Pradhan Mantri Matru Vandana Yojana: பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை மட்டுமின்றி, அவர்கள் தனித்து பயன்பெறும் வகையில் பல திட்டங்களையும் வகுத்துள்ளன. குறிப்பாக, தமிழ்நாடு அரசு பெண்கள் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளி படித்து, அவர்கள் உயர்கல்வி பயிலும்போது மாதம் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது.
இது, உயர்கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கிறது என தமிழ்நாடு அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. இதேபோன்று, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டமும், இந்தாண்டு செப். 15ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவித்துள்ளது. இது, ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு பெரும் பயனளிக்கும் என்றும் ஒரு முன்னோடி திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. தற்போது, அரசு பேருந்தில் பெண்களுக்கான இலவச பயணம் என்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், கர்ப்பணி பெண்களுக்கு பலனளிக்கக் கூடிய திட்டத்தை மத்திய அரசால் வழங்கி வருகிறது. பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா என்ற அந்த திட்டம் கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதையும், சிகிச்சை மற்றும் மருந்துகளின் செலவில் உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க | திருமணமானவர்களுக்கு மோடி அரசின் பரிசு, மாதந்தோறும் பணம் கிடைக்கும்
நேரடியாக வங்கி கணக்கிற்கு...
பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா, கர்ப்பிணி மற்றும் கைக்குழந்தையுடன் இருக்கும் தாய்மார்களுக்காக அரசின் திட்டமாகும். இந்தத் தாய்மார்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும், பணச் சலுகைகள் மூலம் ஊட்டச்சத்து குறைபாட்டின் தாக்கத்தைக் குறைப்பதும் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும், கர்ப்பிணி மற்றும் கைக்குழந்தையுடன் இருக்கும் பெண்களின் கணக்கில் 5000 ரூபாய் டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த 5000 ரூபாய் டிபிடி மூலம் பயனாளியின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக மூன்று தவணைகளாக அனுப்பப்படுகிறது.
மூன்று தவணைகள்!
பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தில், கர்ப்பத்தைப் பதிவு செய்யும் போது முதல் தவணையாக 1000 ரூபாய் செலுத்தப்படும். மறுபுறம், இரண்டாவது தவணை ஆறு மாத கர்ப்பத்திற்குப் பிறகு குறைந்தபட்சம் ஒரு கர்ப்பகால பரிசோதனைக்குப் பிறகு வழங்கப்படுகிறது. அதில் 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதன் பிறகு, குழந்தை பிறந்ததை பதிவு செய்த பிறகு மூன்றாவது தவணையாக 2000 ரூபாய் வழங்கப்படுகிறது.
இவர்களுக்கு கிடையாது
தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் அல்லது பொருளாதார நிலையில் மிகவும் நலிவடைந்த பெண்களுக்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் கர்ப்ப காலத்தில் ஊதிய இழப்பைக் குறைப்பதாகும். எந்தவொரு மத்திய அல்லது மாநில அரசு நிறுவனங்களுடனும் தொடர்புடைய பெண்களுக்கு இந்தத் திட்டத்தின் பலனை அரசாங்கம் வழங்குவதில்லை.
இத்திட்டத்தின் பலன் முதலில் உயிருடன் இருக்கும் குழந்தைக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த 5000 ரூபாய் கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிகிச்சை மற்றும் மருந்து செலவுக்கு உதவுகிறது. மேலும், இந்த நிதியுதவி பெறுவதால் கர்ப்பிணிகளுக்கு ஓய்வெடுக்க நேரம் கிடைக்கும்.
மேலும் படிக்க | EPFO கொடுத்த காலவகாசம் - ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ