புதுடெல்லி: கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுநோயைத் தடுப்பதற்காக உலகம் முழுவதும் செயல்படுத்தப்பட்ட லாக்-டவுன் காரணமாக உலகளாவிய ஆபத்தான மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது ஏற்பட உள்ள மந்தநிலையின் தீவிரம் 2008 மந்தநிலையை விட மோசமாக இருக்கும் என எச்சரிக்கை விடப்படுகிறது.
உலகளாவிய மந்தநிலை வந்தால், ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் மூடப்பட்டு வேலைகளை இழக்கும் அபாயம் உள்ளது. சீனாவில் மூன்று மாதங்களாக அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவால் பெரும்பாலான நிதி ஆராய்ச்சி நிறுவனங்கள் பொருளாதார மந்தநிலையை எட்டியுள்ளது என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.
எச்சரிக்கும் சர்வதேச நாணய நிதியம்:
சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப் - IMF) நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கூறுகையில், "இப்போது நாம் அனைவரும் மந்தநிலையில் இருக்கிறோம். இது உலக நிதி நெருக்கடியை விட மோசமானது" என்று கூறினார். மேலும் உலகளவில் கோவிட் -19 மத்தியில் மக்களின் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் காப்பாற்றுவதற்காக ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டிய அவசியம் உள்ளது என்றும் ஜார்ஜீவா வலியுறுத்தினார்.
முதலில் சீனா, இப்போது அமெரிக்காவையும் பாதிக்கும் லாக்-டவுன்:
ஜனவரி முதல் மார்ச் வரை சீனாவின் பொருளாதாரம் முற்றிலுமாக ஸ்தம்பித்துவிட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இப்போது கடந்த மாதத்திலிருந்து, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் லாக்-டவுன் செய்யப்பட்டு உள்ளன. இத்தகைய சூழ்நிலையில், உலக மந்தநிலையைத் தவிர்ப்பது மிகவும் கடினம். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, வளரும் நாடுகள் மிகவும் மோசமாக பாதிக்கப்படப் போகின்றன என்று உலக வங்கி ஏற்கனவே எச்சரித்துள்ளது.
கொரோனா வைரஸின் முதல் வழக்கு டிசம்பர் 30 ஆம் தேதி சீனாவின் வுஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர், கடந்த மூன்று மாதங்களாக இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. மூன்று மாதங்களுக்குள் உலகின் 181 நாடுகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த வைரஸ் காரணமாக இதுவரை 11 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 58 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.