PhonePe வழங்கும் காப்பீட்டு திட்டங்களில் இவ்வளவு நன்மைகளா?

போன்பே எனும் டிஜிட்டல் கட்டண சேவையானது தனது வாடிக்கையாளர்களின் நலனை கருத்திற்கொண்டு பலவகையான காப்பீடு திட்டங்களை வழங்குகிறது.  

Written by - RK Spark | Last Updated : Nov 20, 2022, 10:45 AM IST
  • போன்பே பலவகையான காப்பீடு திட்டங்களை வழங்குகிறது.
  • குறைந்த விலையில் பைக், மெடிகல் இன்சூரன்ஸ் எடுத்து கொள்ளலாம்.
  • 2016ம் ஆண்டு முதல் டிஜிட்டல் கட்டண சேவையை பலர் உபயோகிக்கின்றனர்.
PhonePe வழங்கும் காப்பீட்டு திட்டங்களில் இவ்வளவு நன்மைகளா?  title=

மக்கள் பலரும் இப்போது காப்பீடு குறித்த விழிப்புணர்வை பெற்றுள்ளனர், காப்பீடுகள் குடும்பம் தொடங்கி சொத்து அல்லது மருத்துவம் தொடர்பான எந்த வகையான அவசரநிலையையும் பாதுகாக்க உதவுகிறது,  மக்களை கவரும் வகையில் பல நிறுவனங்கள் பல்வேறு கவர்ச்சிகரமான காப்பீட்டு நன்மைகளையும் வழங்கி வருகின்றன, அதிலும் குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் நன்கு வளர்ச்சியடைந்துள்ள டிஜிட்டல் வாலட்டுகளும் பலவகையான நன்மை பயக்கும் காப்பீடுகளை வழங்கி வருகின்றது.  போன்பே எனும் டிஜிட்டல் கட்டண சேவையானது தனது வாடிக்கையாளர்களின் நலனை கருத்திற்கொண்டு பலவகையான காப்பீடு திட்டங்களை வழங்குகிறது, 2016ம்  ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டிஜிட்டல் கட்டண சேவையை பலர் உபயோகிக்கின்றனர்.  

மேலும் படிக்க | வீட்டில் தங்கம் இருக்கா? இந்த அளவுக்கு மேல் இருந்தால் பறிமுதல் செய்யப்படும்!!

போன்பே செயலி அறிமுகமான அடுத்த ஆண்டிலேயே 10 மில்லியன் டவுன்லோடுகளை பெற்று முன்னணி செயலியாக திகழ்ந்தது.  போன்பே 2020 ஆம் ஆண்டில் ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு, பயணக் காப்பீடு, மோட்டார் காப்பீடு போன்ற பல காப்பீட்டு விருப்பங்களை அறிமுகப்படுத்தியது.  போன்பே வழங்கும் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் பங்களிக்கும் பாலிசிதாரர் 1 வருட பாலிசி காலத்தின் போது இறந்துவிட்டால் அவரது நாமினிக்கு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும், இதில் நீண்ட காலம் பிரீமியம் செலுத்த விரும்பாதவர்கள் 1 ஆண்டு காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்பெறலாம்.  மருத்துவ காப்பீட்டை பொறுத்தவரை பாலிசிதாரர் இந்த திட்டத்தை வாங்கினால் அவர்களுக்கு ஏதேனும் நோய் அல்லது காயம் ஏற்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அவர்களின் மருத்துவ செலவை மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் சரிசெய்யும்.

ஆரோக்ய சஞ்சீவனி மருத்துவ உரிமைகோரல் என்பது இந்திய இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி & டெவலப்மென்ட் அத்தாரிட்டி (ஐஆர்டிஏஐ) மூலம் வடிவமைக்கப்பட்ட ஒரு உடல்நலக் காப்பீட்டுத் திட்டமாகும்.  போன்பே மூலம் வழங்கப்படும் இந்த திட்டத்தை காகிதமில்லா வழிமுறைகள் மூலம் வாங்கலாம், இந்த திட்டத்தில் சிகிச்சைக்கான செலவு, ஐசியூ கட்டணம் மற்றும் ஆம்புலன்ஸ் கட்டணம் போன்றவை அடங்கும்.  இதுமட்டுமல்லாது மேலும் போன்பே செயலி இந்தியாவிற்குள் பயணம் செய்பவர்களின் எதிர்பாராத செலவுகளை பூர்த்தி செய்யும் வகையிலான உள்நாட்டு காப்பீடு, பைக் காப்பீடு மற்றும் காருக்கு காப்பீடு என மோட்டார் வாகனங்களுக்கும் காப்பீட்டு நன்மைகளை வழங்குகிறது.

மேலும் படிக்க | 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி, ஓய்வூதியம், கிராஜுவிட்டி கிடைக்காது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News