RBI Monetary Policy: விகிதங்களில் இல்லை மாற்றம், வீடு, வாகன கடன் வாங்கியவர்களுக்கு ஏமாற்றம்

ஜூன் 4 ம் தேதி மத்திய வங்கி தனது நாணயக் கொள்கை விகிதங்களுக்கான அறிக்கையை வெளியிட்டது. ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 4 சதவீதத்திலும், ரிவர்ஸ் ரெப்போ வீதத்தை 3.35 சதவீதமாகவும் வைத்திருக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 4, 2021, 11:19 AM IST
  • ரிசர்வ் வங்கி தனது நாணயக் கொள்கை மதிப்பீட்டில் முக்கிய கொள்கை விகிதங்களை மாற்றாமல் வைத்திருப்பதாக தெரிவித்தது.
  • ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 4 சதவீதத்திலும், ரிவர்ஸ் ரெப்போ வீதத்தை 3.35 சதவீதமாகவும் வைத்திருக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
  • வீடு மற்றும் வாகன கடன்களுக்கான ஈ.எம்.ஐ இன்னும் சில காலத்திற்கு குறைவதற்கான வாய்ப்பில்லை.
RBI Monetary Policy: விகிதங்களில் இல்லை மாற்றம், வீடு, வாகன கடன் வாங்கியவர்களுக்கு ஏமாற்றம்   title=

RBI Monetary Policy: இந்திய ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை தனது நாணயக் கொள்கை மதிப்பீட்டில் முக்கிய கொள்கை விகிதங்களை மாற்றாமல் வைத்திருப்பதாக தெரிவித்தது. இந்த முடிவின் காரணமாக, வீடு மற்றும் வாகன கடன்களுக்கான ஈ.எம்.ஐ இன்னும் சில காலத்திற்கு குறைவதற்கான வாய்ப்பில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

கொரோனா இரண்டாவது அலையின் (Coronavirus Second Wave) பாதிப்பை தாங்கிக்கொள்ள நாடு தயாராக உள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். கொரோனா தாக்கம் குறையும் வரை சாதகமான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

ஜூன் 4 ம் தேதி மத்திய வங்கி தனது நாணயக் கொள்கை விகிதங்களுக்கான அறிக்கையை வெளியிட்டது. ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 4 சதவீதத்திலும், ரிவர்ஸ் ரெப்போ வீதத்தை 3.35 சதவீதமாகவும் வைத்திருக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வணிக வங்கிகளுக்கு தேவைபப்டும்போது ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) கடன் அளிக்கும். அந்த கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம்தான் ரெப்போ விகிதம் (Repo Rate) எனப்படுகின்றது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி பயன்படுத்தும் ஒரு கருவியாகும் இது. ரிவர்ஸ் ரெப்போ வீதம் (Reverse Repo Rate) என்பது ரிசர்வ் வங்கி வங்கிகளிடமிருந்து கடன் வாங்கும் வீதமாகும்.

ALSO READ: பொருளாதார தடுப்பூசி: பல வித கோவிட் நிவாரணங்களை அறிவித்தார் RBI கவர்னர் ஷக்திகாந்த தாஸ்

எம்.பி.சி அதன் கடைசி ஐந்து மதிப்புரைகளில் முக்கிய அளவுகோல் விகிதத்தை மாற்றாமல் வைத்திருந்தது. பாலிசி விகிதத்தை மாற்றாமல் வைத்திருக்க எம்.பி.சி முடிவு செய்திருப்பது இது ஆறாவது முறையாகும். இதற்கு முன்னர் 22 மே, 2020-ல் ரிசர்வ் வங்கி அதன் கொள்கை விகிதத்தை (Monetary Policy Rates) மாற்றியது. அப்போது அதுவரை இல்லாத அளவு வட்டி விகிதத்தை குறைத்து தேவையை அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இதற்கிடையில், திங்களன்று இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் புள்ளிவிவரங்களை (GDP Figures) அரசாங்கம் வெளியிட்டது. 2021 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட 7.3 சதவீதத்திற்கும் குறைவாக சுருங்கிவிட்டது என்று தரவு காட்டுகிறது.

தேசிய புள்ளிவிவர அலுவலகம் (NSO) வழங்கிய தரவின் படி, மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2020-21 ஆம் ஆண்டில் நிலையான விலையில் 135.13 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது  2019-20 ஆம் ஆண்டில் 145.69 லட்சம் கோடி ரூபாயாக கணக்கிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

"2020-21 காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விலைகள் ரூ .38.96 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2019-20 ஆம் ஆண்டின் 4 ஆம் காலாண்டில் ரூ. 38.33 லட்சம் கோடியாக இருந்தது, இது 1.6 சதவீத வளர்ச்சியைக் காட்டுகிறது" என மத்திய புள்ளிவிவர அலுவலகம் (CSO) வெளியிட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

ALSO READ: New Rs 100 Note: வார்னிஷ் பூச்சுடன் விரைவில் வெளிவரும் 100 ரூபாய் நோட்டு: RBI

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News