Gold Rates Today: உயரத் தொடங்குகிறதா தங்கத்தின் விலை? இன்றைய நிலவரம் என்ன?

சர்வதேச சந்தையில், தங்கத்தின் வீதம் வெள்ளிக்கிழமை அவுன்ஸ் ஒன்றுக்கு 0.33 சதவீதம் குறைந்து 1,730.70 அமெரிக்க டாலராக உள்ளது. கடந்த 30 நாட்களில் அதன் செயல்திறன் 3.50 சதவீதம் குறைந்துள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 19, 2021, 10:51 AM IST
  • தங்கத்தின் விலை தேசிய அளவில் 1 கிராமுக்கு ரூ .32 உயர்ந்தது.
    சென்னையில் 22 காரட் 10 கிராம் தங்கம் 42,580 ரூபாய்க்கும் 24 காரட் தங்கம் 46,450 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
    சென்னை மற்றும் ஹைதராபாத்தில் ஒரு கிலோ வெள்ளியின் விலை 72,500 ரூபாயாக உள்ளது.
Gold Rates Today: உயரத் தொடங்குகிறதா தங்கத்தின் விலை? இன்றைய நிலவரம் என்ன?  title=

Gold Silver Rate March 19, 2021: தங்கத்தின் விலை தேசிய அளவில் 1 கிராமுக்கு ரூ .32 உயர்ந்தது. முந்தைய அமர்வில் 4,396 ரூபாயாக இருந்த 22 காரட் தங்கத்தின் விலை இன்று ரூ .4,428 ஆனது. 22 காரட்-தங்கத்தின் 10 கிராம் விலை ரூ .44,280 ஆக உள்ளது. இது முந்தைய நாளின் விலையான ரூ .43,960 லிருந்து ரூ .320 அதிகரித்துள்ளது. 22 காரட் தங்கத்தின் விலையைப் போலவே, 24 காரட் தங்கத்தின் விலையும் ரூ .320 அதிகரித்து, 10 கிராமுக்கு ரூ .45,280 ஆக உள்ளது. முந்தைய அமர்வில் இது 44,960 ரூபாயில் முடிவடைந்தது. வெள்ளியின் விலையும் வெள்ளிக்கிழமை ஓரளவு உயர்ந்துள்ளது. 

பல்வேறு நகரங்களில் அந்தந்த பகுதிகளுக்கான வரி வகைகளைப் பொறுத்து தங்கத்தின் விலை (Gold Price) மாறுபடுகிறது.

நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்களை இங்கே காணலாம்: 

டெல்லி: தேசிய தலைநகரில் 22 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ .44,350 ஆக உள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை ரூ .48,380 ஆக உள்ளது.

சென்னை: சென்னையில் 22 காரட் 10 கிராம் தங்கம் 42,580 ரூபாய்க்கும் 24 காரட் தங்கம் 46,450 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.  
ALSO READ: Gold Rates Today: இப்போதே தங்கம் வாங்கினால் நல்ல லாபம் பார்க்கலாம்: விலை நிலவரம் இதோ

கொல்கத்தா: கொல்கத்தாவில் 10 கிராம் 22 காரட் தங்கம் 44,580 ரூபாய்க்கும் 24 காரட்டுக்கு 10 கிராம் தங்கம் 47,280 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

மும்பை: மும்பையில் 10 கிராமுக்கு 22 காரட் தங்கத்தின் விலை 44,280 ரூபாயாகவும் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை 45,280 ரூபாயாகவும் உள்ளது. 

தங்கத்தின் சர்வதேச விலை

சர்வதேச சந்தையில், தங்கத்தின் (Gold) வீதம் வெள்ளிக்கிழமை அவுன்ஸ் ஒன்றுக்கு 0.33 சதவீதம் குறைந்து 1,730.70 அமெரிக்க டாலராக உள்ளது. கடந்த 30 நாட்களில் அதன் செயல்திறன் 3.50 சதவீதம் குறைந்துள்ளது, இது 62.80 அமெரிக்க டாலருக்கு சமமாகும்.

வெள்ளி விலை நிலவரம்

ரூ .7 என்ற பெயரளவு அதிகரிப்புக்குப் பிறகு, 10 கிராம் வெள்ளியின் (Silver) விலை வெள்ளிக்கிழமை ரூ .67 ஆக உள்ளது. மெட்ரோ நகரங்களில் வெள்ளி விலைகள் பின்வருமாறு: 

டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தாவில் ஒரு கிலோ வெள்ளியின் விலை 67,700 ரூபாயாக உள்ளது. சென்னை மற்றும் ஹைதராபாத்தில் அதே அளவிலான வெள்ளியின் விலை 72,500 ரூபாயாக உள்ளது.

ALSO READ: சும்மா இருக்கும் தங்கத்தை வைத்து சூப்பரா சம்பாதிக்க SBI Gold monetization scheme: முழு விவரம் உள்ளே

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News