நீங்களும் வேலையில் இருப்பவர் மற்றும் அதிக ஓய்வூதியத்தைப் பெற விரும்பினால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம், 1995-ன் (EPS-1995) கீழ், தகுதியான ஓய்வூதியம் பெறுவோர் மே 3-ஆம் தேதி வரை அதிக ஓய்வூதியத்தைப் பெற விண்ணப்பிக்கலாம். செப்டம்பர், 2014க்கு முன் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு, இந்தத் திட்டத்தின் கடைசித் தேதி மார்ச் 3, 2023 ஆகும். தொழிலாளர் அமைச்சகம், 'தற்போதைய தொழிலாளர்கள் / முதலாளிகள் சங்கத்தின் கோரிக்கையின் பேரில், அத்தகைய தொழிலாளர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதியை மே 3, 2023 வரை நீட்டிக்க மத்திய அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது.
கடைசி தேதி மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
இப்போது நீங்கள் EPFO இன் யூனிஃபைட் மெம்பர்ஸ் போர்டல் மூலம் மே 3க்குள் விண்ணப்பிக்கலாம். நவம்பர் 4, 2022 அன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், தகுதியான அனைத்து உறுப்பினர்களுக்கும் அதிக ஓய்வூதியத்தைத் தேர்வுசெய்ய EPFO 4 மாதங்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று கூறியது. இந்த காலம் மார்ச் 3-ம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால், இதை அதிகரிக்க வேண்டும் என ஊழியர்களிடம் தொடர்ந்து கோரிக்கை எழுந்தது. அதன் பேரில் தற்போது இந்த கால அவகாசம் மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கார் கடன் வாங்க போறீங்களா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் கவனீங்க!
உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன சொல்கிறது
2014 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம், ஓய்வூதியத் திட்டத்தில் இரண்டு முக்கிய மாற்றங்களைச் செய்தது. ஒன்று, ஓய்வூதிய வருமான வரம்பை 6,500 ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது. மற்றொன்று, அடிப்படை ஊதியம் 15 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக பெறும் நபர்களின் விருப்பதிற்கேற்ப, அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் ஊதிய உச்சவரம்பின்றி, முழு தொகைக்கும் சேர்த்து 8.33 சதவீதத்தை பென்சனுக்காக செலுத்த வேண்டும்.
செப்டெம்பர் 01, 2014க்கு முன்பு ஓய்வு பெற்றிருந்தால் என்ன செய்ய வேண்டும்
2014 செப். 01க்கு முன் ஓய்வு பெற்றவர்கள், அதிக ஓய்வூதியம் பெற அப்போதே விண்ணப்பித்திருக்க வேண்டும். இதற்கு EPFO ஒப்புதல் வழங்கியிருந்தால், அவர்களுக்கு எந்த மாறுதலுமின்றி இத்திட்டம் தொடரும். மறுபுறம் செப்டெம்பர் 2014ஆம் ஆண்டுக்கு முன்பு அதிக ஊதியம் பெற்றவராக இருந்து ஓய்வூதியத்திற்காக விண்ணப்பித்து அதை EPFO நிராகரித்து இருந்தால், அவர்கள் மீண்டும் இத்திட்டத்திற்காக மே 3ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
அதிக ஓய்வூதியத்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது
இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள, ஊழியர்கள் அருகிலுள்ள EPFO அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். தற்போது, EPS-க்கு மாதந்தோறும் ரூ.15,000 என்ற வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உங்களின் அடிப்படை சம்பளம் ரூ.50,000 ஆக இருந்தால், ரூ.15,000 சம்பளத்தின் அடிப்படையில் உங்கள் இபிஎஸ் பங்களிப்பு ரூ.1,250 ஆகும்.
மேலும் படிக்க | அமலுக்கு வரும் 8வது ஊதியக்குழு! எப்போது இருந்து தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ