EPFO higher pension: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) அதிக ஓய்வூதியம் பெற விரும்பும் ஊழியர்களுக்காக, ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் (இபிஎஸ்) கீழ் அதிக ஓய்வூதியத்திற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதியாக மே 3 நிர்ணயம் செய்துள்ளது. மேலும் ஊழியர் மற்றும் முதலாளியின் ஊதிய விவரங்களை சரிபார்க்கும் புதிய தகவலையும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) பகிர்ந்துள்ளது. ஏப்ரல் 23-ம் தேதியன்று இபிஎஃப்ஓ வெளியிட்டிருந்த உத்தரவில், அதிக ஓய்வூதியத்திற்கான விண்ணப்பங்கள் கள அலுவலகத்தால் சரிபார்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. ஓய்வூதியத்திற்கான விண்ணப்பங்கள் அதிகரிப்பதற்கு எந்த காரணமும் வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இபிஎஃப்ஓ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அதிக ஓய்வூதியத்தைப் பெறுவதற்கான செயல்முறை தன்னிச்சையானது இல்லை என்றும், தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உறுப்பினர் தான் பொறுப்பு என்றும் அறிவித்து இருக்கிறது.
வருங்கால வைப்பு நிதியில் இருந்து ஓய்வூதிய நிதிக்கு நிதியை மாற்ற அனுமதிக்கும் ஒப்பந்தம், தரநிலை ரூ. 5,000/ ரூ.6,500-ஐ தாண்டிய ஊதியத்தில் வருங்கால வைப்பு நிதியில் முதலாளியின் பங்குக்கான சான்று மற்றும் கூட்டு விருப்பப் படிவத்துடன் பணியாளர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் ஊழியர்களின் உண்மையான ஊதியத்தில் 8.33% வரை முதலாளி மற்றும் ஊழியர்கள் பங்களிப்பு செய்ய வேண்டும். அதிக ஓய்வூதிய பெற நினைப்பவர்கள், செப்டம்பர் 1, 2014க்கு முன் உறுப்பினர்களாகி தொடர்ந்து இபிஎஃப்ஓ-வில் உறுப்பினராக இருக்க வேண்டும். ரூ.5,000 அல்லது ரூ. 6,500 ஐ விட அதிகமாக மற்றும் நிலையான சம்பளம் வழங்கிய முதலாளிகள் மற்றும் சம்பளம் பெற்ற தொழிலார்கள் விண்ணப்பிக்கலாம்.
நிலுவைத் தொகைகள் கணக்கிடப்பட்டு, நிலுவைத் தொகையை டெபாசிட் செய்ய/பரிமாற்றம் செய்ய APFC/RPFC-II/ RPFC-I ஆல் ஆர்டர் அனுப்பப்படும். பொருந்தாத சந்தர்ப்பங்களில், APFC/ RPFC-II மூலம் முதலாளி மற்றும் பணியாளர்/ஓய்வூதியம் பெறுபவருக்குத் தெரிவிக்கப்படும். தகவல்களை வழங்க ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும், ஒரு மாதத்திற்குள் முழுமையான தகவல் வரவில்லை என்றால், APFC/RPFC-II/RPFC-1 ஆல் தகுதியின் அடிப்படையில் ஆர்டர் அனுப்பப்படும் என்று இபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது. இபிஎஃப்ஓ-ன் அதிகாரபூர்வ போர்ட்டலில் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, அது இபிஎஃப்ஓ அதிகாரியால் கண்காணிக்கப்பட்டு பின்னர் முதலாளியால் கண்காணிக்கப்படும். நீங்கள் சமர்ப்பித்த ஆவணங்களிலுள்ள தகவல்கள் அனைத்தும் சரியானதா என கண்டறியப்பட்டால், தகுதியான நிலுவைத் தொகை கணக்கிடப்பட்டு மாற்றப்படும். சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் ஏதேனும் விவரங்கள் விடுபட்டு இருந்தால், இபிஎஃப்ஓ ஊழியர் மற்றும் முதலாளியை தொடர்பு கொண்டு பிழைகளை சரி செய்ய ஒரு மாத காலம் அவகாசம் வழங்கும்.
மேலும் படிக்க | 7th Pay Commission மிகப்பெரிய அப்டேட்: இன்று மாலை வரும் நல்ல செய்தி