Online-னிலேயே 48 மணி நேரத்திற்குள் Home Loan பெறலாம்: முழு விவரம் உள்ளே!!

கொரோனா காலத்தில் வீட்டுக் கடன் பெறுவதற்காக நீங்கள் வங்கி வங்கியாக அலைய வேண்டியதில்லை. தனியார் துறை வங்கியான கோட்டக் மஹிந்திரா வங்கி ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 16, 2020, 01:01 PM IST
  • கோடக் டிஜி வீட்டுக் கடன் வசதி அனைத்து புதிய வீட்டுக் கடன்களுக்கும் கிடைக்கும்.
  • கோடக் டிஜி வீட்டுக் கடனுக்கான விண்ணப்ப செயல்முறை மிகவும் எளிமையானது.
  • வாடிக்கையாளர்கள் தங்கள் கனவு இல்லத்திற்கான கடன் வசதியை ஒரு சில கிளிக்குகளில் பெற முடியும்.
Online-னிலேயே 48 மணி நேரத்திற்குள் Home Loan பெறலாம்: முழு விவரம் உள்ளே!! title=

புதுடில்லி: கொரோனா காலத்தில் பெரும்பாலான வங்கிகள் தங்கள் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் அளிக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், வீட்டுக் கடன் பெறுவதற்காகவும் நீங்கள் வங்கி வங்கியாக அலைய வேண்டியதில்லை.

தனியார் துறை வங்கியான கோட்டக் மஹிந்திரா (Kotak Mahindra) வங்கி ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ் வாடிக்கையாளர்கள் 48 மணி நேரத்திற்குள் வீட்டுக் கடனைப் (Home Loan) பெற முடியும். இதற்காக, வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கும் போது அனைத்து ஆவணங்களையும் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த கடன் யாருக்கெல்லாம் கிடைக்கும்

தற்போது கோடக் வாடிக்கையாளர்களாக இருப்பவர்களும் புதிய கோடக் வாடிக்கையாளர்களும் கோடக் டிஜி வீட்டுக் கடன் (Kotak Digi Home Loan) வசதி மூலம் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

கோடக் டிஜி வீட்டுக் கடன் வசதி அனைத்து புதிய வீட்டுக் கடன் மற்றும் இருப்பு பரிமாற்றங்கள் மற்றும் சம்பளம், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் உள்ளிட்ட பிற வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கிறது.

ALSO READ: வீடு, வாகனம் வாங்க சரியான நேரம்: 10 நாட்களில் கடன் விகிதங்களைக் குறைத்தன 5 வங்கிகள்!!

இதற்கு எப்படி விண்ணப்பிப்பது?

1. கோடக் டிஜி வீட்டுக் கடனுக்கான விண்ணப்ப செயல்முறை மிகவும் எளிமையானது.

2. விண்ணப்பதாரர்கள், www.kotak.com இல், வீட்டுக் கடன் விண்ணப்பப் பக்கத்தில் சில தனிப்பட்ட மற்றும் சொத்து விவரங்களை வழங்க வேண்டும்.

3. பின்னர், ஒரு மேலாளர் விண்ணப்பதாரருக்கு எளிதான ஆன்லைன் செயல்முறை மூலம் வழிகாட்டுவார்.

4. டிஜிட்டல் விண்ணப்ப படிவம் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை ஆன்லைனில் சமர்ப்பித்தவுடன், கடன் 48 மணி நேரத்திற்குள் செயல்படுத்தப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படும்.

கோட்டக் மஹிந்திரா (Kotak Mahindra) வங்கியின் நுகர்வோர் சொத்துக்களின் தலைவர் அம்பு சந்த்னா கூறுகையில், “கொரோனா காலத்தில் வீட்டிலிருந்து வங்கி சேவைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு இதனால் பல நன்மைகள் கிடைக்கின்றன. மேலும் வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வங்கி என்ற வகையில், வாடிக்கையாளர்கள் தங்கள் வீடுகளின் வசதியிலிருந்து பாதுகாப்பாக வங்கி செயல்முறைகளில் ஈடுபடுவதை உறுதி செய்வதே எங்கள் நோக்கமாகும். இதை மனதில் வைத்து, கோடக் டிஜி வீட்டுக் கடனை அறிமுகம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

இது முற்றிலும் ஆன்லைன் ஒப்புதல் செயல்முறையாகும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் கனவு இல்லத்திற்கான கடன் வசதியை ஒரு சில கிளிக்குகளில் பாதுகாப்பான மற்றும் நேரடி மனித தொடர்பு இல்லாத முறையில் பெற முடியும்.

ALSO READ: Hot இடங்களில் Cool-லா வீடு வாங்கணுமா? PNB E-Auction-ல் கலந்துக்கோங்க!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News