SBI Recruitment 2023: எஸ்பிஐ வங்கியில் ரூ. 41000 சம்பளத்துடன் வேலைவாய்ப்பு!

SBI Recruitment 2023: பாரத ஸ்டேட் வங்கியானது ரூ.41,000 வரையிலான சம்பளத்துடன் 1000 நபர்களுக்கு மேல் பணியமர்த்த வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 5, 2023, 08:09 AM IST
  • ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 1, 2023 முதல் நடைமுறையில் உள்ளது.
  • ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.
  • 30.04.2023 தேதிக்குள் தகுதிவாய்ந்த மற்றும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.
SBI Recruitment 2023: எஸ்பிஐ வங்கியில் ரூ. 41000 சம்பளத்துடன் வேலைவாய்ப்பு! title=

SBI Recruitment 2023: நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி அதன் கிளைகளில் காலியாக உள்ள பல்வேறு பதவிகளில் தகுதியான பணியாளர்களை பணியமர்த்த வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு வருகிறது. எஸ்பிஐ வங்கி ஆட்சேர்ப்பு 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தகுதியான விண்ணப்பதாரர்கள் சேனல் மேனேஜர் ஃபெசிலிடேட்டர்-எனிடைம் சேனல்கள் (CMF-AC), 02), சேனல் மேனேஜர் சூப்பர்வைசர் -எனிடைம் சேனல்கள் (CMS-AC) மற்றும் 03), துணை அதிகாரி-எனிடைம் சேனல்கள் ( SO-AC) போன்ற பதவிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி 30.04.2023 ஆகும்.  ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.  ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 1, 2023 முதல் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஆன்லைனில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது இந்த தவறை பண்ணாதீங்க!

காலி பணியிடங்கள்:

பாரத ஸ்டேட் வங்கி தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மொத்தம் 1031 காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது.

பணிகள்:

1) சேனல் மேனேஜர் ஃபெசிலிடேட்டர் 
2) சேனல் மேனேஜர் சூப்பர்வைசர் 
3) துணை அதிகாரி. 

சம்பளம்:

1) சேனல் மேனேஜர் ஃபெசிலிடேட்டர் -எனிடைம் சேனல்கள்(CMF-AC): ரூ 36,000 
2) சேனல் மேனேஜர் சூப்பர்வைசர் -எனிடைம் சேனல்கள்(CMS-AC): ரூ 41,000  
3) துணை அதிகாரி எனிடைம் சேனல்கள் (SO-AC): ரூ 41,000

மேலும் படிக்க | லோன் முன்கூட்டியே கட்டி முடிக்கும்போது கனவத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News