புதுடெல்லி: வீட்டுக் கடனின் மாதத் தவணை (EMI) செலுத்த நீங்கள் சிரமப்படுகிறீர்களா? அந்த சுமையைக் குறைக்க வழி இல்லையே என்ற கவலையை விடுங்கள். வீட்டுக் கடனை வேறு வங்கிக்கு (Bank) மாற்றி உங்கள் நிதிச் சுமையை குறைக்க வழி இருக்கிறது. இதுவரை வங்கிகள் வீட்டுக் கடன்களுக்கு 8-9% வரை வட்டி வசூல்லித்தன. ஆனால் இப்போது பெரும்பாலான வங்கிகளின் வீட்டுக் கடன்கள் (Home Loans) சுமார் 7% என்ற அளவுக்கு குறைந்துவிட்டன.
இத்தகைய சூழ்நிலையில், உங்கள் பழைய வீட்டுக் கடனை (Home Loan) வேறொரு வங்கிக்கு மாற்றினால், உங்கள் ஈ.எம்.ஐ சுமையை குறைக்கலாம். ஒரு வங்கியில் இருந்து மற்றொன்றுக்கு கடனை மாற்ற வேண்டும் என்றால் அதற்கு முன்னதாக திட்டமிடுவதை சற்று முன்கூட்டியே செய்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் 4 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுக் கடனை வாங்கினீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது, அதாவது 2016 இல், வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் (Interest Rate) 9.25% ஆக இருந்தன. இப்போது நீங்கள் வீட்டுக் கடனை ஒரு புதிய வங்கிக்கு (Bank) மாற்றி 7% ஆக மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது. இது உங்கள் EMI-இல் மிகப் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்பது தெரியுமா?
Also Read | Gold Loan-ல் சிறப்பு சலுகைகளை வழங்குகிறது SBI
வீட்டுக் கடன் மாற்றும்போது EMI வித்தியாசம்
ஏற்கனவே வீட்டுக் கடன் இருக்கும் வங்கி
ஆண்டு 2016
கடன் தொகை 30 லட்சம்
வட்டி விகிதம் 9.25%
கடன் காலம் 20 ஆண்டுகள்
இ.எம்.ஐ தொகை 27,476 ரூபாய்
இப்போது 2020 இல் நீங்கள் வீட்டுக் கடனை புதிய வங்கிக்கு மாற்றினால் உங்கள் கடன் நிலுவை 26 லட்சம் ரூபாயாக இருக்கும்
புதிய வங்கி
ஆண்டு 2020
கடன் தொகை 26 லட்சம்
6.90%
கடன் காலம் 16 ஆண்டுகள்
இ.எம்.ஐ தொகை 22,400 ரூபாய்
Also Read | வீடு வாங்குபவர்களுக்கு வருமான வரியில் பெரிய நிவாரணம் பயன் என்ன
அதாவது, உங்கள் ஈ.எம்.ஐ (EMI) ஒவ்வொரு மாதமும் சுமார் 5000 ரூபாய் வரை குறையும். இதில் நீங்கள் செலுத்தும் வட்டியில் (Loan Interest) எவ்வளவு மிச்சமாகும் தெரியுமா?
புதிய வங்கிக்கு வீட்டுக் கடனுக்கு 16 ஆண்டுகளில் செலுத்தப்பட்ட மொத்த வட்டி 17,00,820 ரூபாய்.
பழைய வங்கிக்கு (Bank) வீட்டுக் கடனுக்கு 16 வருட காலத்திற்கு செலுத்தப்பட வேண்டிய 23,90,488 ரூபாய்.
வட்டியில் சேமிப்பு 23,90,488 - 17,00,820 = 6.89 லட்சம் ரூபாய்
அதாவது, மீதமுள்ள கடன் காலத்தில், கடனை மாற்றுவதன் மூலம் ரூ .6.9 லட்சம் வரை நீங்கள் சேமிக்கலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு உங்கள் வீட்டுக் கடனுக்கு செலுத்தும் மாதத் தவணையை குறைத்துக் கொள்ளுங்கள்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR