Indian Railways: இந்த சீட் கிடைத்தால் சிக்கல்தான்... ரயில் விதிகளை தெரிந்துகொள்ளுங்கள்

Indian Railways: ரயிலில் பயணிக்கும் போது டிக்கெட் உறுதி செய்யப்பட்டாலும், பலமுறை நாம் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 1, 2023, 11:16 AM IST
  • சைட் அப்பர் பயணிக்கு சிக்கல்.
  • சைட் அப்பர் பெர்த் நபர் எங்கு அமர வேண்டும்?
  • இரவு 10 மணி வரை கீழ் பர்த்தில் உட்காரலாம்.
Indian Railways: இந்த சீட் கிடைத்தால் சிக்கல்தான்... ரயில் விதிகளை தெரிந்துகொள்ளுங்கள் title=

இந்தியன் ரயில்வே: இந்தியன் ரயில்வே நம் நாட்டு மக்களின் போக்குவரத்தின் உயிர் நாடியாக இருந்து வருகிறது. மக்கள் தொகை அதிகம் உள்ள நமது நாட்டில், மக்களின் போக்குவரத்தை பொறுத்தவரையில், ரயில்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. ரயிலில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக இந்தியன் ரயில்வே பல வித வசதிகளை செய்கிறது. அவ்வப்போது பல புதிய விதிகள் இயற்றப்படுகின்றன. சில விதிகள் மாற்றப்படுகின்றன. கோடிக்கணக்கான பயணிகளுக்கு சிறப்பு நிபந்தனைகளின் கீழ் சிறப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன.  

பயண விதிகள்

தினமும் லட்சக்கணக்கானோர் ரயிலில் பயணம் செய்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், தங்களுக்குப் பிடித்த இருக்கையைப் பெற, ஒரு மாதத்திற்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யத் தொடங்குகிறார்கள். ரயிலில் பயணிக்கும் போது டிக்கெட் உறுதி செய்யப்பட்டாலும், பலமுறை நாம் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகின்றது. ரயில்வே விதிகளை முழுமையாக நாம் கவனிக்காததும், தெரிந்துகொள்ளாததுமே இதற்கு காரணம் ஆகும். ரயில்வே விதிகள் பற்றிய புரிதல் இல்லாத மக்கள் தங்களுக்கு தாங்களே சிரமத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இது தவிர மற்ற பயணிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்துகின்றனர்.

சைட் அப்பர் பயணிக்கு சிக்கல்

ரயில் பெட்டிகளில் இருக்கும் நடு (மிடில்), கீழ் (லோயர்) மற்றும் மேல் (அப்பர்) பெட்டிகளில் பயணிப்பவர்கள் இருக்கையைப் பற்றி குழப்பமடைவதால் இதுபோன்ற சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். RAC இல் இரண்டு பயணிகள் பக்கவாட்டில் இருக்கும் கீழ் பெர்த்களை (சைட் லோயர்) பெறும்போது மிகவும் சர்ச்சை ஏற்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் அப்பர் பர்த் உள்ளவர்களுக்கு அதிக சிக்கல் ஏற்படுகிறது.

ஆகையால், பலமுறை ரயிலில் கன்ஃபர்ம் டிக்கெட் கிடைத்த பிறகும், எங்கே உட்காருவது, எங்கே படுப்பது என்று நினைத்து மனம் குழம்பிப் போகும் அளவுக்கு இப்படிப்பட்ட இருக்கைகள் கிடைத்துவிடுகின்றன. ரயிலில் பயணிக்கும் முன் ரயில்வே விதிகளை தெரிந்து கொள்வது அவசியம். அப்படி நாம் தெரிந்துகொண்டால் நமக்கு பயணத்தின் போது எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்கும். 

மேலும் படிக்க | சென்னை - நெல்லை வந்தே பாரத்... ஆகஸ்ட் 6ம் தேதி துவக்கம்?

சைட் அப்பர் பெர்த் நபர் எங்கு அமர வேண்டும்?

RAC-ல் இரண்டு பேருக்கு சைட் லோயர் கிடைக்கும்போது, மேல் பெர்த் உள்ளவருக்கு உட்காருவதில் சிக்கல் ஏற்படுகின்றது. சில சமயங்களில் TTE -யும் இதில் குழம்பிப் போவது மிகப்பெரிய பிரச்சனை. RAC சீட் கிடைத்த 2 பேர் ஏற்கனவே அங்கு அமர்ந்திருப்பார்கள். ஆனால் அத்தகைய சூழ்நிலையில் அவர்கள் ஒரு இருக்கையில் அட்ஜஸ்ட் செய்ய வேண்டியிருக்கும்.

சைட் அப்பர் கிடைத்திருக்கும் நபர் பெர்த் எண்ணின்படி அமர்ந்து கொள்வார். அமரும் நேரம் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஆகும். ஆனால் இதற்கான விதிகளை ரயில்வே வகுக்கவில்லை. அத்தகைய சூழ்நிலையில், மூன்று பயணிகளும் இணக்கமான முறையில் தங்களுக்குள் அட்ஜஸ்ட் செய்து கொண்டு அமர வேண்டும். 

இரவு 10 மணி வரை கீழ் பர்த்தில் உட்காரலாம்

டிக்கெட் தொடர்பாக இந்திய ரயில்வே வகுத்துள்ள விதிகளின்படி, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தூங்கும் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அனைத்து பயணிகளும் அவர்களுக்கான பெர்த்தில் தூங்குவார்கள். இந்த நேரத்தில் பெர்த்தின் பயணியிடம் கேட்காமல் யாரும் அவரது பெர்த்தில் உட்கார முடியாது. ஆனால், காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மிடில் பெர்த் மற்றும் மேல் பெர்த் பயணிகள் கீழ் பெர்த்தில் அமரலாம்.

மேலும் படிக்க | சீனியரை சுட்ட ரயில்வே போலீஸ்... தடுக்க வந்த பயணிகள்... 4 பேர் பலி - பின்னணியில் பகீர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News