விண்ணை முட்டும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று 10 கிராம் தங்கத்தின் விலை 647 ரூபாய் அதிகரித்து 49,908 ரூபாய்க்கு விற்கிறது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 1, 2020, 07:25 PM IST
  • தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று 10 கிராம் தங்கத்தின் விலை 647 ரூபாய் அதிகரித்து 49,908 ரூபாய்க்கு விற்கிறது
  • வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 1,611 ரூபாய் அதிகரித்து 51,870 ரூபாயாக உயர்ந்துவிட்டது
  • சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை ₹5,095
விண்ணை முட்டும் தங்கம் மற்றும் வெள்ளியின்  விலை title=

புதுடெல்லி: தொடர்ந்து கிடுகிடுவென உயர்ந்து வரும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்று மற்றுமொரு உச்சத்தைத் தொட்டது.

தேசிய தலைநகர் டெல்லியில் புதன்கிழமை 10 கிராம் தங்கத்தின் விலை 647 ரூபாய் உயர்ந்து 49,908 என்று அதிகரித்துவிட்டது.

நேற்று மாலை தங்கத்தின் விலை 10 கிராம் 49,261 ரூபாய் என்ற அளவில் இருந்தது.

செவ்வாயன்று வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 50,259 ரூபாய் என்று இருந்தது. இன்று கிலோ ஒன்றுக்கு 1,611 ரூபாய் அதிகரித்த வெள்ளியின் விலை  51,870 ரூபாயாக உயர்ந்துவிட்டது.

"சர்வதேச விலை நிலவரத்திற்கு ஏற்ப டெல்லியில் 24 காரட் (24 karat) தங்கத்திற்கான விலை 647 ரூபாய் அதிகரித்துள்ளது" என எச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் மூத்த ஆய்வாளர் (பொருட்கள்) (HDFC Securities Senior Analyst) தபன் படேல் தெரிவித்தார்.

Read Also | Pierce Brosnan: ஜேம்ஸ் பாண்டாக தொடர்ந்து நடிக்கவில்லை என்பதால் வருத்தமில்லை

சர்வதேச சந்தையில், தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 1,788 அமெரிக்க டாலர்களுக்கு விற்கிறது. வெள்ளியின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 18.34 அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் வர்த்தகம் செய்யப்பட்டது.

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பினால் பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலையானது ₹5,095 என்ற நிலையில் இருக்கிறது.  இது நேற்றைய விலையைவிட 47 ரூபாய் அதிகம் ஆகும்.    

Trending News