எல்ஐசி நியூ ஜீவன் சாந்தி திட்டம் 858 என்பது ஒரு பிரீமியம் திட்டமாகும், இதில் பாலிசிதாரர் சிங்கிள் அல்லது ஜாயிண்ட் வாழ்க்கைக்கான ஆப்ஷனை தேர்வு செய்யும் விருப்பமும் வழங்கப்படுகிறது. எல்ஐசி நியூ ஜீவன் சாந்திக்கான (திட்டம் எண்.858) வருடாந்திர விகிதங்கள் ஜனவரி 05, 2023 முதல் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட பாலிசி விலை மற்றும் ஒத்திவைப்பு காலத்தின் அடிப்படையில் ரூ.1000 கொள்முதல் விலைக்கு ரூ.3 முதல் ரூ.9.75 வரை இருக்கும். பெரியளவில் வருமானத்தை பெற வேண்டும் என நினைப்பவர்களுக்கும், முதலீட்டிற்காக அதிக பணம் வைத்திருப்பவர்களுக்கு இந்த திட்டம் ஏற்றது. புதிய ஜீவன் சாந்தி திட்டத்தின் கீழ் வருடாந்திர தொகையை எல்ஐசியின் இணையதளங்களில் உள்ள கால்குலேட்டர் மூலமாகவோ அல்லது எல்ஐசி ஆப்ஸ் மூலமாகவோ கணக்கிடலாம்.
மேலும் படிக்க | Budget 2023: ரியல் எஸ்டேட் துறையினரின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?
இந்த எல்ஐசி நியூ ஜீவன் சாந்தி திட்டத்தில் பங்களிப்பதன் மூலமாக இளம் தொழில் வல்லுநர்கள் முன்னரே ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ளலாம். ஒற்றை பிரீமியம் ரூ.10516528 (பாலிசி விலை ரூ. 10330578 கோடி மற்றும் ரூ. 185950 ஜிஎஸ்டி) ஒரு வாழ்க்கைக்கு 12 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட ஆண்டுத் தொகையுடன் ரூ.1.08 லட்சம் மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறலாம். இந்த திட்டத்தில் குறைந்தபட்ச பாலிசி விலை ரூ.1,50,000 மற்றும் அதிகபட்ச பாலிசி விலைக்கு வரம்பு இல்லை. இந்த திட்டத்தில் சேர்வதற்கான குறைந்தபட்ச வயது 30 மற்றும் அதிகபட்ச வயது 79 ஆகும். குறைந்தபட்ச வெஸ்டிங் வயது 31 வயது மற்றும் அதிகபட்ச வெஸ்டிங் வயது 80 ஆகும்.
மேலும் இந்த திட்டத்தில் உங்களுக்கு வருடாந்திர, அரையாண்டு, காலாண்டு மற்றும் மாதாந்திரம் என ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுத்தொகை நிலுவைத் தொகையாக செலுத்தப்படும். ஆண்டுத்தொகை வழங்கப்பட்ட நாளிலிருந்து 1 வருடம், 6 மாதங்கள், 3 மாதங்கள் மற்றும் 1 மாதத்திற்குப் பிறகு வழங்கப்படும். இந்த திட்டத்தில் நீங்கள் கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் டெபாசிட் செய்யவேண்டும், இந்த திட்டத்தின் முதிர்விற்கு பிறகு உங்களுக்கு ஒரு பெரிய தொகை வருமானமாக கிடைக்கும்.
மேலும் படிக்க | Budget 2023-24: இந்த பட்ஜெட்டில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ