ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது 2022 நிதியாண்டிற்கான வட்டியை ஊழியர்களின் பிஎஃப் கணக்குகளில் வரவு வைக்க தொடங்கிவிட்டது. இதன் மூலமாக விரைவில் கிட்டத்தட்ட 7 கோடி இபிஎஃப்ஓ சந்தாதாரர்களின் பிஎஃப் கணக்குகளில் ரூ.81,000 வரை தொகையை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டுக்கான வட்டி விகிதம் 8.1 சதவீதமாக உள்ளது, இது 40 ஆண்டுகளில் இல்லாத வட்டி விகிதம் என்று செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கிறது. பிஎஃப் கணக்கில் ரூ.10 லட்சம் வைத்திருக்கும் ஊழியர்களுக்கு வட்டியாக ரூ.81,000 கிடைக்கும் மற்றும் பிஎஃப் கணக்கில் ரூ.7 லட்சம் வைத்திருக்கும் ஊழியர்களுக்கு வட்டி ரூ.56,700 கிடைக்கும். அதேபோல பிஎஃப் கணக்கில் ரூ.5 லட்சம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.40,500 வட்டி கிடைக்கும் மற்றும் கணக்கில் ரூ.1 லட்சம் வைத்திருக்கும் ஊழியர்களுக்கு ரூ.8,100 வட்டியும் கிடைக்கப்பெறும்.
மேலும் படிக்க | 10 வருடத்தில் உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்க வேண்டுமா? இதில் முதலீடு பண்ணுங்க!
1) மிஸ்டு கால் மூலம் சரிபார்த்தல்:
கணக்குதாரர்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுத்தவுடன் அவர்களுக்கு எஸ்எம்எஸ் விவரங்கள் அனுப்பப்படும். இந்த வசதியைப் பெற சந்தாதாரர்கள் யுஏஎன், பான் மற்றும் ஆதார் போன்ற விவரங்களை இணைத்திருக்க வேண்டும்.
2) எஸ்எம்எஸ் மூலம் சரிபார்த்தல்:
ஊழியர்கள் இபிஎப்ஓ-வில் யூஏஎன் ஐ பதிவு செய்திருந்தால் மட்டும் தான் இந்த வசதியைப் பயன்படுத்த முடியும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 7738299899 என்ற எண்ணுக்கு 'EPFOHO' என்ற செய்தியை அனுப்பவும், பின்னர் எஸ்எம்எஸ் மூலமாக உங்களது கணக்கு குறித்த விவரங்கள் அனுப்பப்படும். இந்த சேவை ஹிந்தி, மராத்தி, பஞ்சாபி, கன்னடம், தமிழ், பெங்காலி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் கிடைக்கின்றது.
3) மொபைல் செயலி மூலம் சரிபார்த்தல்:
- உமாங் செயலியை பதிவிறக்கி அதனை திறக்க வேண்டும்
- இபிஎஃப்ஓ-வை கிளிக் செய்யவும்
- எம்பிளாய்-சென்ட்ரிக் சர்வீஸ் பகுதிக்கு செல்லவேண்டும்.
- 'வியூ பாஸ்புக்' என்பதைக் கிளிக் செய்யவும்
- இப்போது உள்நுழைய யூஏஎன் மற்றும் பாஸ்வேர்டை உள்ளிட்ட வேண்டும்.
- பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓடிபி அனுப்பப்படும்.
- இப்போது உங்களது பிஎஃப் இருப்பை சரிபார்க்கலாம்.
4) ஆன்லைன் மூலம் சரிபார்த்தல்:
- epfindia.gov.in எனும் இபிஎஃப்ஓ-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- இ-பாஸ்புக்கிற்கான இணைப்பிற்குச் செல்லவும்.
- யூஏஎன் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி உள்நுழைந்து,சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்கள் உறுப்பினர் ஐடியைத் தேர்ந்தெடுக்கவும்.
- இப்போது இ-பாஸ்புக்கில் இருப்பை சரிபார்க்கலாம்.
மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு அசத்தல் செய்தி: மீண்டும் வருகிறதா பழைய ஓய்வூதியத் திட்டம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ