7th Pay Commission: ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்.. டிஏ ஹைக்குடன் இதுவும் உயரும்

DA Hike Latest Update: இந்த முறை அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரித்தால், ஜூலை 2024 முதல் பொருந்தக்கூடிய கொடுப்பனவு 50 சதவீதத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 18, 2023, 12:49 PM IST
  • 42 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது.
  • அகவிலைப்படி உயர்வின் முழுமையான கணக்கீடு.
  • அகில இந்திய சிபிஐ 3.3 புள்ளிகள் அதிகரித்து 139.7 புள்ளிகளை எட்டியுள்ளது.
7th Pay Commission: ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்.. டிஏ ஹைக்குடன் இதுவும் உயரும் title=

7வது சம்பள கமிஷன் சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மோடி அரசு (Modi Government) விரைவில் ஒரு நல்ல செய்தியை வழங்க உள்ளது. அதன்படி கூடிய விரைவில் மோடி அரசு அகவிலைப்படியை உயர்த்தி விரைவில் அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த முறை அகவிலைப்படி அதிகரிப்பு (DA Hike) ஜூலை 1, 2023 முதலே அமல்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இம்முறை நவராத்திரி பண்டிகைக்கு முன்னதாக அகவிலைப்படி உயர்வை அரசு அறிவிக்கலாம் என ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இது குறித்து அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

42 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது:
தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இம்முறை அகவிலைப்படி 42 முதல் 45 சதவீதமாக அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. அதன்படி இம்முறை அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏழாவது ஊதியக்குழு விதிகளின்படி (7th Pay Commission), 50 சதவீதம் அகவிலைப்படி எட்டும் போது, அடிப்படை சம்பளத்தில் (Salary Hike) இணைக்கப்படும். அந்த வகையில் இந்த முறை அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரித்தால், ஜூலை 2024 முதல் பொருந்தக்கூடிய கொடுப்பனவு 50 சதவீதத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாருங்கள் இப்போது 3 சதவிகிதம் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு செம என்ஜாய்மெண்ட்.. ஜாக்பாட் அறிவிப்பு வெளியிட்ட ரயில்வே

அகவிலைப்படி உயர்வின் முழுமையான கணக்கீடு:
1.) ஒரு ஊழியரின் சம்பளம் மாதம் ரூ.50,000 மற்றும் அவரது அடிப்படை சம்பளம் ரூ.25,000 எனில்.
2.) அத்தகைய பணியாளர் தற்போது ஒவ்வொரு மாதமும் ரூ.10,500 அகவிலைப்படி பெறுவார்.
3.) 3 சதவீத உயர்வுக்குப் பிறகு, பணியாளரின் அகவிலைப்படி ரூ.11,250 ஆக உயரும்.
4.) இந்த வழியில் சம்பளம் ஒவ்வொரு மாதமும் ரூ.750 (ஆண்டுக்கு ரூ.9000) அதிகரிக்கும்.
5.) அத்தகைய சூழ்நிலையில், ஒரு ஊழியரின் சம்பளம் மாதம் ரூ 50000 என்றால், அவர் ஆண்டுக்கு ரூ 9000 பலன் பெறுவார். அதன்படி, ஓய்வூதியர்களும் பயனடைவார்கள்.

ஜூலை 2023 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, அகில இந்திய சிபிஐ (AICPI Index) 3.3 புள்ளிகள் அதிகரித்து 139.7 புள்ளிகளை எட்டியுள்ளது. அகவிலைப்படி உயர்வு குறித்து, அகில இந்திய ரயில்வே மேன் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சிவகோபால் மிஸ்ரா கூறியதாவது: அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த வேண்டும் என்று கூட்டமைப்பு கோருகிறது. ஆனால் இம்முறை அரசாங்கம் அகவிலைப்படியை 3 சதவீதம் தான் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார். முன்னதாக கடந்த 2006 ஆம் ஆண்டில், மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DA (அகவிலைப்படி) மற்றும் DR (அகவிலை நிவாரணம்) கணக்கிடுவதற்கான சூத்திரம் மத்திய அரசால் மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஏ உயர்வு எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
தொழிலாளர் பணியகம் ஒவ்வொரு மாதமும் வெளியிடும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலை நிவாரணம் ஆகியவை நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த தொழிலாளர் பணியகம் தொழிலாளர் அமைச்சகத்தின் ஒரு பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | எலி பிடிக்க செலவு இவ்வளவு ஆகுமா? 70 லட்ச ரூபாய் ஓவர்! உண்மை என்னன்னா...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News