Gold rates today: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் இதோ

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை புதன்கிழமை அவுன்ஸ் ஒன்றுக்கு 0.19 சதவீதம் குறைந்து 1,713.20 அமெரிக்க டாலராக குறைந்துள்ளது. இதேபோல், கடந்த 30 நாட்களில் தங்கத்தின் செயல்திறன் 5.62 சதவீதம் குறைந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 10, 2021, 01:02 PM IST
  • புதன்கிழமை தங்கத்தின் விலை வெகுவாகக் குறைந்துள்ளது.
  • தங்கத்தை ஒப்பிடுகையில் வெள்ளி விலை லேசாக குறைந்துள்ளது.
  • நாட்டின் பல்வேறு மாநிலங்களும் தங்கத்தின் விலையில் மாற்றங்களைக் கண்டன.
Gold rates today: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் இதோ title=

Gold Price / Silver Price Today, March 10, 2021: மார்ச் 10, புதன்கிழமை தங்கத்தின் விலை வெகுவாகக் குறைந்துள்ளது. 22 காரட் தங்கத்தின் விலை ரூ .25 குறைந்து ரூ .4,343 ஆக உள்ளது. நேற்றைய விலை ரூ .4,368 ஆக இருந்தது. 22 காரட்-தங்கத்தின் 10 கிராம் விலை, நேற்றைய விலையான 43,680 ரூபாயிலிருந்து 250 ரூபாய் குறைந்து, 43,430 ரூபாயாக உள்ளது.

24 கேரட் தங்கத்தின் விலையும் 10 கிராமுக்கு, நேற்றைய விலையான 44,680 ரூபாயிலிருந்து 250 ரூபாய் குறைந்து 44,430 ரூபாயாக உள்ளது. தங்கத்தின் விலைக்கு மாறாக, வெள்ளியின் விலைகள் ஓரளவு அதிகரித்துள்ளன.

நாட்டின் பல்வேறு மாநிலங்களும் தங்கத்தின் விலையில் (Gold Price) மாற்றங்களைக் கண்டன. விவரங்கள் இதோ:

டெல்லி: தேசிய தலைநகரில் 22 காரட் தங்கத்தின் விலை இன்று 10 கிராமுக்கு ரூ .43,800 ஆக உள்ளது. 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ .47,780 ஆகும்.

சென்னை: 22 காரட் தங்கத்தின் விலை இன்று 10 கிராமுக்கு ரூ .42,040 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ .45,860 ஆகவும் உள்ளது.

கொல்கத்தா: கொல்கத்தாவில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ .43, 840 ஆகவும், 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ .46,480 ஆகவும் உள்ளது.

மும்பை: மும்பையில் 22 காரட் தங்கத்தின் (Gold) விலை ரூ .43,430 ஆகவும் 24 காரட் தங்கத்தின் விலை ரூ .44,430 ஆகவும் உள்ளது.

ALSO READ: இனி தங்கத்தின் தூய்மை பற்றிய கவலை வேண்டாம்: BIS Care Mobile App உங்களுக்கு உதவும்!!

சர்வதேச சந்தையின் தங்கத்தின் விலை:

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை புதன்கிழமை அவுன்ஸ் ஒன்றுக்கு 0.19 சதவீதம் குறைந்து 1,713.20 அமெரிக்க டாலராக குறைந்துள்ளது. இதேபோல், கடந்த 30 நாட்களில் தங்கத்தின் செயல்திறன் 5.62 சதவீதம் குறைந்துள்ளது. இது 102.00 அமெரிக்க டாலருக்கு சமமாகும்.

வெள்ளி விலை நிலவரம்

முந்தைய நாளின் விலையான ரூ .667 உடன் ஒப்பிடும்போது, ​​வெள்ளியின் (Silver) விலை, லேசாக அதிகரித்து 10 கிராமுக்கு ரூ .670 ஆக உள்ளது.

மெட்ரோ நகரங்களில் வெள்ளி விலைகள்

டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தாவில் வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு ரூ .67,000 ஆக உள்ளது. சென்னை மற்றும் ஹைதராபாத்தில் வெள்ளி ஒரு கிலோ ரூ .71,400-க்கு விற்கப்படுகிறது.

ALSO READ: வீட்டில் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு good news: GMS திட்டத்தின் கீழ் பாதுகாப்பு, வருமானம்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News