உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கி தரும் தபால் அலுவலகத்தின் அசத்தல் திட்டம்!

மத்திய அரசுக்கு சொந்தமான தபால் அலுவலகங்கள் வழங்கக்கூடிய திட்டங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் உங்கள் பணத்தை விரைவில் இரட்டிப்பாக்கலாம்.   

Written by - RK Spark | Last Updated : Jun 12, 2023, 10:36 AM IST
  • கேவிபி வட்டி விகிதம் 7.2 சதவீதத்தில் இருந்து 7.4 சதவீதமாக மத்திய அரசால் உயர்த்தப்பட்டது.
  • கிசான் விகாஸ் பத்ரா திட்டம் என்பது மத்திய அரசால் நடத்தப்படும் மொத்த வைப்புத் திட்டமாகும்.
  • கேவிபி திட்டத்தில் முதலீடு செய்த பணம் 115 மாதங்களுக்குப் பிறகு இரட்டிப்படையும்.
உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கி தரும் தபால் அலுவலகத்தின் அசத்தல் திட்டம்! title=

மக்களின் எதிர்கால தேவைக்காக நாட்டில் பலவகையான முதலீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.  நாட்டிலுள்ள ஒவ்வொரு திட்டங்களும் மக்களுக்கு பல்வேறு வகையான சலுகைகளை வழங்கி வருகின்றது.  பெரும்பாலான மக்களும் வங்கி, தபால் அலுவலகம் அல்லது எல்ஐசி திட்டத்தில் முதலீடு செய்வதில் மிகுந்த ஆர்வத்தை கொண்டிருக்கின்றனர்.  ஏனென்றால் இந்த நிறுவனங்கள் வழங்கக்கூடிய திட்டங்களில் நாம் முதலீடு செய்யும் பணத்திற்கு சிறந்த வருமானமும், கவர்ச்சிகரமான சலுகைகளும், பணத்திற்கு பாதுகாப்பும் கிடைக்கிறது.  மத்திய அரசுக்கு சொந்தமான தபால் அலுவலகங்கள் வழங்கக்கூடிய திட்டங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் உங்கள் பணத்தை விரைவில் இரட்டிப்பாக்கலாம்.  உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கி தரக்கூடிய தபால் அலுவலகத்தின் முதலீட்டு  திட்டத்தின் பெயர் கிசான் விகாஸ் பத்ரா ஆகும்.  கடந்த ஏப்ரல் 1, 2023 அன்று, இந்தத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் வட்டி விகிதம் 7.2 சதவீதத்தில் இருந்து 7.4 சதவீதமாக மத்திய அரசால் உயர்த்தப்பட்டது.  வட்டி விகித உயர்வுக்குப் பிறகு, இப்போது இந்தத் திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்யப்படும் தொகை விரைவில் உங்களுக்கு இரட்டிப்பாக கிடைக்கும்.

மேலும் படிக்க | Google Pay பயனர்கள் UPI ஆக்டிவேட் செய்ய ஆதாரை பயன்படுத்தலாம்!

கிசான் விகாஸ் பத்ரா திட்டம் என்பது மத்திய அரசால் நடத்தப்படும் மொத்த வைப்புத் திட்டமாகும்.  இந்தத் திட்டத்தில், முதலீட்டாளர் ஒரே நேரத்தில் தொகையை முதலீடு செய்வதன் மூலம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அவர் முதலீடு செய்த பணம் அவருக்கு இரட்டிப்புத் தொகையாக கிடைக்கும்.  இந்த திட்டத்தின் கீழ், எந்த தபால் நிலையத்திற்கும் சென்று கணக்கைத் தொடங்கலாம், இத்திட்டம் கிராமப்புற மக்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க்கது.  இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1,000 மற்றும் அதிகபட்சமாக எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் நீங்கள் முதலீடு செய்து கொள்ளலாம்.  கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தின் வட்டி விகிதத்தை ஏப்ரல் 2023 இல் அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்த பிறகு, இந்த திட்டத்தின் கீழ் வைப்புத்தொகையை இரட்டிப்பாக்குவதற்கான காலம் இப்போது குறைக்கப்பட்டுள்ளது.  முன்னர் இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்த பணம் இரட்டிப்பாக கிடைக்க 120 மாதங்கள் ஆகிவந்த நிலையில், தற்போது கிசான் விகாஸ் பத்ராவின் கீழ் நீங்கள் முதலீடு செய்த பணம் வெறும் 115 மாதங்களில் இரட்டிப்பாக கிடைக்கும்.  நீங்கள் கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் ரூ.10 லட்சத்தை முதலீடு செய்தால், 115 மாதங்களுக்குப் பிறகு முதிர்வுத் தொகையாக உங்களுக்கு மொத்தம் ரூ.20 லட்சம் கிடைக்கும்.  இந்த திட்டத்தின் கீழ், அரசாங்கம் உங்களுக்கு கூட்டு வட்டி விகிதத்தை வழங்குகிறது.

கிசான் விகாஸ் பத்ராவின் கீழ் எந்த தபால் நிலையத்திலும் நீங்கள் கணக்கு தொடங்கி கொள்ளலாம்.  கணக்கை தொடங்கும்போது குறைந்தபட்சம் ரூ.1000 முதலீடு செய்யலாம், மேலும் அதிகபட்ச தொகையை ரூ.100 மடங்குகளில் முதலீடு செய்யலாம்.  இந்த திட்டத்தின் கீழ், இரண்டு அல்லது மூன்று பேர் சேர்ந்து தனி அல்லது கூட்டாக கணக்காக கூட தொடங்கி கொள்ளலாம்.  இந்தத் திட்டத்தின் கீழ், 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் கணக்கை கேவிபியின் கீழ் தொடங்கலாம்.  ஒரு கேவிபி கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால், அத்தகைய சூழ்நிலையில் அவரது நாமினி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை கோரலாம்.  இதற்காக, கணக்கு வைத்திருப்பவரின் இறப்பு சான்றிதழ் மற்றும் யாமினியின் ஐடியை தபால் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.  அதன் பிறகு ஒரு படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்த பின்னர், விரைவில் கணக்கில் உள்ள பணத்தை நாமினி பெற்று கொள்ளலாம்.

மேலும் படிக்க | Indian Railways Rules | ரயில்வே விதிகள்... ‘இந்த’ தவறுகள் செய்தால் கம்பி எண்ண வேண்டி வரும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News