நீங்களும் அடிக்கடி ரயிலில் பயணம் செய்வீர்கள் என்றால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஊடக அறிக்கைகளின்படி, இந்திய ரயில்வே வாரியம் மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பை மாற்றியமைத்து, சலுகையை குறிப்பிட்ட வகை டிக்கெட்டுகளுக்கு மட்டுமே கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளது. முன்னதாக, அனைத்து வகை மூத்த குடிமக்களுக்கும் இந்தச் சலுகை வழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அறிக்கைகளின்படி, 70 வயது அல்லது அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு பொது மற்றும் ஸ்லீப்பர் வகுப்பிற்கு சலுகை வழங்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. அத்துடன் மூத்த குடிமக்களுக்கான மானியத்தைத் தக்க வைத்துக் கொண்டு, இந்தச் சலுகைகளின் விலையைக் குறைக்கும் யோசனை செய்துள்ளதாக ரயில்வே கூறி வருகின்றது. இருப்பினும் இது தொடர்பாக எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் ரயில்வே இதுவரை வழங்கவில்லை.
மேலும் படிக்க | மாற்றுத்திறனாளிகளின் மகிழ்ச்சியான பயணத்திற்கு... ரயில்வே அளிக்கும் முன்னுரிமைகள்!
முன்பு இவ்வளவு தள்ளுபடி வழங்கப்பட்டது
2020 இல் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலுக்கு முன்பு, 58 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண் பயணிகளுக்கும், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்களுக்கும் மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டன.
மேலும் சலுகைப் பற்றி பேசுகையில், அனைத்து வகுப்புகளிலும் பெண்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடியும், ஆண்களுக்கு 40 சதவீத சலுகையும் ரயில்வேவால் அளிக்கப்பட்டது. தொற்றுநோய் பரவலுக்கு பிறகு, இந்திய ரயில்வே இந்த சலுகை கட்டணங்களை நிறுத்தியது.
எந்த வகுப்பில் தள்ளுபடி வழங்கப்படும்?
லோக்சபாவில், ரயில்வே அமைச்சரிடம், ரயில்வே சலுகை குறித்து, ரயில் டிக்கெட்டுகளில் தள்ளுபடி செய்யும் வசதியை, ரயில்வே மீண்டும் வழங்குமா என, கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: 2019-20ம் ஆண்டில் பயணிகள் டிக்கெட்டுகளுக்கு ரயில்வே 59,837 கோடி ரூபாய் மானியமாக வழங்கியுள்ளது. இது தவிர, ஸ்லிப்பர் மற்றும் மூன்றாவது ஏசியில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட்டில் சலுகை வழங்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது என்றார்.
மேலும் படிக்க | கோடை விடுமுறை... மக்கள் வசதிக்காக ரயில்வேயின் சிறப்பு சேவைகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ