இந்தியாவில், மக்களுக்காக பல வகையான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஏழை மக்களுக்கு அரசு இலவசமாக அல்லது குறைந்த விலையில் ரேஷன் பொருட்களை வழங்கி வருகின்றது. அதே சமயம் ஏழை மக்கள் ரேஷன் கார்டு மூலம் குறைந்த விலையில் எளிதாக ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இது ஏழை மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. ஆனால், சில சமயங்களில் சிறு சிறு தவறுகளால் ரேஷன் கார்டுக்கான பலன்களை மக்கள் இழக்க வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது. இப்படி நடக்காமல் இருக்க, ரேஷன் கார்டில் தேவையான புதுப்பிப்புகள் செய்யப்பட வேண்டியது அவசியமாகும். அப்படி ஒரு அத்தியாவசிய புதுப்பிப்பு பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரேஷன் கார்டு அப்ளை செய்வது எப்படி
இந்தியாவின் உண்மையான குடிமகனாக இருக்கும் எவரும் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். மைனர்கள் அதாவது 18 வயதுக்குட்பட்டவர்கள் தங்களின் பெற்றோரின் ரேஷன் கார்டில் சேர்க்கப்படுவார்கள். இருப்பினும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனி ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். அதேபோல் ஒவ்வொரு மாநில அரசாலும் ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க | உங்க ரேஷன் கார்டுக்கு ஆபத்து; புதிய ரூல்ஸ் தெரிஞ்சிகோங்க
பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும்
அதேசமயம் உத்தரபிரதேசத்தில், உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறையால் விநியோகிக்கப்படும் ரேஷன் கார்டு உரிய மாநிலத்தில் வசிப்பவர்கள் அனைவருக்கும் வழங்கப்படும். இந்த ரேஷன் கார்டு வழங்குவதன் நோக்கம் என்னவென்றால், அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய், உரங்கள், எல்பிஜி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதன் குடிமக்களுக்கு அதிக மானிய விலையில் வழங்கும் இலக்கு பொது விநியோக முறையை செயல்படுத்துதல்.
இந்த ஆவணங்கள் தேவைப்படும்
இருப்பினும், உத்தரபிரதேசத்தில் ரேஷன் கார்டு பெற, சில முக்கிய ஆவணங்களையும் வைத்திருப்பது அவசியமாகும். இந்த ஆவணங்களை அடையாளச் சான்றாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதன்படி வாக்காளர் ஐடி, பான் கார்டு, பாஸ்போர்ட், குடும்ப உறுப்பினரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் அல்லது வங்கி பாஸ்புக் ஆகியவை இதில் அடங்கும்.
இந்த அடையாளச் சான்றாக இல்லாவிட்டால், ரேஷன் கார்டு உருவாக்கப்படாது அல்லது ரேஷன் கார்டில் எந்த உறுப்பினரின் பெயரும் சேர்க்கப்படாது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ரேஷன் பொருட்கள் எடுப்பதையும் இழக்க நேரிடும். குறைந்த விலையில் ரேஷன் தேவை என்றால், இந்த ஆவணங்களை அடையாளச் சான்றாக சமர்ப்பிக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.
மேலும் படிக்க | Ration Card வைத்திருப்பவர்களுக்கு முக்கிய செய்தி, இந்த வசதி கிடைக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ