EPFO Wage Ceiling Hike: PF உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். சம்பள வகுப்பினருக்கு மிக விரைவில் அரசு நல்ல செய்தியை அளிக்கக்கூடும். ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மற்றும் ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS) ஆகியவற்றில் டெபாசிட் செய்யப்படும் தொகையை அதிகரிக்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இது குறித்து குறிப்பிட்டதாக பைனான்சியல் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தற்போது இபிஎஃப் உறுப்பினர்களின் (EPF Members) சம்பளத்தில் இருந்து EPF மற்றும் EPS இல் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகை டெபாசிட் செய்யப்படுகிறது. இன்னும் சில நாட்களில் இதற்கான வரம்பு அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஊழியர் வருங்கால வைப்பு நிதியின் கீழ் ரூ.15,000 என்ற வரம்பு உள்ளது.
EPFO மற்றும் EPS இல் அதிக பணம் டெபாசிட் செய்யப்படும்
இதற்கு முன்னர் EPFO மற்றும் EPS இல் டெபாசிட் செய்யப்படும் தொகையின் வரம்பு ரூ.6500 ஆக இருந்தது. 2014-ம் ஆண்டு இது ரூ.15000 ஆக உயர்த்தப்பட்டது. அதன்பிறகு அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தற்போது இந்த வரம்பை 21,000 ரூபாயாக உயர்த்த அரசு பரிசீலித்து வருகிறது. இந்த வரம்பை உயர்த்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்ககள் இருந்து வருகின்றன. இந்த வரம்பு உயர்த்தப்பட்டால், இபிஎஃ;ப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) முன்பை விட அதிக பணத்தை EPF மற்றும் EPS இல் டெபாசிட் செய்ய முடியும். புதிய விதி அமலுக்கு வந்த பிறகு, கோடிக்கணக்கான சம்பளம் வகுப்பினர் (Salaried Class) இதனால் பயனடைவார்கள். பணியாளர்கள் ஓய்வு பெற்ற பிறகு பெறும் ஓய்வூதியத்திலும் இதன் தாக்கம் இருக்கும்.
தற்போதுள்ள EPFO விதிகள் என்ன?
- தற்போது, ஒரு பணியாளரின் மாதச் சம்பளம் ரூ. 15,000 அல்லது அதற்கு மேல் இருந்தால், அவர் மாதா மாதம் தனது இபிஎஃப் கணக்கில் (EPF Account) 12% தொகையை டெபாசிட் செய்கிறார்.
- அதே அளவு தொகையை நிறுவனமும் அவரது கணக்கில் டெபாசிட் செய்கிறது.
- எனினும், முதலாளியின் பங்களிப்பில் 3.67% இபிஎஃப் கணக்கிலும் 8.33% இபிஎஸ் கணக்கிலும் செல்கின்றன.
- இந்த நிலையில், ரூ.15,000 சம்பளம் பெறும் ஊழியர் ஒவ்வொரு மாதமும் 12% அதாவது ரூ.1800 -ஐ தனது EPF கணக்கில் டெபாசிட் செய்கிறார். இது தவிர, அவரது நிறுவனமும் சம்பளத்தில் 12% அதாவது ரூ.1800 -ஐ டெபாசிட் செய்யும். ஆனால் இந்தப் பணம் இபிஎப், இபிஎஸ் என இரு பகுதிகளாகப் பிரிக்கப்படும். இதில் ரூ.1250 இபிஎஸ்-க்கும், மீதி ரூ.550 இபிஎஃப்-க்கும் செல்லும்.
EPFO புதிய வரம்பு என்னவாக இருக்கும்?
EPF-ல் டெபாசிட் செய்வதற்கான வரம்பை 15,000 ரூபாயில் இருந்து 21,000 ரூபாயாக அரசாங்கம் உயர்த்தினால், இபிஎஃப் கணக்கீட்டில் மாற்றம் ஏற்படும். ரூ.21,000 சம்பளத்தில், ஒரு ஊழியரின் இபிஎஃப் தொகையாக (EPF Amount) ஒவ்வொரு மாதமும் 12 சதவீதம், அதாவது ரூ.2,520கழிக்கப்படும். இது தவிர, நிறுவனம் வழங்கும் அதே அளவு பங்களிப்பில் ரூ.771 இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படும், மீதமுள்ள ரூ.1,749 இபிஎஸ் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.
ஊதிய உச்சவரம்பை அதிகரிப்பதால் கிடைக்கும் பயன்கள் என்ன?
- ஒரு ஊழியர் தனது 23 வயதில் EPF-ல் பணத்தை டெபாசிட் செய்ய ஆரம்பித்து 35 வருடங்கள் தொடர்ந்து டெபாசிட் செய்தால், அடிப்படைச் சம்பளமான ரூ.15,000-ல், ஓய்வுபெறும் போது அவருக்கு மொத்தம் ரூ.71.55 லட்சம் கிடைக்கும்.
- இதில் வட்டியில் மட்டும் ரூ.60.84 லட்சம் கிடைக்கும்.
- அதேசமயம் ஊழியர் டெபாசிட் செய்த தொகை ரூ.10.71 லட்சமாக இருக்கும்.
- இந்த கணக்கீடு தற்போதுள்ள ஆண்டு வட்டி 8.25% -இன் அடிப்படையிலானது.
- எனினும், இபிஎஃப் -இல் டெபாசிட் செய்யப்படும் பணத்தின் வரம்பை அரசாங்கம் ரூ.15,000-லிருந்து ரூ.21,000 ஆக உயர்த்தினால், ஊழியர்களுக்கு இபிஎஃப் தொகையாக மொத்தம் ரூ.1 கோடி கிடைக்கும்.
- இதில் ஊழியர் டெபாசிட் செய்த தொகை ரூ.15 லட்சமாக இருக்கும்.
- மீதமுள்ள ரூ.85 லட்சம் வட்டித் தொகை மூலம் கிடைக்கும்.
அதாவது, ஊதிய வரம்பு உயர்த்தப்பட்டால், ஊழியர்கள் பணி ஓய்வின் போது முன்பை விட ரூ.28.45 லட்சம் கூடுதலாக பெறுவார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ