கலைஞர் உரிமைத் தொகை பெறும் பெண்களுக்கு 7.5% வட்டி தரும் மலையரசி தொடர் வைப்பு திட்டம்

Malayarasi Recurring Deposit Scheme For Women: கலைஞர் மகளிர் உரிமை திட்டப் பயனாளிகளின் நலனுக்காக மலையரசி தொடர் வைப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 24, 2023, 03:05 PM IST
  • மலை மாவட்ட மங்கையருக்கு மகிழ்ச்சி தரும் திட்டம்
  • மலையரசி தொடர் வைப்பு திட்டம்
  • கலைஞர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளுக்கு ஜாக்பாட்
கலைஞர் உரிமைத் தொகை பெறும் பெண்களுக்கு 7.5% வட்டி தரும் மலையரசி தொடர் வைப்பு திட்டம் title=

பெண்களுக்கு இது நல்ல காலம் தான். கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளுக்கு பல நல்ல செய்திகள் காத்துக் கொண்டிருக்கிறது என்பதால், பெண்களுக்கு இது நல்ல காலம் தான். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பான மேலும் சில அறிவிப்புகள் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது. என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் ஒரு அம்சமாக, நீலகிரி மாவட்டத்தில் "மலையரசி தொடர் வைப்பு" திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் மகளிர் உரிமை தொகையை சேமித்தால் வட்டி அதிகமாக கிடைக்கும் என்று வங்கி  அதிகாரிகள் தெரிவித்தனர்.

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ், கடந்த செப்டம்பர் 15ம் தேதி முதல் திட்டப் பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் மாதந்தோறும் 1000 ரூபாய் தமிழ்நாடு அரசு (TN Government) செலுத்துகிறது. தங்களுக்கு மாநில அரசு தரும் பணத்தை, அன்றாட செலவுகளுக்கு பல பெண்கள் பயன்படுத்தினாலும், வேறு சிலர் மகளிர் உரிமை தொகையை எடுக்காமல் வங்கியில் வைத்தால் எதிர்கால தேவைகளுக்கு உதவும் என்று சேமிப்பு கணக்குகளில் வைக்கின்றனர்.

சேமிப்பு கணக்குகளுக்கு வழங்கப்படும் 3 முதல் 4 சதவீதம் வட்டி என்பது குறைவானது என்பதால், கலைஞர் மகளிர் உரிமை திட்டப் பயனாளிகளின் நலனுக்காக நீலகிரி மத்திய கூட்டுறவு வங்கி ரெகரிங் டெபாசிட் எனப்படும் தொடர் வைப்பு திட்டம் ஒன்றைத் தொடங்கி வைத்துள்ளது.

மேலும் படிக்க | குடும்பத் தலைவிகளுக்கு சர்ப்ரைஸ் -  மாதம் 1000 ரூபாய் - அரசின் திடீர் அறிவிப்பு

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இன்று கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளுக்காக "மலையரசி தொடர் வைப்பு" திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ், தங்களுக்கு கிடைக்கும் மகளிர் உரிமை தொகையை பெண்கள் சேமித்தால் அதிக வட்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில், மக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக தொடங்கப்பட்டுள்ள"மலையரசி தொடர் வைப்பு திட்டம்", பயனாளிகளுக்கு தொடர் வைப்பு திட்டத்தின் கீழ், ஒரு வருடம் முதல் 5 வருடம் வரையிலான சேமிப்புத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. சேமிப்புக் கணக்கில் 3 முதல் 4 சதவீதம் வட்டி மட்டுமே கிடைக்கும் என்ற நிலையில், மலையரசி தொடர் வைப்புத் திட்டம் என்ற ரெகரிங் டெபாசிட் திட்டத்தில் பணம் சேமித்தால் 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படும். 

மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமை தோகை பெற மேலும் 7.35 லட்சம் பேர் தேர்வு? லேட்டஸ்ட் அப்டேட்

நீலகிரி மாவட்ட பெண்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் மலையரசி தொடர் வைப்புத் திட்டத்தை உருவாக்க மூலக் காரணமான கலைஞர் மகளிர் உரிமை திட்டம் எப்படி உருவானது? 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வாக்குறுதியாக திமுக அரசு கொடுத்த உறுதிமொழி அது. திமுக ஆட்சிக்கு வந்ததும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் அரசு சார்பில் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. 

தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்ற இரண்டாண்டுகளுக்குப் பிறகு, மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை திட்டம்  கடந்த செப்டம்பர் மாதம் அமல்படுத்தப்பட்டது. இப்போது, அந்த பணத்தை சேமித்தால், தங்கள் எதிர்கால கனவுகளை நிறைவேற்ற அதிக வட்டி கிடைக்கும் திட்டத்தை நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அறிவித்துள்ளது மலை மாவட்ட மங்கையருக்கு மகிழ்ச்சி தருவதாக அமைந்துள்ளது.

மேலும் படிக்க | மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேலும் தளர்வுகள்? சூப்பர் ஐடியா செய்யும் தமிழ்நாடு அரசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News