ரயில் கட்டணம் அதிரடியாக குறைப்பு... ஆஹா அசத்தல் அறிவிப்பு - பின்னணி என்ன?

Railway Board Reduced Trains Fare: ஏசி நாற்காலி வகுப்பு, வந்தே பாரத் உட்பட அனைத்து ரயில்களின் எக்சிகியூட்டிவ் வகுப்புகளின் கட்டணம் 25 சதவீதம் வரை குறைக்கப்படும் என ரயில்வே வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியை இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jul 8, 2023, 11:39 PM IST
  • வந்தே பாரத் உள்பட அனைத்து ரயில்களிலும் இந்த வகுப்புகள் காலியாகவே இருப்பதாக தகவல்.
  • மக்களை கவரும் வகையில் கட்டணங்கள் மாற்ற திட்டம்.
  • அந்த வகையில், ரயில்வே வாரியம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது
ரயில் கட்டணம் அதிரடியாக குறைப்பு... ஆஹா அசத்தல் அறிவிப்பு - பின்னணி என்ன? title=

Railway Board Reduced Trains Fare: நீங்களும் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவர் என்றால், இந்தச் செய்தியைக் கேட்டு நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். ஆம், இந்திய ரயில்வே வாரியம் ரயில் கட்டணத்தை 25 சதவீதம் வரை குறைப்பதாக அறிவித்துள்ளது. இது ரயிலில் பயணிப்பவர்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும். 

அனைத்து ரயில்களின் ஏசி நாற்காலி வகுப்பு மற்றும் எக்ஸிகியூட்டிவ் கிளாஸ் கட்டணத்தில் இந்த விலக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே வாரியத்தின் உத்தரவில், வந்தே பாரத் அரை அதிவேக ரயிலின் கட்டணத்தை குறைப்பதாக தகவல்கள் கூறப்படுகின்றன. 

காலியாக இருக்கும் இருக்கைகள்

ரயில்வே வாரியம் பிறப்பித்த அந்த உத்தரவில், கடந்த 30 நாட்களில் 50 சதவீதத்துக்கும் குறைவான இருக்கைகளே நிரம்பிய ரயில்வே மண்டலங்களில் இருந்து ரயில்களில் சலுகைக் கட்டணத் திட்டத்தைத் தொடங்கவும் கோரப்பட்டுள்ளது. கடந்த நாட்களில் சில வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களில் இருக்கைகள் காலியாக உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் ரயில்வே வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஒப்பீட்டளவில் குறுகிய வந்தே பாரத் ரயில்களில் இருக்கைகள் முழுமையாக நிரப்பப்படவில்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Indian Railways: பயணத்தில் லக்கேஜ் தொலைந்தால் கவலை வேண்டாம், இப்படி திரும்ப பெறலாம்

கட்டணங்கள் மறு ஆய்வு

இதைத் தொடர்ந்து, கட்டணத்தை மறுஆய்வு செய்வதன் மூலம் அவற்றை மக்களை கவரும் வகையில் மாற்ற ரயில்வே திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வரிசையில், அனைத்து ரயில்களிலும் ஏசி நாற்காலி கார் மற்றும் எக்சிகியூட்டிவ் கிளாஸ் கட்டணத்தை 25 சதவீதம் குறைப்பதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்தூர்-போபால், போபால்-ஜபல்பூர் மற்றும் நாக்பூர்-பிலாஸ்பூர் போன்ற வந்தே பாரத் ரயில்களின் கட்டணம் மறுஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது. இந்த ரயில்களில் இருக்கைகள் அதிக அளவில் காலியாக உள்ளன.

ஜூன் வரையில் போபால்-இந்தூர் வந்தே பாரத் ரயிலில் 29 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. இந்தூர்-போபால் ரயிலில் 21 சதவீத இருக்கைகள் நிரம்பியுள்ளன. மூன்று மணி நேரம் பயணிக்கும் இந்த ரயிலில் ஏசி நாற்காலி வகுப்பு ரூ.950 செலுத்த வேண்டும். மேலும் எக்ஸிகியூட்டிவ் நாற்காலி வகுப்பின் கட்டணம் ரூ.1,525 ஆகும்.

மேலும் படிக்க | Indian Railways முக்கிய அப்டேட்: ரயில் தாமதமானால் ரீஃபண்ட் கிடைக்கும்..இதுதான் விதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News