இபிஎஃப்ஓ புதுப்பிப்பு: இபிஎஃப்ஓ சந்தாதாரர்கள் பலரின் கணக்குகளில் பிஎஃப் வட்டித் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. எனினும் சிலரது கணக்குகளில் இன்னும் இந்த தொகை வந்தது கணக்கில் காணப்படவில்லை. உங்கள் கணக்கிலும் இன்னும் வட்டித்தொகை வந்ததற்கான குறிப்புகளை காண முடியவில்லை என்றால், இந்த செய்தி உங்களுக்கானது. சிலரது கணக்கில் ஏன் இந்த தொகையின் இருப்பு தெரியவில்லை என்பது பற்றி பணியாளர் வருங்கால வைப்பு நிதியான இபிஎஃப்ஓ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது நிதி அமைச்சகமும் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.
தொழில்நுட்பம் பொறுப்பு
நிதி அமைச்சகம் இபிஎஃப்ஓ பற்றி ஒரு ட்வீட் செய்து, சில தொழில்நுட்ப புதுப்பித்தல்கள் தான் இதற்கு காரணம் என்று கூறியுள்ளது. இது குறித்து தகவல் அளித்துள்ள அமைச்சகம், பிஎஃப் சேமிப்பு மீதான வரிவிதிப்புச் சட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக, 'சாப்ட்வேர் மேம்படுத்தல்' செய்யப்பட்டதாகவும், அதன் காரணமாக, வாடிக்கையாளர்கள் இபிஎப்ஓவில் வட்டிக் கிரெடிட்டை கணக்கில் பார்க்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளது. அமைச்சகம் ட்வீட் செய்து, 'வட்டித் தொகையை பொறுத்தவரை எந்த வாடிக்கையாளருக்கும் எந்த வித வட்டி இழப்பும் ஏற்படவில்லை. அனைத்து EPF சந்தாதாரர்களின் கணக்குகளிலும் வட்டி வரவு வைக்கப்படுகிறது. இருப்பினும், இபிஎஃப்ஓ ஆல் செயல்படுத்தப்படும் மென்பொருள் மேம்படுத்தலின் காரணமாக இது தெரியவில்லை.’ என்று கூறியுள்ளது.
இன்ஃபோசிஸ் டெக்னாலஜிஸின் முன்னாள் இயக்குநர் மோகன்தாஸ் பாயின் ட்வீட்டிற்கு பதிலளிக்கும் வகையில் நிதி அமைச்சகம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது. மற்றொரு ட்வீட்டில், அமைச்சகம், ‘செட்டில்மென்ட் மற்றும் தொகையை திரும்பப் பெற விரும்பும் அனைத்து வெளிச்செல்லும் பிஎஃப் வாடிக்கையாளர்களுக்கும் வட்டியுடன் சேர்த்து தொகை வழங்கப்பட்டு வருகிறது’ என்று கூறியுள்ளது.
There is no loss of interest for any subscriber.
The interest is being credited in the accounts of all EPF subscribers. However, that is not visible in the statements in view of a software upgrade being implemented by EPFO to account for change in the tax incidence. (1/2) https://t.co/HoY0JtPjII
— Ministry of Finance (@FinMinIndia) October 5, 2022
மேலும் படிக்க | EPFO சூப்பர் செய்தி: ஊதிய வரம்பு அதிகரிக்கப்படலாம், விவரம் இதோ
மோகன்தாஸ் பாய் ட்வீட்
முன்னதாக மோகன்தாஸ் பாய் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் அலுவலகம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியைக் டேக் செய்து "அன்புள்ள EPFO, எனது வட்டி எங்கே?” என ட்வீட் செய்திருந்தார்.
எவ்வளவு வட்டி கிடைக்கிறது
அரசாங்கம் வழங்கிய தகவலின்படி, இபிஎஃப் சந்தாதாரர்கள் 2021-22 ஆம் ஆண்டிற்கான அவர்களின் ஓய்வூதிய சேமிப்புக் கணக்குகளில் 8.1 சதவீத வட்டி விகிதத்தைப் பெறுவார்கள் என்பது அறியத்தக்கது. அதே நேரத்தில், இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) 2020-21 இல் இபிஎஃப் வைப்புத்தொகைகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை 8.5 சதவீதத்திலிருந்து 2021-22 க்கு 8.1 சதவீதமாகக் குறைக்க முடிவு செய்தது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ