எல்பிஜி கேஸ் சிலிண்டர் மானியம்: எல்பிஜி இணைப்புதாரர்களின் கணக்கில் பல கோடி ரூபாய் மதிப்பிலான எல்பிஜி சிலிண்டர் மானியம் அரசால் மாற்றப்பட்டுள்ளது. சமீபத்தில், ராஜஸ்தானின் அசோக் கெலாட் அரசு சார்பில், 'பிஎம் உஜ்வாலா யோஜனா' பயனாளிகளுக்கு, 500 ரூபாய்க்கு எல்பிஜி சிலிண்டர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. புதிய நிதியாண்டு முதல் அதாவது ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்த திட்டத்தை அரசு அமல்படுத்தியது. இதற்காக இந்திராகாந்தி கேஸ் சிலிண்டர் மானிய திட்டம் மாநில அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கேஸ் சிலிண்டர்கள் பயனாளிகளுக்கு வெறும் 500 ரூபாய்க்கு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
14 லட்சம் பயனாளிகள் பணம் பெற்றுள்ளனர்
முதல்வர் அசோக் கெலாட் முதல் கட்ட 'இந்திரா காந்தி கேஸ் சிலிண்டர் மானியத் திட்டம்' பயனாளிகள் விழா நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். இதன் கீழ், 14 லட்சம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு, 60 கோடி ரூபாயை முதல்வர் அசோக் கெலாட் மாற்றியுள்ளார். மேலும் இந்த திட்டத்தின் கீழ், ஒரு வருடத்தில் 12 சிலிண்டர்கள் ரூபாய் 500 வீதம் வழங்கப்படும். இதற்குப் பிறகு, பயனாளி சிலிண்டரைப் பெற ஒரிஜினல் விலையை செலுத்த வேண்டும்.
சிலிண்டருக்கு ரூ.500 என்ற வாக்குறுதியை நிறைவேற்றினார் ராஜஸ்தான் முதல்வர்
நாட்டிலேயே மலிவான சிலிண்டரை அதாவது 500 ரூபாய்க்கு தருவதாக வாக்குறுதி அளித்ததை வைத்து அசோக் கெலாட் இந்திரா காந்தி காஸ் சிலிண்டர் மானியத் திட்டத்தை பயனாளிகள் விழாவில் அறிமுகப்படுத்தினார். மேலும் 14 லட்சம் எல்பிஜி நுகர்வோரின் கணக்குகளுக்கு மானியத் தொகையை மாற்றினார். அத்துடன் 76 இலட்சம் ஆதரவற்ற குடும்பங்களுக்கு நன்மைகளை வழங்குவதே எங்களின் நோக்கமாகும் முதல்வர் தெரிவித்தார்.
இந்த திட்டம் ஏப்ரல் 1, 2023 முதல் தொடங்கப்பட்டது
உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என ராஜஸ்தான் அரசு உறுதியளித்து இருந்தது. அதன்படி இந்தத் திட்டம் கடந்த 2023 ஏப்ரல் 1 முதல் அரசால் தொடங்கப்பட்டது. எனவே நீங்கள் ராஜஸ்தானில் வசிப்பவராக இருந்து, உங்கள் கணக்கில் மானியப் பணம் வரவில்லை என்றால், உடனடியாக கணக்கை ஆதாருடன் இணைத்து, மானியத் தொகை உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக பெற்றுக்கொள்ளுங்கள்.
சிலிண்டர் முன்பதிவு மற்றும் டெலிவரி செய்யும் போது சிலிண்டரின் முழு விலையையும் செலுத்த வேண்டும். பின்னர், சிலிண்டர் ஒன்றுக்கு 500 ரூபாய்க்கு மேல் பணம் இருந்தால், மானியப் பணத்தை அனைத்து பயனாளிகளுக்கும் ஒரே நேரத்தில் அரசு திருப்பித் தரும். கேஸ் சிலிண்டரின் விலை ரூ.1103 என்றால், டெலிவரி நிறுவனத்திடம் முழுத் தொகையையும் செலுத்த வேண்டும். ஆனால் பின்னர் மாநில அரசு உங்களுக்கு ரூ.500க்கு மேல் அதாவது ரூ.603 மானியமாகத் தொகையை உங்களின் கணக்கில் அனுப்பி வைக்கும். இந்தப் பணம் உங்கள் ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மட்டுமே அனுப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ