நிறுவன FD என்றால் என்ன? வங்கி FDயில் இருந்து இது மாறுபட்டதா?

கார்ப்பரேட் அல்லது நிறுவன FDகள் என்பது, நிதி நிறுவனங்கள், வீட்டு நிதி நிறுவனங்கள் அல்லது பிற வகை NBFCகள் போன்ற நிறுவனங்களால் வழங்கப்படும் FDகள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 10, 2022, 08:04 PM IST
  • வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட்
  • நிறுவனங்களின் நீண்டகால ஃபிக்ஸட் டெபாசிட்
  • முதலீட்டிற்கான சிறந்த வழி எஃப்.டி
நிறுவன FD என்றால் என்ன? வங்கி FDயில் இருந்து இது மாறுபட்டதா? title=

Company / Corporate FD: கார்ப்பரேட் அல்லது நிறுவன FDகள் என்பது, நிதி நிறுவனங்கள், வீட்டு நிதி நிறுவனங்கள் அல்லது பிற வகை NBFCகள் போன்ற நிறுவனங்களால் வழங்கப்படும் FDகள் ஆகும்.

பல நிறுவனங்கள் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்கள் பொது மக்களிடம் இருந்து நிதி திரட்டுவதற்கான ஒரு வழி கார்ப்பரேட் எஃப்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டெர்ம் டெபாசிட்டுகள் ICRA, CARE, CRISIL போன்ற ரேட்டிங் ஏஜென்சிகளால் அவற்றின் நம்பகத்தன்மை தொடர்பாக மதிப்பிடப்படுகின்றன என்று பேங்க்பஜார் கூறுகிறது. 

கார்ப்பரேட் அல்லது நிறுவன FDகள் என்பது, நிதி நிறுவனங்கள், வீட்டு நிதி நிறுவனங்கள் அல்லது பிற வகை NBFCகள் போன்ற நிறுவனங்களால் வழங்கப்படும் FDகள் ஆகும்.

மேலும் படிக்க | ஆயுள் காப்பீடு எடுக்கும்போது கவனம் தேவை: இந்த தவறுகளால் சிக்கல் வரலாம்

இந்தியாவில் முதலீடு செய்வதற்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான வழிகளில் ஒன்றாக இந்த FDக்கள் கருதப்படுகின்றன. நீண்ட கால முதலீட்டிற்கும் இது ஒரு நல்ல வழியாகவே பார்க்கப்படுகிறது.

world
கார்ப்பரேட் FD நன்மைகள் 
அதிக வட்டி விகிதம்

நிறுவன FDக்களுக்கு அதிக வட்டி கிடைக்கும். வங்கிகள் கொடுக்கும் நீண்டகால நிலையான வைப்புத்தொகைக்கான வட்டியுடன் ஒப்பிடும்போது, கார்பரேட் நீண்டகால வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் கணிசமான அளவில் அதிகமாக இருக்கிறது.  

மேலும் படிக்க | லாங் டிரைவ் போறிங்களா? டோல்கேட் இல்லாத வழிகளை கண்டுபிடிப்பது எப்படி?

வட்டி செலுத்தும் விருப்பம்
கார்பரேட் நீண்டகால வைப்புத்தொகைக்கான வட்டியை  பெறுவதற்கு முதலீட்டாளர்களுக்கு பல தெரிவுகள் கிடைக்கிறது.  மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு, ஆண்டு என எந்தவிதத்தில் வேண்டுமானாலும் வட்டியைப் பெறும் வாய்ப்பு உண்டு.

கடன் மதிப்பீடுகள் 
கிட்டத்தட்ட அனைத்து நிறுவன FDகளும் ICRA, CARE, CRISIL போன்ற தன்னாட்சி நிறுவனங்களால் மதிப்பிடப்படுகின்றன. எனவே, வாடிக்கையாளர்கள் சிறந்த விகிதத்தில் எஃப்டியை எளிதாக தேர்வு செய்ய முடியும்.

எளிதான கடன்
பெரும்பாலான நிறுவன FDகளில், முதிர்வுத் தொகையில் 75% வரை கடன்கள் வழங்கப்படுகின்றன. முதிர்வுக்கு முன் பணம் எடுப்பதற்கு இங்கு அபராதத் தொகையும் குறைவு என்பது இதன் சிறப்பம்சம். இது பணப்புழக்கத்தை பராமரிக்க உதவுகிறது.  

மேலும் படிக்க | ரயில்பயணத்தின் போது உங்கள் டிக்கெட் தொலைத்துவிட்டதா

நிறுவனத்தின் FD மீதான வட்டி விகிதம்

நிறுவனத்தின் கால வட்டி விகிதம்
ஸ்ரீராம் சிட்டி யூனியன் நிதி  12-60 மாதங்கள் 7.48%
ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ்  12-60 மாதங்கள்  7.48%
PNB வீட்டுத் திட்டம்  12-120 மாதங்கள்  6.85 சதவீதம்
பஜாஜ் ஃபைனான்ஸ்  12-60 மாதங்கள்  6.80%
HDFC  33-99 மாதம்  6.50%
ஐசிஐசிஐ ஹோம் ஃபைனான்ஸ்  12-120 மாதங்கள்  6.70 சதவீதம்
மஹிந்திரா ஃபைனான்ஸ்  12-60 மாதங்கள்  6.50%
எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ்  12.60 மாதங்கள்  6.00 சதவீதம்

மேலும் படிக்க | மீண்டும் சொதப்பிய சிஎஸ்கே! பிளே ஆப் வாய்ப்பு பறிபோனதா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News