இந்திய ரயில்வே அப்டேட்: இந்திய ரயில்வே குறித்து ஒரு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. நீங்களும் ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால், கடந்த ஒரு வருடத்தில் ரயில்வேக்கு எவ்வளவு வருவாய் கிடைத்துள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இதுகுறித்த தகவல் அதிகாரபூர்வ புள்ளி விவரங்கள் மூலம் வெளியாகியுள்ளது. இந்திய ரயில்வே 2022-23 நிதியாண்டில் 2.40 லட்ச கோடி ரூபாய் வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட சுமார் 49000 கோடி ரூபாய் அதிகமாகும். இவ்வாறு ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணித் வகையில் தற்போது ரயில்வே வருவாய் அதிகரித்துள்ள நிலையில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மீண்டும் மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் விலக்கு அளிக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ரயில்வே அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022-23ல் சரக்கு போக்குவரத்து மூலம் வருவாய் ரூ.1.62 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது, இது முந்தைய ஆண்டை விட 15 சதவீதம் அதிகமாகும்.
மேலும் படிக்க | வந்தது புதிய விதி! இனி ஹெல்மெட் போட்டாலும் அபராதம் விழும்... எப்படி தெரியுமா?
வருவாய் 63,300 கோடியை எட்டியுள்ளது
இந்திய ரயில்வேயின் பயணிகள் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 61 சதவீதம் அதிகரித்து ரூ.63,300 கோடியை எட்டியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ரயில்வே தனது ஓய்வூதிய செலவினங்களைச் சமாளிக்க முடிந்ததாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக, ரயில்வே தனது ஓய்வூதியப் பொறுப்பில் ஒரு பகுதியை ஏற்க நிதி அமைச்சகத்தை அணுகியது.
ரயில்வே செலவைக் குறைத்தது
வருவாயை அதிகரிப்பதற்கும் செலவுகளைக் குறைப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இயக்க விகிதத்தை 98.14 சதவீதமாகக் கொண்டு வர உதவியுள்ளன. இது திருத்தப்பட்ட இலக்குடன் ஒத்துப்போகிறது. அறிக்கையின்படி, அனைத்து வருவாய் செலவினங்களையும் பூர்த்தி செய்த பிறகு, உள் மூலங்களிலிருந்து மூலதன முதலீட்டின் மூலம் ரயில்வே 3,200 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது.
முன்னதாக ரயில்வே கட்டணத்தில் சலுகை அளித்து வந்தது
ரயில்வே அமைச்சகத்திடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, ரயிலில் பயணிக்கும் அனைத்து குடிமக்களும் சராசரியாக 53 சதவீத கட்டணத்தில் தள்ளுபடி பெறுகின்றனர். இதனுடன், திவ்யாஞ்ஞர்கள், மாணவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இந்த விலக்கு தவிர பல வகையான சலுகைகள் கிடைக்கும்.
மேலும் படிக்க | EPFO Alert: இதை செய்யாவிட்டால் உங்கள் இபிஎஃப் கணக்கு தானாக மூடப்படலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ