அரசாங்கம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது தொடர்பான விதிகளில் சில முக்கிய மாற்றங்களை செய்திருக்கிறது. இந்த ஆண்டின் ஏப்ரல் மதம் 21ம் தேதியிலிருந்து அரசாங்கம் வருமான வரி விதிகளை திருத்தியமைத்துள்ளது. பலதரப்பு மக்களையும் வருமான வரி தாக்கல் செய்யும் வகையில் மாற்றம் செய்ய்யப்பட்டுள்ளது, அதாவது இப்போது வெவ்வேறு வருமானக் குழுக்கள் மற்றும் வருமானம் உள்ளவர்களும் வருமான வரி தாக்கல் செய்யவேண்டும். ஒரு நிதியாண்டில் வரி விலக்கு (டிடிஎஸ்) மற்றும் வரி வசூல் (டிசிஎஸ்) ரூ.25,000 அல்லது அதற்கு மேல் இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் ஐடிஆர் தாக்கல் செய்வது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | 7th Pay Commission: 18 மாத அரியர் தொகை கிடைக்கவுள்ளதா? சமீபத்திய அப்டேட் இதோ
ஐடிஆர் தாக்கல் குறித்து அரசாங்கத்தின் புதிய விதியின்படி, ஒரு நபரின் வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குக் குறைவாக இருந்தாலும், டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் மூலம் வருமானம் ரூ.25,000 அல்லது அதற்கும் அதிகமாக அவருக்கு கிடைக்கும்பட்சத்தில் அந்த நபர் இனிமேல் ஐடிஆர் தாக்கல் வேண்டும். மூத்த குடிமக்களுக்கு டிடிஎஸ் அல்லது டிசிஎஸ் ரூ.50,000 மேல் இருந்தால் அவர்களுக்கும் அரசாங்கத்தின் இந்த புதிய விதி பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், "சிபிடிடிடி அறிவிப்பு எண் 37/2022 மூலம் ஒரு புதிய விதி 12ABயை அறிவித்துள்ளது, இதன்படி ஒரு நபரின் வருமானம் விலக்கு வரம்பை விட குறைவாக இருந்தாலும் அந்த நபர் ஐடிஆர் தாக்கல் செய்யவேண்டும் என்று கூறியுள்ளது.
மேலும் வங்கியின் சேமிப்பு கணக்குகளில் ரூ.50 லட்சம் அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்தவர்களும் இனிமேல் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாது ஆண்டு வருமானம் ரூ.60 லட்சத்துக்கும் அதிகமாகவும், தொழில் ரசீது ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாகவும் உள்ள வர்த்தகர்களும் ஐடிஆர் தாக்கல் செய்யவேண்டும்.
மேலும் படிக்க | LPG Gas விலை குறையும்! நம்பிக்கை கொடுக்கும் அரசின் சிறப்புத் திட்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ