வெறும் 8 ஆயிரம் செலுத்தி Hero Passion Pro பைக் வாங்கலாம்! எவ்வளவு EMI செலுத்த வேண்டும்!

8 ஆயிரம் ரூபாய் செலுத்தி Hero Passion Pro வாங்குங்கள்! ஈங்கள் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் தெரியுமா? அதைக்குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 9, 2021, 08:09 PM IST
வெறும் 8 ஆயிரம் செலுத்தி Hero Passion Pro பைக் வாங்கலாம்! எவ்வளவு EMI செலுத்த வேண்டும்! title=

Hero Passion Pro BS6 Disc On Road Price: நாட்டின் மிகப்பெரிய இரு சக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனத்தின் பேஷன் புரோ பைக் (Hero Passion Pro) சிறந்த விற்பனையாகும் பைக்குகளில் ஒன்றாகும். சிறந்த மைலேஜ் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவுகள் காரணமாக இந்த பைக் மிகவும் பிரபலமானது. இந்த பைக்கில் 113 சிசி எஞ்சின் உள்ளது. இது 9 ஹெச்பி பவர் மற்றும் 9.79 என்எம் டார்க்கை உருவாக்குகிறது. 18 அங்குல டயர், 10 லிட்டர் எரிபொருள் டேங்க் (Fuel Tank) உள்ளது.

Hero Passion Pro பைக்கை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், 8 ஆயிரம் ரூபாயை மட்டுமே செலுத்தி இந்த பைக்கை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.

ALSO READ |  Honda City மற்றும் Swift Dzire கார்களை குறைவான விலையில் வாங்குவது எப்படி?

சமீபத்தில், இந்த பைக்கின் விலையை நிறுவனம் அதிகரித்திருந்தது. இந்த பைக்கின் பிஎஸ் 6 டிஸ்க் வகைகளை (இதன் விலை புது தில்லியில் ரூ.81,087 ) உங்களால் முடிந்த அளவுக்கு முன்பணத்தை (Down Paymen) செலுத்தி வாங்கலாம். ஒருவேளை நீங்கள் 8 ஆயிரம் ரூபாய் முன்பணம் செலுத்தினால், நீங்கள் ரூ .73,087 வரை கடன் வாங்க வேண்டியிருக்கும். இதற்கு 9.7 சதவீத வட்டி விகிதம் பொருந்தும். இந்த கடன் 36 மாத கால தவனையில் கிடைக்கும். 

36 மாத கால தவனை: 
அதாவது நீங்கள் மொத்தமாக ரூ .94,356 செலுத்த வேண்டும். மாதத்திற்கு ரூ .2,621 என்ற அளவில் ஈ.எம்.ஐ. (EMI) செலுத்த வேண்டியிருக்கும். மொத்த தொகையில், நீங்கள் ரூ .21,269 வட்டியாக செலுத்த வேண்டும். அதே நேரத்தில், உங்கள் பட்ஜெட் குறைவாக இருந்தால், நீங்கள் 42 மாதங்களுக்கும் கடன் வாங்கலாம்.

42 மாதம்ம தவணை: 
நீங்கள் செலுத்திய முன்பணம்: ரூ. 8000
நீங்கள் வாங்க வேண்டிய கடன்:  ரூ .73,087 
அதற்கான வட்டி விகிதம்: 9.7 சதவீதம்
கடன் மற்றும் வட்டி சேர்ந்து: ரூ. 97,902, 
உங்களுக்கான EMI மாதம்: ரூ .2,331
மொத்த தொகையில், நீங்கள் செல்;ஊட்டும் வட்டிஎல் ரூ .24,815 

ALSO READ | ரூ. 32 ஆயிரம் செலுத்தி Maruti Alto 800 காரை வீட்டிற்கு கொண்டு வாருங்கள்!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News