RBI வங்கிகளுக்கு வைத்த செக்: தினமும் ரூ.5,000 இழப்பீடு.... கடன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்

RBI On Loans: ரிசர்வ் வங்கி அனைத்து கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 16, 2023, 04:22 PM IST
  • ரிசர்வ் வங்கியின் புதிய விதி.
  • டிசம்பர் 1, 2023 முதல் அமல்.
  • இது வாடிக்கையாளர்களுக்கு பெரிய அளவில் பலம் தரும்.
RBI வங்கிகளுக்கு வைத்த செக்: தினமும் ரூ.5,000 இழப்பீடு.... கடன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம் title=

ரிசர்வ் வங்கியின் புதிய விதி: ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு யாருக்குத்தான் இருக்காது? சிலரால் தங்களிடம் உள்ள பணம் கொண்டே வீட்டை வாங்க முடிகிறது. ஆனால், பலரால் அது முடிவதில்லை. பெரும்பாலானோர் கடன் வாங்கிதான் வீடு வாங்குகிறார்கள். நீங்களும் வீடு அல்லது ஏதாவது சொத்திற்காக தனிநபர் கடன் (Personal Loan) வாங்கியிருந்தால், இது உங்களுக்கு முக்கியமான செய்தியாக இருக்கும். விரைவில் கடன் விதிகளில் ஒரு பெரிய மாற்றம் வரப் போகிறது. 

கடன்களின் புள்ளிவிவரங்களைப் பற்றி பேசுகையில், மொத்தக் கடன்களில் 25 சதவீதம் வீட்டுக் கடன்கள் அதாவது சொத்து தொடர்பானவையாக உள்ளன. ஆகையால் இந்த மாற்றத்தை பற்றி அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது மிக அவசியமாகும். வாடிக்கையாளர்கள் கடனை திருப்பி கட்டி முடித்த 30 நாட்களுக்குள் வாடிக்கையாளர்களின் அனைத்து ஆவணங்களையும் திருப்பித் தருமாறு NBFC வங்கிகளுக்கு ஆர்பிஐ (RBI) உத்தரவு பிறப்பித்துள்ளது. அவ்வாறு செய்யாவிட்டால், வங்கிகள் ஒரு நாளைக்கு 5000 ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டி இருக்கும். 

டிசம்பர் 1, 2023 முதல் அமல்

ரிசர்வ் வங்கி அனைத்து கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இதை அறிவித்துள்ளது. இந்த ஆவணங்களில் அனைத்து வகையான அசையும் மற்றும் அசையா சொத்துகளின் அனைத்து அசல் ஆவணங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விதி டிசம்பர் 1, 2023 முதல் அமல்படுத்தப்படும்.

முன்னதாக ஆவணங்கள் பெறுவதில் சிக்கல்கள் இருந்தன

இது தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு (Reserve Bank of India) இதுவரை பல புகார்கள் வந்துள்ளன. எனவே, இந்த பெரிய நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது. முன்னதாக, வங்கிகள் ஆவணங்களை சமர்ப்பிக்க பல மாதங்கள் ஆகும். இதனால் வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

பல வாடிக்கையாளர்களின் ஆவணங்கள் தொலைந்து போயின

இது தவிர, வாடிக்கையாளர்களின் ஆவணங்கள் காணாமல் போன வழக்குகளும் வெளிச்சத்துக்கு வந்தன. எனவே, இப்போது ஆவணங்கள் தொலைந்து போனால், இந்த ஆவணங்களை விரைவாகச் செய்துகொள்ள வாடிக்கையாளருக்கு வங்கி முழு உதவி செய்யும். அபராதத் தொகையைப் பற்றி பேசினால், வங்கி அதை சொத்து உரிமையாளருக்கு செலுத்தும்.

மேலும் படிக்க | மாதம் ₹210 போதும்... ஆயுள் முழுவதும் பென்ஷன் தரும் அடல் பென்ஷன் திட்டம்..!

கோவிட் பாதிப்பிற்குப் பிறகு கடன்கள் அதிகமாகியுள்ளன

கொரோனா நோய்த்தோற்றுக்குப் பிறகு தனிநபர் கடன்களை பெற்றவர்களின் எண்ணிக்கையில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டுக்கு முன், 15 சதவிகித தனிநபர் கடன்கள் தான் பெறப்பட்டன. ஆனால் 2020 ஆம் ஆண்டிலிருந்து, NBFC புள்ளிவிவரங்களில் 45 சதவிகித வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு, பெரும்பாலான மோசடி வழக்குகள் வெளிச்சத்துக்கு வருகின்றன. இந்த காரணத்திற்காக, ரிசர்வ் வங்கி தனது கொள்கையில் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டியிருந்தது.

30 நாட்களுக்குள் ஆவணங்களை பெற்றுக்கொள்ள விதி உள்ளது

கடனை திருப்பிச் செலுத்திய பிறகு, அதாவது செட்டில் செய்த பிறகு, சம்பந்தப்பட்ட நபரின் ஆவணங்களை 30 நாட்களுக்குள் வங்கி அல்லது கடன் வழக்கிய நிறுவனம் திருப்பித் தர வேண்டும். நாட்டின் மத்திய வங்கியான ஆர்பிஐ, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் மன சஞ்சலங்களைக் கருத்தில் கொண்டு இந்த முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. டிசம்பர் 1, 2023 முதல் விதிகளை அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு பெரிய அளவில் பலம் தரும். 

மேலும் படிக்க | EPFO அட்டகாசமான செய்தி: விரைவில் ஊதிய வரம்பில் ஏற்றம்.. 75 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News