Paytm பயன்படுத்தும் கடைக்காரர்களுக்கான Good News என்ன தெரியுமா... !!!

டிஜிட்டல் கட்டணம் மற்றும் தொழில்நுட்ப தளமான Paytm கடைக்காரர்களுக்கு மிகுந்த நிவாரணம் அளித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 27, 2020, 06:10 PM IST
  • டிஜிட்டல் கட்டணம் மற்றும் தொழில்நுட்ப தளமான Paytm கடைக்காரர்களுக்கு மிகுந்த நிவாரணம் அளித்துள்ளது.
  • பூஜ்ஜியக் கட்டணம் என்னும் நிவாரணம் சுமார் 1.7 கோடி வணிகர்களுக்கு பயனளிக்கும் என்று Paytm கூறியுள்ளது.
  • கடைக்காரர்கள் இனி தங்கள் கவுண்டர்களில் பல QR குறியீடுகளை வைக்க வேண்டியதில்லை.
Paytm பயன்படுத்தும் கடைக்காரர்களுக்கான Good News என்ன தெரியுமா... !!! title=

புதுடெல்லி: டிஜிட்டல் கட்டணம் மற்றும் தொழில்நுட்ப தளமான பேடிஎம் கடைக்காரர்களுக்கு பெரிய நிவாரணம் அளித்துள்ளது. Paytm இன் நெட்வொர்க்குடன் இணைந்த கடைக்காரர்கள் இப்போது Paytm Wallet மற்றும் UPI மற்றும் Rupay அட்டைகள் மூலம் எந்த கட்டணமும் இன்றி, வரம்பு ஏதும் இன்றி கட்டணத்தை பெறலாம்.

Paytm வெளியிட்டுள்ள அறிக்கையில், டிஜிட்டல் கட்டணம் செலுத்துவதற்கு பூஜ்ஜியக் கட்டணம் என்னும் நிவாரணம் சுமார்  1.7 கோடி வணிகர்களுக்கு பயனளிக்கும் என்று கூறியுள்ளது. கடைக்காரர்கள் தங்களின் அனைத்து டிஜிட்டல் பேமெண்டுகளிலும், பூஜ்ஜிய சதவீத கட்டணம் என்பதோடு, அவர்களின் வங்கிக் கணக்குகளில் டைரக்ட் செட்டில்மெண்டையும் பெற முடியும். Paytm உடன் இணைந்த கடைக்காரர்கள் இப்போது Paytm Wallet மூலம் அன்லிமிடெட் அளவில், அதாவது வரம்பு ஏதும் இல்லாமல்ல், பூஜ்ஜிய சதவீத கட்டணத்தில் பெற முடியும்.

ஒரு QR குறியீடு மட்டும் போதும்
கடைக்காரர்கள் இனி தங்கள் கவுண்டர்களில் பல QR குறியீடுகளை வைக்க வேண்டியதில்லை. Paytm Wallet, Paytm UPI அல்லது வேறு எந்த UPI செயலியிலிருந்தும் பணம் பெற அவர்கள் 'ஆல் இன் ஒன் QR' ஐ 'All-In-One QR'  வைத்திருந்தால் போதும்.

ALSO READ | Google Photos tips: புகைப்படங்கள், வீடியோக்களை எவ்வாறு backup செய்வது?

வர்த்தகர்கள் பயனடைவார்கள்
Paytm மூத்த துணைத் தலைவர் குமார் ஆதித்யா, 'நாங்கள் நாடு முழுவதும் எங்கள் வணிக பங்குதாரர்களை வலுப்படுத்துகிறோம். இதனால் அவர்கள் அனைத்து விதமான கட்டணங்களை பற்றிய கவலை இல்லாமல் ஏற்றுக் கொண்டு தங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக வங்கிக் கணக்கில்  செட்டில்மெண்டை பெற முடியும். இதன் மூலம் ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் வர்த்தகர்கள் அதிகம் சேமிக்க உதவும். இப்போது வர்த்தகர்கள் அனைத்து பரிவர்த்தனைகளையும் ஒரே க்யூஆர் மூலம் எந்த வரம்பும் இல்லாமல் செய்ய முடியும்.

போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் ஈ.எம்.ஐ.
Paytm சமீபத்தில் அதன் போஸ்ட்பெய்ட் சேவைகளைப் பயன்படுத்தும் நுகர்வோர் தங்கள் செலவுகளை EMI க்கு மாற்றலாம் என்று அறிவித்தது. இதனால் பட்ஜெட்டை பற்றி கவலைப்படாமல், பொருட்களை வாங்கிக் கொண்டு பின்னர் பணம் செலுத்தலாம்.இது தவிர, நுகர்வோர் Paytm வழங்கும் Buy Now மற்றும் Pay later வசதியையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ALSO READ | Aadhaar -PAN கார்டில் உள்ள பெயரில் வித்தியாசம் உள்ளதா..  சரி செய்வது எப்படி..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News