PF Withdrawal Rules: உங்களின் PF கணக்கில் உள்ள பணத்தை எடுப்பது எப்படி?

PF Withdrawal Rules: நமது சம்பளத்தில் இருந்து மாதம் மாதம் பிடிக்கப்படும் தொகையை நமது தேவைக்கு ஏற்றால் போல் எடுக்க கொள்ளலாம். இதற்கு பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி அனுமதி தருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Mar 10, 2024, 11:06 AM IST
  • PF பணத்தை எப்போது வேண்டுமானாலும் பெற்று கொள்ளலாம்.
  • இதற்கு தகுந்த சான்றுகள் உடன் இருக்க வேண்டும்.
  • இல்லை என்றால் உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
PF Withdrawal Rules: உங்களின் PF கணக்கில் உள்ள பணத்தை எடுப்பது எப்படி? title=

PF Withdrawal Rules: பணியாளர்களின் ஒவ்வொரு மாத சம்பளத்தில் இருந்தும் ஒரு குறிப்பிட்ட தொகை பிஎப்-காக பிடிக்கப்படுகிறது, இது ஒரு பணியாளர் ஓய்வு பெற்று பிறகு அவரது நிதி தேவையை பூர்த்தி செய்ய உதவுகிறது. இருப்பினும் நமக்கு தேவைப்படும் பட்சத்தில் இந்த பணத்தை முன்கூட்டியே பெற பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் அனுமதி அளிக்கிறது. இருப்பினும் பணத்தை எடுப்பதற்கு தகுந்த காரணங்கள் மற்றும் சில ஆவணங்கள் தேவை. இருப்பினும், கொச்சியில் வசிக்கும் கே.பி.சிவராமன் என்பவர் அவரது பிஎஃப் பணத்தை எடுக்க கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் அலைந்துள்ளார். ஒவ்வொரு முறையும் EPFO அலுவலகத்தில் ஒவ்வொரு காரணத்தை சொல்லி தட்டி கழித்துள்ளனர். சில சமயங்களில் ஏதாவது சாக்கு சொல்லியும் திருப்பி அனுப்பப்பட்டார். 

மேலும் படிக்க | 7th Pay Commission: அடிப்படை சம்பளத்துடன் DA இணைக்கப்படுமா? வெளியான தகவல்!

இறுதியில் 69 வயதில் கேபி சிவராமன் கொச்சியில் உள்ள EPFO ​​அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவர் இறந்த உடனே அவரது பணம் அவரது நாமினிக்கு அனுப்பப்பட்டது.  கொச்சியில் நடந்த இந்த சம்பவம் EPFO-ன் அலட்சியம் குறித்த கேள்விகளை பணியாளர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. சிவராமன் மட்டுமல்ல, இப்படிப்பட்ட பலர் பல வருடங்களாக தங்கள் சொந்தப் பணத்திற்காக EPFO ​​அலுவலகத்திற்கு வந்து கொண்டே இருக்கிறார்கள். இருப்பினும் பலரது PF கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வருகிறது.  இத்தகைய சிரமங்களை எதிர்கொள்வதைத் தவிர்க்க, PF பணத்திற்கு அப்பளை செய்யும் முன்பு தேவையான ஆவணங்களை உடன் வைத்து கொள்ளுங்கள்.

PF கோரிக்கை ஏன் நிராகரிக்கப்படுகிறது?

EPF கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கு எந்த ஒரு வரம்பும் இல்லை. வேலை பார்க்கும் போதே உங்கள் தேவைகளுக்காக PF பணத்தில் சில பகுதியை நீங்கள் எடுத்து கொள்ளலாம்.  அதேசமயம், நீங்கள் வேலையை விட்ட பிறகு இரண்டு மாதங்கள் காத்திருந்து முழு பிஎஃப் தொகையையும் திரும்பப் பெறலாம். மேலும், ஓய்வுக்குப் பிறகு ஒரே நேரத்தில் முழுத் தொகையையும் நீங்கள் பெற்று கொள்ளலாம்.  பல நேரங்களில் பணியாளர்கள் PF பணத்திற்கு அப்பளை செய்யும் போது, அந்த ஆவணங்களில் உள்ள தவறுகள் காரணமாக பிஎஃப் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. பெயர், குடும்ப விவரங்கள், பாஸ்புக்கின் மங்கலான புகைப்படம், காசோலை பெயர் இல்லாதது, வங்கி விவரங்கள், KYC விவரங்கள், பணியில் சேர்ந்த மற்றும் வெளியேறிய தேதியில் உள்ள வேறுபாடு, வயது மற்றும் பிறந்த தேதி போன்ற காரணங்களால் உங்கள் கோரிக்கை EPFO ​​ஆல் நிராகரிக்கப்படலாம். 

ஒரு பிஎஃப் சந்தாதாரர் வேலை அல்லது ஓய்வுக்குப் பிறகு இறந்துவிட்டால், அவருடைய பிஎஃப் பணத்தை எப்படி பெறுவது என்று தெரிந்துகொள்வது முக்கியம். பிஎஃப் கணக்குதாரர் இருந்துவிட்டால், அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரின் பிஎஃப் தொகைக்கு உரிமை கோர முடியும். இதற்கு அவரது குடும்பத்தினர் படிவம் 20ஐ சமர்ப்பிக்க வேண்டும். EPFO அதிகார்வப்பூர்வ இணையதளத்தில் இருந்து இந்தப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பின்னர், அந்த படிவத்தை பூர்த்தி செய்த பிறகு அருகில் உள்ள EPFO ​​அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த படிவத்துடன், இறப்பு சான்றிதழ், உரிமை கோருபவர் சான்றிதழ், பரிந்துரைக்கப்பட்ட படிவம், வாரிசு சான்றிதழ், பாதுகாவலர் சான்றிதழ், வங்கி கணக்கு விவரங்கள் போன்றவற்றை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மேலும் படிக்க | SCSS Interest Rates : சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை அறிவித்தது அரசு.... அதிக வட்டி கிடைக்குமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News