SBI புதிய எச்சரிக்கை; வாடிக்கையாளர்களே உஷார்!

பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India) அனைத்து வாடிக்கையாளர்களையும் எச்சரித்து வெள்ளிக்கிழமை புதிய அறிவிப்பை வெளியிட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 4, 2021, 06:56 AM IST
SBI புதிய எச்சரிக்கை; வாடிக்கையாளர்களே உஷார்! title=

புதுடெல்லி: பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India) தனது 44 கோடி வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், செப்டம்பர் 4 (இன்று) மற்றும் 5 ஆம் (நாளை) தேதிகளில் சில மணிநேரங்களுக்கு இணைய வங்கி உட்பட 7 வகையான சேவைகள் பற்றிய முக்கிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன, அதன் முழு விவரத்தை இங்கே பார்போம்.

SBI தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கின் மூலம் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டு உள்ளது. அதில்., செப்டம்பர் 4 ம் தேதி இரவு 11:35 மணி முதல் செப்டம்பர் 5 ம் தேதி இரவு 01:35 மணி வரை ஆன்லைன் பராமரிப்பு நடவடிக்கைகள் நடைபெறும். பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக இண்டர்நெட் பேங்கிங் (Internet Banking), யோனோ (YONO), யோனோ லைட் (YONO Lite), யோனோ பிசினஸ் (YONO Business) மற்றும் ஐஎம்பிஎஸ் (IMPS) மற்றும் UPI சேவைகள் முடங்கி இருக்கும்.

ALSO READ | SBI Door Step Banking: இனி உங்கள் வீடு தேடி பணம் வரும்..!!

முன்னதாக, ஜூலை 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் எஸ்பிஐ இதேபோன்ற எச்சரிக்கையை வெளியிட்டது, அதன் பிறகு இந்த சேவைகள் இரவு 10:45 மணி முதல் 1:15 மணி வரை (150 நிமிடங்கள்) முடங்கி இருந்தது. எஸ்பிஐ அளித்த தகவலின்படி, வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், யுபிஐ தளத்தை மேம்படுத்த இந்த சேவைகள் தடைபட்டன. வேலை முடிந்தவுடன் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.

ஒவ்வொரு முறையும் இந்த தகவல் வாடிக்கையாளர்களுக்கு வங்கியால் முன்கூட்டியே வழங்கப்படுகிறது, இதனால் அவர்கள் தங்கள் முக்கியமான வேலையை சரியான நேரத்தில் முடிக்க முடிகிறது. அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, SBI YONO தற்போது மொத்தம் 35 மில்லியன் பதிவு செய்த பயனர்களைக் கொண்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் இருப்பதால், எஸ்பிஐ இத்தகைய பராமரிப்பு பணிகளை இரவு நேரங்களில் செய்து வருகிறது. இதனால் குறைந்த எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இன்டர்நெட் பேங்கிங் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 85 மில்லியனாகவும், மொபைல் பேங்கிங் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 19 மில்லியனாகவும் உள்ளது.

ALSO READ | மூத்த குடிமக்களுக்கான சூப்பர்ஹிட் திட்டங்கள் செப்டம்பர் 30 நிறைவு: பயன்பெற முந்துங்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News