செல்ல மகளின் வாழ்க்கை வளமாக இருக்க வேண்டுமா? செல்வமகள் திட்டத்தில் முதலீடு செய்யலாம்

Sukanya Samriddhi Yojana: சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் நீங்கள் செய்யும் 1000, 2000, 3000 அல்லது 5000 ரூபாய், முதிர்வு காலத்தில் எவ்வளவு வருமானம் தரும் என்பதை தெரிந்தால் ஆச்சரியமாக இருக்கும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 30, 2023, 07:13 AM IST
  • சுகன்யா சம்ரித்தி யோஜனா
  • முதிர்வு காலத்தில் வருமானம் எவ்வளவு?
  • பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான முதலீடு
செல்ல மகளின் வாழ்க்கை வளமாக இருக்க வேண்டுமா? செல்வமகள் திட்டத்தில் முதலீடு செய்யலாம் title=

சுகன்யா சம்ரித்தி யோஜனா கால்குலேட்டர்: இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தின்படி 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாப்பாளரோ ரூபாய் 1000 செலுத்தி அஞ்சலகங்களில் அல்லது வங்கிகளில் கணக்கைத் தொடங்கலாம். இந்தியர்கள், 10 வயதுக்குட்பட்ட தங்கள் மகளுக்கு சுகன்யா சம்ரித்தி யோஜனாவில் (செல்வ மகள் சேமிப்புத் திட்டம்) முதலீடு செய்யத் தொடங்கலாம். தற்போது இத்திட்டம் 7.6 சதவீத வட்டியை வழங்குகிறது. ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை செய்யப்படும் முதலீடுகளுக்கு வரி விலக்கு உண்டு.

பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் 15 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். உங்கள் மகளுக்காக எவ்வளவு சீக்கிரம் முதலீடு செய்யத் தொடங்குகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக முதிர்வுத்தொகை கிடைக்கும். 

சுகன்யா சம்ரித்தி யோஜனா எப்போது தொடங்குவது நல்லது?
உங்கள் மகள் பிறந்த உடனேயே சுகன்யா சம்ரித்தி யோஜனாவில் முதலீடு செய்யத் தொடங்கினால், உங்கள் மகளுக்கு 21 வயது ஆவதற்குள், அவளுக்கு நல்ல தொகை தயாராகிவிடும்.

திட்டத்தின் முதிர்வு காலம் வரை முறையே ரூ.1000, 2000, 3000 அல்லது 5000 முதலீடுகளில் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

மேலும் படிக்க | Post office Time Deposit திட்டம்: வட்டியிலேயே பம்பர் லாபம், சில மாதங்களில் முதலீடு இரட்டிப்பாகும்

1000 ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்?
இந்தத் திட்டத்தில் மாதந்தோறும் ரூ.1000 முதலீடு செய்தால், ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் டெபாசிட் செய்யப்படும்.

SSY கால்குலேட்டரின் படி, 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ. 1,80,000 ஆகவும், ரூ. 3,29,212 வட்டியில் இருந்து மட்டுமே பெறப்படும். முதிர்வு காலத்தில் மொத்தம் ரூ.5,09,212 பணம் கிடைக்கும்.

செல்வ மகள் சேமிப்புத் திட்டம்: 2000 ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்?

மாதம் ரூ.2,000 முதலீடு செய்தால், ஆண்டுக்கு ரூ.24,000 டெபாசிட் செய்ய வேண்டியிருக்கும். மொத்த முதலீடு ரூ.3,60,000 ஆகவும், வட்டி வருமானம் ரூ.6,58,425 ஆகவும் இருக்கும்.முதிர்வு காலத்தில் மொத்தம் ரூ.10,18,425 கிடைக்கும்.

மேலும் படிக்க | FD முதலீடுகளுக்கு வட்டியை அள்ளித் தரும் ‘3’ வங்கிகள்... முழு விபரம் இதோ!

செல்வ மகள் சேமிப்புத் திட்டம்: 3000 ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்?
மாதம் ரூ.3000 முதலீடு என்ற அடிப்படையில் கணக்கிட்டு பார்த்தால், ஆண்டுக்கு ரூ.36,000 டெபாசிட் செய்யப்படும். மொத்த முதலீடு ரூ.5,40,000 ஆக இருக்கும். வட்டி மூலம் கிடைக்கும் வருமானம் ரூ.9,87,637. முதிர்வு காலத்தில் மொத்தம் ரூ.15,27,637 பெறலாம்.

செல்வ மகள் சேமிப்புத் திட்டம்: 4000 ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்?

சுகன்யா சம்ரித்தி யோஜனாவில் (SSY) ரூ.4000 முதலீடு செய்வதன் மூலம், ஆண்டுக்கு ரூ.48,000 டெபாசிட் என்ற வகையில் 15 ஆண்டுகளில் மொத்தம் ரூ.7,20,000 முதலீடு செய்யப்படும். இதற்கு வட்டி மூலம் கிடைக்கும் வருமானம் ரூ.13,16,850 என்ற நிலையில், முதிர்ச்சியடைந்தவுடன், மொத்தம் ரூ.20,36,850 நிதி தயாராக இருக்கும்.

செல்வ மகள் சேமிப்புத் திட்டம்:  5000 ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்?
மாதம் 5,000 ரூபாய் முதலீடு செய்தால், ஆண்டுக்கு 60,000 ரூபாய் முதலீடு செய்வீர்கள். 15 ஆண்டுகளில் மொத்தம் ரூ.9,00,000 முதலீடு இருக்கும். வட்டி மூலம் ரூ.16,46,062 கிடைக்கும். முதிர்ச்சியின் போது, 25,46,062 ரூபாய் பணம் உங்கள் மகளுக்கு தயாராக இருக்கும்.

மேலும் படிக்க | Investment Idea: உடல் எடை குறைப்பு மருந்து தயாரிப்பு நிறுவன பங்குகளில் முதலீடு செய்யலாமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News