுக்கு 3.50% முதல் 7.75% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. குறிப்பாக, வங்கி 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலங்களுக்கு 7.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

மேலும் படிக்க | குட் நியூஸ்... இந்த வருடம் 10% சம்பள உயர்வு லட்சியம்... 9% நிச்சயம்... அடித்து சொல்லும் சர்வே..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News