கிரெடிட் கார்டு மூலம் யுபிஐ பேமெண்ட் செய்யலாம்; வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்

கிரெடிட் கார்டு மூலம் யுபிஐ பேமெண்ட் செய்யும் வசதியை, குறிப்பிட்ட சில வங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 24, 2023, 06:48 AM IST
  • கிரெடிட் கார்டு மூலம் யுபிஐ பேமெண்ட்
  • 3 வங்கிகளுக்கு அனுமதி அளித்தது ஆர்பிஐ
  • யுபிஐ பரிவர்த்தனை அதிகரிக்கும் வாய்ப்பு
கிரெடிட் கார்டு மூலம் யுபிஐ பேமெண்ட் செய்யலாம்; வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்  title=

இப்போது கிரெடிட் கார்டைக் கொண்டு நீங்கள் எங்கு வேண்டுமானாலும் Gpay, Paytm, PhonePe போன்ற யுபிஐ பேமெண்ட் வழியாக எளிதாக பணம் செலுத்தலாம். ஏனெனில் கிரெடிட் கார்டுகளுடன் UPI ஐ இணைக்க RBI ஒப்புதல் அளித்துள்ளது. இது கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. வியாபார ரீதியாக பார்க்கும்போது கடைக்காரர்களின் விற்பனையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையானது நாட்டில் UPI கட்டண முறைக்கு பெரிய ஊக்கத்தை அளிக்கும். UPI மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இன்டர்நெட் பேங்கிங் மற்றும் பிஓஎஸ் போன்ற வழிகளில் கிரெடிட் கார்டு மூலம் மட்டுமே பணம் செலுத்த முடியும். தற்போதைக்கு மூன்று வங்கிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது. ஆரம்பத்தில், ரூபே கிரெடிட் கார்டுகளை மட்டுமே UPI உடன் இணைக்க RBI அனுமதித்தது. தற்போது, ​​பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் இந்தியன் வங்கி ஆகியவை RBI-ஆல் கிரெடிட் கார்டு யுபிஐ பேமெண்டுக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அதாவது இந்த வங்கிகளின் கிரெடிட் கார்டுகளை தற்போது UPI செலுத்துவதற்கு பயன்படுத்த முடியும்.

மேலும் படிக்க | Credit Card Update: கிரெடிட் - டெபிட் கார்டுகளில் மிகப்பெரிய மாற்றம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

UPI லைட் 

இதனுடன், 'UPI லைட்' NPCI-ஆல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறைந்த மதிப்புள்ள பரிவர்த்தனைகளை துரிதப்படுத்தும். UPI லைட்டின் உதவியுடன், வாடிகைகயாளர்கள் ஆஃப்லைன் முறையில் குறைந்த மதிப்புள்ள பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும். ‘யுபிஐ லைட்’ மூலம் பயனர்கள் முன்பை விட எளிதாக பரிவர்த்தனை செய்ய முடியும் என்று என்பிசிஐ தெரிவித்துள்ளது. 50 சதவீதத்திற்கும் அதிகமான UPI பரிவர்த்தனைகள் ரூ.2,000க்கும் குறைவாகவே உள்ளன என்பதால், இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இது வங்கிகளில் டெபிட் சுமையையும் குறைக்கும்.

கனரா வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, இந்தியன் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ஆகியவை யுபிஐ லைட் பரிவர்த்தனைகளுக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளன. UPI பரிவர்த்தனைகள் NPCI வழங்கிய தகவலின்படி, ஆகஸ்ட் 2022-ல், UPI 6.58 பில்லியன் பரிவர்த்தனைகளை செய்துள்ளது. இந்த காலகட்டத்தில் அதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.10.73 லட்சம் கோடி.

மேலும் படிக்க | SBI கிரெடிட் கார்டு வைத்துள்ளவர்களுக்கு ரூ.6 ஆயிரம்! நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News