Budget 2025 Latest News In Tamil: வரி செலுத்துவோருக்கு மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது. ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட மோடி அரசின் மூன்றாவது ஆட்சியின் முதல் பட்ஜெட்டில் வரி செலுத்துவோருக்கு எதிர்பார்த்த நிவாரணம் கிடைக்கவில்லையே. ஆனால் பிப்ரவரி 1, 2025 அன்று தாக்கல் செய்யப்படும் அடுத்த பட்ஜெட்டில் வருமான வரி செலுத்துவோருக்கு பெரும் நிவாரணம் கிடைக்கும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
புதிய வருமான வரி விதிப்பு முறை
புதிய வரி விதிப்பின் கீழ், ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை வரி செலுத்துவோர் வரி குறைப்பின் பலனைப் பெற்று வரும் நிலையில், புதிய வரி முறையின் விலக்கு வரம்பை 3 லட்சத்திற்கு மேல் அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
வரி விலக்கு வரம்பு
குறைந்த வருமானம் பெறும் பிரிவினருக்கு பெரிய நிவாரணம் கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. ஆனால் அதேநேரத்தில் அதிக வரி அடுக்குகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் எதிர்பார்க்க முடியாது என்று நம்பத்தகுந்த ஆதாரங்கள் மூலம் தகவல் கிடைத்துள்ளது. மேலும் வரி விலக்கு வரம்பு தொடர்பான இறுதி முடிவு பட்ஜெட்டு தாக்களுக்கு முன்பாக எடுக்கப்படும்.
ஜூலை மாதம் பட்ஜெட்
ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டிற்கான புதிய வரி விதிப்பில் வரி செலுத்துவோருக்கு சில நிவாரணங்களை அளித்திருந்தார். 7 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டியதில்லை. மேலும், நிலையான விலக்கு வரம்பு ரூ.50,000ல் இருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டது.
வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடு
இந்தியா சில ஆண்டுகளாக உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இருந்தாலும், இந்த வேகம் பெரும்பாலும் அரசாங்க செலவினங்களாலும், ரியல் எஸ்டேட் முதல் கார்கள் மற்றும் நகைகள் வரை பணக்காரர்களிடமிருந்து ஆடம்பர பொருட்களுக்கான தேவை அதிகரிப்பாலும் ஏற்பட்டுள்ளது.
நடுத்தர வர்க்கத்தினருக்கு வரிச்சலுகை கிடைக்குமா?
ஆனால் மறுபுறம் உணவுப் பொருட்களின் விலை உயர்வால், மக்கள் அன்றாட அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். வரவிருக்கும் பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிக வரிச்சலுகைகள் மற்றும் சலுகைகளை அளிக்க பரிசீலிக்க வேண்டிய கட்டாயத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இருக்கிறார்.
மேலும் படிக்க - Budget 2025: வருமான வரி உள்ளிட்ட பல பெரிய சீர்திருத்தங்கள்.. தயாராகும் அரசு
மேலும் படிக்க - Budget 2025: விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் இவைதான்... செவி சாய்க்குமா அரசு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ