Maruti Suzuki: 1.81 லட்சம் கார்களை திரும்பப் பெறும் மாருதி நிறுவனம்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 1.81 லட்சம் கார்களை திரும்பப் பெற மாருதி சுசூகி நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 4, 2021, 02:00 PM IST
Maruti Suzuki: 1.81 லட்சம் கார்களை திரும்பப் பெறும் மாருதி நிறுவனம் title=

புதுடெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மாருதி சுசூகி. இந்த நிறுவனம் தனது ஒரு லட்சத்து 80 ஆயிரம் யூனிட்களை திரும்ப பெற்றுக்கொள்வதாக ஒரு முக்கிய அறிவிப்பை பிறப்பித்துள்ளது. இது இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாருதி சுசுகியின் மிகப்பெரிய ரீகால் ஆகும். பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய தவறுகளை கண்டறிந்து அதனை சரிசெய்யவே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி முதல் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி வரை விற்கப்பட்ட கார்களின் மோட்டார் ஜெனரேட்டரில் கோளாறு கண்டறியப்பட்டிருப்பதாக மாருதி நிறுவனம் (Maruti Suzuki) தெரிவித்துள்ளது. அதன்படி மாருதி சுசுகி சியாஸ் (Ciaz), எஸ்-கிராஸ் (S-Cross), விட்டாரா ப்ரெஸ்ஸா (Vitara Brezza), எர்டிகா (Ertiga) மற்றும் எக்ஸ்எல் 6 (XL6) ஆகியவற்றின் பெட்ரோல் மாதிரிகள் கார்களை திரும்பப் பெற்று பழுதுள்ள பாகம் புதிதாக மாற்றித்தரப்படும் என மாருதி தெரிவித்துள்ளது.

ALSO READ | மாருதி கார்களின் விலை அதிகரிக்கவுள்ளது: எவ்வளவு? எப்போது? விவரம் உள்ளே

இதற்கிடையில் பழுதடைந்த பாகங்களை மாற்றுவதற்கான செயல்முறை நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி நவம்பர் மாதம் வரை, மேற்கண்ட குறிப்பிட்ட வாகனங்களின் உரிமையாளர்கள், தண்ணீர் தேங்கிய பகுதிகளில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும், வாகனத்தின் மின் மற்றும் மின்னணு பாகங்களில் நேரடியாக தண்ணீர் தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் மாருதி சுசுகி கேட்டுக்கொண்டுள்ளது.

உங்கள் வாகனம் இந்த பட்டியலில் உள்ளதா
உங்கள் வாகனம் இந்த பட்டியலில் உள்ளதா இல்லையா என்பதை சரிபார்க்க, மாருதி சுசுகி இந்தியாவின் இணையதளங்களில் உள்ள ‘Imp Customer Info’ பிரிவுக்குச் சென்று வாகனத்தின் chassis எண்ணை வழங்கலாம். நீங்கள் Ertiga அல்லது Vitara Brezza வைத்திருந்தால், www.marutisuzuki.com இல் சரிபார்க்கலாம். Ciaz, S-Cross அல்லது XL6 உரிமையாளர்கள் www.nexaexperience.com ஐப் பார்வையிடலாம்.

ALSO READ | Maruti CNG Car: விரைவில் வெளியாகிறது மாருதி சிஎன்ஜி புதிய கார்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News