Organic Farming Business Tips Tamil : இந்தியாவை பொறுத்தவரை, வேலை தேடும் இளைஞர்கள் அதிகமாக இருந்த காலம் மலையேறி, தொழில் முனைவோர்கள் அதிகரிக்கும் காலம் வந்து விட்டது. டீ கடை வைப்பதில் இருந்து, விவசாயம் செய்வது வரை, அனைத்து களத்திலும் தற்போது சுய தொழில் செய்பவர்கள் இறங்கி வருகின்றனர். கையில் பெரிய அளவிற்கு முதலீடு இல்லையென்றால் கூட, இருப்பதை வைத்து தொழில் தொடங்கி, அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் தொழிலை விரிவுபடுத்தி கொள்கின்றனர். தற்போதைய கால சூழலில், மக்கள் எதை அதிகமாக விரும்பி பயன்படுத்துகின்றனரோ, அவர்களை ஈர்க்கும் வகையில் எந்த விஷயம் மார்கெட்டில் இருக்கிறதாே, அதுதான் வியாபார விருத்தி தரும் தொழிலாக இருக்கிறது. அப்படி, ட்ரெண்டிங்களில் இருக்கும் ஒரு தொழில் குறித்து இங்கு பார்ப்போம்.
டிரெண்டில் இருக்கும் தொழில்:
துரித உணவுகள், அதற்கான கடைகள் ட்ரெண்டில் இருந்தது ஒரு காலம். தற்போது மக்கள் பலர் ஆரோக்கியத்தை தேடி ஓடுகின்றனர். எந்த உணவில் இருந்து எந்த நோய் கிளம்புமோ என பயப்படும் இவர்கள், அதிகம் நுகரும் பொருட்கள், இயற்கை விவசாயம் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. அதாவது, எந்த கலப்படமும் இன்றி விவசாயம் செய்யப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் பொருட்களை உபயோகிக்க நினைக்கின்றனர். இந்த தொழில், இந்தியாவை பொறுத்தவரை, குறிப்பாக தமிழ் நாட்டை பொறுத்தவரை அதிகம் லாபம் தருவதாக இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் இதற்கு அதிக மார்கெட்டே இருக்கிறது. இதை செய்வது எப்படி? இதை செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்? இதை செய்ய எவ்வளவு முதலீடு தேவைப்படும்? அனைத்து விவரங்களையும் இங்கு பார்ப்போம்.
இயற்கை விவசாயத்தை ஆரம்பிப்பது எப்படி? How to start Organic Farming Business?
முதலில் சான்றிதழ் பெற வேண்டும்:
ஒருவர், சுயமாக இயற்கை விவசாயம் செய்து அதை தனது வீட்டு பயன்பாட்டிற்காக வைத்துக்கொள்கிறார் என்றால் அதற்கு சான்றிதழ் வாங்க வேண்டியதில்லை. ஆனால், அதை வியாபாரமாக செய்கிறார் என்றால், அதற்கு கண்டிப்பாக சான்றிதழ் பெற வேண்டும். இதை பெறுவதற்கு, வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்த சோதனை மையத்திலும் விண்ணப்பிக்கலாம்.
உங்கள் இயற்கை விவசாய தயாரிப்பின் தரம், பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு மற்றும் சர்வதேச நுகர்வுக்கு ஏற்றதா என்பதை உறுதி செய்வதற்காக இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த சான்றிதழை வாங்கிவிட்டால், “100% Organic” என்ற ஸ்டிக்கரை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
மேலும் படிக்க | ‘இந்த’ தொழில்களை ஆரம்பிக்க பணம் தேவையில்லை! ஆனால் கத்தை கத்தையாக சம்பாதிக்கலாம்..
முதலீடு:
இயற்கை விவசாயத்தை ஆரம்பிப்பதற்கான முதலிடு கொஞ்சம் அதிகமாக தோன்றினாலும், அதிலிருந்து வரும் வருமானம் பெரிதாக இருக்கும்.
>இயற்கை விவசாயத்தை ஆரம்பிக்க நிலத்தை தயார் படுத்தும் செலவு: ரூபாய் 30 முதல் 40 ஆயிரம்
>நடவு செலவு : சுமார் 20 முதல் 30 ஆயிரம்
>உரங்களுக்கு ஆகும் செலவு : சுமார் 40 முதல் 50 ஆயிரம் வரை ஆகலாம்
>நீர்ப்பாசனத்திற்கு ஆகும் செலவு : 3 முதல் 4 ஆயிரம்
>தொழிலாளிகளுக்கு ஆகும் செலவு : 50 முதல் 60 ஆயிரம் (இருக்கும் இடத்தை பொறுத்து மாறலாம்)
>இதர செலவுகள் : 3 முதல் 4 ஆயிரம் வரை ஆகலாம்.
வருமானம்:
இயற்கை விவசாயத்திற்கு இந்தியாவில் அதிக மார்கெட் இருப்பதால் இதற்கு கண்டிப்பாக வியாபார விருத்தியும், வருமானமும் நன்றாகவே இருக்கும். இயற்கை விவசாயம் மூலம் செய்த தக்காளியை ஒரு கிலோவிற்கு சுமார் ரூ.15ற்கு விற்கிறோம் என வைத்துக்கொள்ளுங்கள். ஒரு ஏக்கருக்கு 20 டன் தக்காளி வரை அறுவடை செய்யலாம். அப்படி பார்த்தா, உங்களுக்கு இந்த தக்காளிகள் மூலமாக ரூ.3 லட்சம் வரை வருமானம் கிட்டும். இந்த இயற்கை விவசாய பொருட்களுக்கு வெளிநாட்டிலும் நல்ல மார்கெட் உள்ளதால் அவற்றை நீங்கள் ஏற்றுமதியும் செய்யலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ