ஜாக்பார்ட்! EPFO சந்தாதாரர்களுக்கு கிடைக்கப்போகும் ரூ.81,000!

2022-ம் நிதியாண்டில் பிஎஃப் கணக்கில் பெறப்பட்ட வட்டியை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு கணக்கிட்டுள்ளதாகவும், விரைவில் அந்த தொகை கணக்குதாரர்களின் கணக்கிற்கு மாற்றப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.   

Written by - RK Spark | Last Updated : Nov 21, 2022, 06:59 AM IST
  • இபிஎஃப்ஓ ஊழியர்களுக்கு நல்ல செய்தி.
  • 2022ம் நிதியாண்டுக்கான வட்டியை மாற்றப்போகிறது.
  • அரசு மொத்தமாக ரூ.72,000 கோடி டெபாசிட் செய்யப்போவதாக கூறப்படுகிறது.
ஜாக்பார்ட்! EPFO சந்தாதாரர்களுக்கு கிடைக்கப்போகும் ரூ.81,000!  title=

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் 7 கோடி ஊழியர்களுக்கு விரைவில் மிகப்பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி வெளியிடப்படவுள்ளது.  அதாவது இபிஎஃப்ஓ அமைப்பு, 2022ம் நிதியாண்டுக்கான வட்டியை இபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்கிற்கு மாற்றப்போகிறது.  இந்த மாற்றத்தின் மூலம் ஊழியர்களுக்கு 8.1 சதவீத வட்டி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.  2022-ம் நிதியாண்டில் பிஎஃப் கணக்கில் பெறப்பட்ட வட்டியை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு கணக்கிட்டுள்ளதாகவும், விரைவில் அந்த தொகை கணக்குதாரர்களின் கணக்கிற்கு மாற்றப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 
மேலும் இந்த தடவை ஊழியர்களின் கணக்கிற்கு அரசு மொத்தமாக ரூ.72,000 கோடி டெபாசிட் செய்யப்போவதாக கூறப்படுகிறது.  இதுவே கடந்த ஆண்டில் ஊழியர்கள் கிட்டத்தட்ட ஆறு முதல் எட்டு மாதங்களுக்கு வட்டி தொகையை பெறுவதற்காக காத்துக்கொண்டிருந்தனர்.  

மேலும் படிக்க | 7th Pay Commission: 2023-ல் மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் 3 குட் நியூஸ்

ஊழியர்கள் வட்டியை பெறுவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணம் கொரோனா பெருந்தொற்று, தற்போது நோயின் தாக்கம் குறைந்திருப்பதால் இந்த முறை அரசு அதன் ஊழியர்களுக்கு வட்டித்தொகையை தருவதில் தாமதிக்காது என்று நம்பப்படுகிறது.  40 ஆண்டுகளில் இல்லாத வரையில் இந்த ஆண்டு வட்டி விகிதம் குறைந்துள்ளது மற்றும் வட்டி தொகை இந்த மாத இறுதிக்குள் ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  பிஎஃப் கணக்கில் ரூ.10 லட்சம் இருந்தால் உங்களுக்கு வட்டியாக மொத்தம் ரூ.81,000 கிடைக்கும், பிஎஃப் கணக்கில் ரூ.7 லட்சம் இருந்தால் ரூ.56,700 வட்டி கிடைக்கும், பிஎஃப் கணக்கில் ரூ.5 லட்சம் இருந்தால் ரூ.40,500 வட்டி கிடைக்கும் மற்றும் பிஎஃப் கணக்கில் ரூ.1 லட்சம் இருந்தால் ரூ. 8,100 வட்டி கிடைக்கும்.

பிஎஃப் இருப்பை சரிபார்ப்பதற்கான வழிமுறைகள்:

1. மிஸ்டு கால் மூலம் சரிபார்த்தல்:

பிஎஃப் பணத்தைச் சரிபார்க்க, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.  இதில் உங்கள் யூஏஎன், பான் மற்றும் ஆதார் விவரங்களை இணைக்க வேண்டியது அவசியம்.

2. இணையதளம் மூலம் சரிபார்த்தல்:

இபிஎஃப்ஓ-ன் ​​இணையதளமான epfindia.gov.in-ல் உள்ள இ-பாஸ்புக்கைக் கிளிக் செய்த பின்னர், passbook.epfindia.gov.in என்கிற பக்கம் வரும்.  இதில் யூஏஎன் எண், பாஸ்வேர்டு மற்றும் கேப்ட்சா விவரங்களை உள்ளிட்ட பின்னர் உறுப்பினர் ஐடியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.  அதன் பிறகு இ-பாஸ்புக்கில் உங்கள் இருப்பை சரிபார்க்கலாம்.

3. UMANG செயலி மூலம் சரிபார்த்தல்: 

UMANG செயலியில் இபிஎஃப்ஓ ​​என்பதைக் கிளிக் செய்யவும், பின்னர் வியூ பாஸ்புக் என்பதைக் கிளிக் செய்து அங்கு யூஏஎன் எண் மற்றும் பாஸ்வேர்டை நிரப்ப வேண்டும்.  இப்போது மொபைலுக்கு வரும் ஓடிபி-ஐ வைத்து பிஎஃப் இருப்பைச் சரிபார்க்கலாம்.

மேலும் படிக்க | இலவச ரேஷன் பெறுவோருக்கு மகிழ்ச்சி செய்தி, உடனே இத படியுங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News