இனி உத்தரபிரதேசத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து 5 கிலோ எடையுள்ள சிறிய FTL (Free Trade LPG) சிலிண்டர்கள் கிடைக்கும். 'சோட்டு' என்ற பிராண்டில் கிடைக்கும் இந்த சிலிண்டர்கள், நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்யப்படும். மேலும் ரேஷன் கடைகளிலும் நுகர்வோர் இந்த சிலிண்டர்களை நிரப்பிக்கொள்ளலாம். இதற்காக, எல்பிஜி விநியோகஸ்தர்கள், ரேஷன் விற்பனையாளர்களுடன் ஒப்பந்தம் செய்து, அவர்களை விற்பனை மையமாக நியமிப்பார்கள். ரேஷன் கடைக்காரர்கள் பாயின்ட் ஆஃப் சேல் மூலம் நுகர்வோருக்கு அனுமதிக்கப்பட்ட சில்லறை விலையில் சிலிண்டர்களை வழங்குவார்கள். அத்துடன் ரேஷன் கடைக்காரர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்த மார்ஜின் பணத்தை டிவிடெண்ட் வடிவில் பெறுவார்கள்.
100 கிலோவுக்கு மேல் ஸ்டாக் வைத்துக்கொள்ள முடியாது
அரசின் ஒப்புதலுக்குப் பிறகு, உணவு ஆணையர் மார்கண்டே ஷாஹி, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு இது தொடர்பான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். எண்ணெய் நிறுவனத்தின் ஃபீல்ட் அதிகாரியின் பரிந்துரையின் பின்னரே எரிவாயு விநியோகஸ்தர்கள் எல்பிஜி விநியோகத்திற்காக ரேஷன் கடைக்காரர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல் எந்த ரேஷன் கடையிலும் ஒரே நேரத்தில் 100 கிலோவுக்கு மேல் ஸ்டாக் வைத்துக்கொள்ள முடியாது.
மேலும் படிக்க | பான் கார்டு வைத்திருப்போர் கவனதிற்கு! இதை உடனடியாக செய்யுங்கள்!
முதல் முறை சிலிண்டரை பெற அடையாள அட்டை கட்டாயம் அவசியம்
உணவுப்பொருள் கூடுதல் ஆணையர் அனில்குமார் துபே கூறியதாவது: ரேஷன் கடைக்காரர் முதல் முறையாக நுகர்வோருக்கு சிலிண்டர் பெறும்போது, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை, ஆதார் அட்டை, வங்கி பாஸ்புக், பணியாளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், மாணவர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இதன் அடிப்படையில் ரேஷன் கடைக்காரர்கள் மின்னணு எடை இயந்திரம் மூலம் நுகர்வோருக்கு ஐந்து கிலோ கேஸ் சிலிண்டரை வழங்குவார்கள்.
ரேஷன் கடைக்காரர்கள் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்
FTL சிலிண்டர்கள் தொடர்பாக தேவையான விதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாட்டு உத்தரவுகளை ரேஷன் கடைக்காரர்கள் கட்டாயமாக கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். அவர்கள் விற்பனை செய்யும் இடத்தில் குறைந்தபட்சம் 4.5 கிலோ கொள்ளளவு கொண்ட இரண்டு டிசிபி வகை தீயை அணைக்கும் கருவிகளை வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் சிலிண்டர் சேமிப்பு தளத்தில் 'புகைபிடித்தல் தடை' என்ற போஸ்டரையும் வைக்கப்பட வேண்டும்.
மேலும் படிக்க | mAadhaar பயன்படுத்த பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் தேவையா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ