பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ள நபரா நீங்கள்? இண்ட்ராடே டிரேடிங், ஈக்விடி, ஃப்யூசர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் என பல்வேறு வகையான வர்த்தக தளங்களில் தினமும் உங்கள் அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. இது உங்களை எச்சரிப்பதுடன், நிதானத்துடன் நடந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தையும் புரிய வைக்கும்.
செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா (SEBI) தலைவர் மாதபி பூரி புச் (Madhabi Puri Buch) செவ்வாயன்று தேசிய பங்குச் சந்தையில் (NSE) ஒரு நிகழ்வில் பேசினார். அப்போது அவர் ஃப்யூசர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் (F&O) பிரிவில் ஹவுஸ்ஹோல்ட் முதலீடுகளில் ஆண்டுக்கு ரூ.60,000 கோடி வரை நஷ்டம் ஏற்படுகிறது என்ற அதிர்ச்சி தகவலை அளித்தார்.
டெரிவேடிவ் சந்தையில், இப்படிப்பட்ட இழப்புகள் ஏன் "மேக்ரோ பிரச்சினையாக", அதாவது பெரிய பிரச்சனைகளாக கருதப்படவில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார். F&O இல் ஆண்டுக்கு ரூ. 50,000-60,000 கோடி நஷ்டத்தில் போய்க் கொண்டிருக்கின்றது என்று கூறிய அவர், இந்த ஏராளமான தொகை பொருளாதாரத்திற்கு மிகவும் திறம்பட பங்களிக்கும் வகையில், அதாவது, ஆரம்ப பொது வழங்கல்கள் (IPO-க்கள்) அல்லது மியூசுவல் ஃபண்டுகள் போன்ற இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று வலியுறுத்தினார்.
F&O பிரிவில் 90 சதவீத வர்த்தகங்கள் நஷ்டத்தில் முடிவதாக செபி ஆய்வு முன்பு சுட்டிக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக, மூலதனச் சந்தை கட்டுப்பாட்டாளரான செபி, செவ்வாயன்று இந்தச் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்மொழிந்து ஒரு ஆலோசனை ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டது. இந்த விவகாரத்தில் செபி காட்டும் ஆர்வம் மற்றும் அக்கறையை இதிலிருந்து புரிந்துகொள்ள முடிகின்றது.
இதற்கிடையில், NSE இன் தலைமை நிர்வாகி மற்றும் நிர்வாக இயக்குனரான ஆஷிஷ் குமார் சௌஹான், கட்டணம் செலுத்தும் வர்த்தகங்களைக் கட்டுப்படுத்துவது பற்றி எழுப்பப்பட்ட சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு பதிலளித்தார். என்எஸ்இ விதிமுறைகளுக்கு இணங்குவதை அவர் உறுதிப்படுத்தினார். பரிவர்த்தனை கட்டணங்களில் குறுகிய கால தாக்கம் இருந்தாலும், நீண்ட கால பலன்கள் அனைத்து பங்குதாரர்களுக்கும் சாதகமாக இருக்கும் என்று மாதபி புச் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க | ஆகஸ்ட் மாதத்தில் வங்கி வேலை இருக்கா? வங்கி விடுமுறை நாட்களின் முழு லிஸ்ட் இதோ
செபி தலைவர் மாதபி பூரி புச் நிகழ்வில் பேசியதில் கவனிக்க வேண்டில சில முக்கிய அம்சங்கள்:
- பணப்புழக்கம் மற்றும் லெவரேஜ் டைனமிக்ஸில் உள்ள வேறுபாடுகள் காரணமாக, பரிமாற்ற-வர்த்தக நிதிகள் (ETF-கள்) அபாயகரமான டெரிவேடிவ் செயல்பாட்டுக்கு மாற்றாக முடியாது என்று அவர் தெளிவுபடுத்தினார்.
- வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு ஒரே KYC சரிபார்ப்பைப் பயன்படுத்துவதில் உள்ள சிக்கலைப் பற்றி பேசிய அவர், Paytm இல் காணப்பட்ட சிக்கல்களைப் பற்றி குறிப்பிட்டார். Paytm வகையிலான மற்றொரு முறைகேட்டை நாம் மீண்டும் சந்தையில் அனுமதிக்க மாட்டோம் என்று அவர் தெரிவித்தார்.
- Paytm -இல் நடந்ததை நாம் அனைவரும் பார்த்தோம். பேங்கிங் சிஸ்டத்தில் கேஆர்ஏ வகையான சிஸ்டம் இல்லாததால் Paytm -இல் நடந்த பிரச்சனை அங்கு மட்டுமே இருக்கிறது. அது மற்ற வங்கிகளுக்கு பரவவில்லை. ஆனால், KRA இல்லாமல் பேடிஎம் போன்ற ஒன்றை நமது சிஸ்டத்தில் வர அனுமதித்தால், அது முழு அமைப்பையும் மாசுபடுத்தும் என்று அவர் எச்சரித்தார்.
- சரிபார்ப்பிற்கு ஒரு மத்திய KRA (KYC பதிவு முகமை) இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
- முதலீட்டு ஆலோசகராக பதிவு செய்வதில் உள்ள சிரமங்களை ஒப்புக்கொண்ட புச், செபி விரைவில் செயல்முறையை பகுத்தறியும் என்று அறிவித்தார்.
- சில தளங்களில் இது குறித்த தவறான கூற்றுகள் பரப்பப்படுவதாகவும், NSE குழுமம் ஒரு செயல்திறன் சரிபார்ப்பு பொறிமுறையை உருவாக்கியுள்ளது என்றும் அது விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
- வெளிநாடு வாழ் இந்தியர்களின் முதலீடுகளை எளிதாக்குவதற்கு மியூச்சுவல் ஃபண்ட் துறை சரியான பரிந்துரைகளை கோண்டு வராதது குறித்து அவர் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.
- Wazirx உடனான தற்போதைய சவால்களைக் குறிப்பிட்டு பேசிய செபி தலைவர், பங்குச் சந்தைகளை கிரிப்டோ சந்தைகளுடன் ஒப்பிடுவது தவறு என்று வலியுறுத்தினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ