Post Office RD: மாதம் ரூ.5000 முதலீட்டை... ரூ.3.57 லட்சமாக ஆக்கும் ஜாக்பாட் திட்டம்!!

Post Office RD: தபால் அலுவலக RD திட்டம், ஒரு உத்தரவாதமான வருமானம் தரும் முதலீட்டு திட்டமாகும். இதில் ஒருவர் மாதந்தோறும் டெபாசிட் செய்து, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வுத் தொகையைப் பெறலாம்

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 19, 2024, 06:47 PM IST
  • தபால் அலுவலகம் நிறைய சிறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்துகிறது.
  • அஞ்சல் அலுவலக RD-யில் ஒருவர் தனிநபர் அல்லது கூட்டுக் கணக்கைத் திறக்கலாம்.
  • அதிகபட்ச வைப்புத்தொகைகளுக்கு வரம்பு இல்லை.
Post Office RD: மாதம் ரூ.5000 முதலீட்டை... ரூ.3.57 லட்சமாக ஆக்கும் ஜாக்பாட் திட்டம்!! title=

Post Office RD: நீண்ட காலத்திற்குச் சேமிப்பதற்கான ஈஸியான வழியில் ஒன்று, தொடர்ச்சியான வைப்புத் தொகையில் (Recurring Deposit) முதலீடு செய்வது. நல்ல வருமானமும் இதில் கிடைப்பதால் பலருக்கு விருப்பமான முதலீட்டு முறையாக உள்ளது . RD என்று பொதுவாக அழைக்கப்படும் இதில் மாத தவணைகளாக, பணத்தை முதலீடு செய்யலாம். தொடர் வைப்புத்தொகை (RD) எப்போதும் பணத்தைச் சேமிப்பதற்கும் முதலீடு செய்வதற்கும் மிகவும் விருப்பமான மற்றும் பாதுகாப்பான வழிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 

இதில், தேசிய சேமிப்பு தொடர் வைப்பு கணக்கு, அல்லது தபால் அலுவலக RD திட்டம், ஒரு உத்தரவாதமான வருமானம் தரும் முதலீட்டு திட்டமாகும். இதில் ஒருவர் மாதந்தோறும் டெபாசிட் செய்து, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வுத் தொகையைப் பெறலாம். இத்திட்டத்தில் 6.7 சதவீத வருடாந்திர வட்டி கிடைக்கும். மேலும் இதற்கு கடன் வசதியையும் வழங்குகிறது.

பணத்தைச் சேமிக்க மக்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், தபால் அலுவலகம் நிறைய சிறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்துகிறது. தேசிய சேமிப்பு தொடர் வைப்பு கணக்கு அல்லது 5 ஆண்டு அஞ்சல் அலுவலகம் தொடர் வைப்பு கணக்கு (RD) திட்டத்தில் இங்கே, ஒரு முதலீட்டாளர் பிரதி மாதம் டெபாசிட்களைச் செய்யலாம். ஐந்தாண்டு லாக்-இன் காலத்தின் முடிவில் முதிர்வுத் தொகையைப் பெறலாம். இது உத்தரவாதமான வருவாய்த் திட்டமாக இருப்பதால், பாதுகாப்பான முதலீட்டை விரும்புபவர்கள் மற்றும் சந்தையுடன் இணைக்கப்பட்ட வழிகளில் முதலீடு செய்ய விரும்பாதவர்கள், அஞ்சல் அலுவலக RD திட்டத்தில் முதலீடு செய்கிறார்கள்.

தபால் அலுவலகம் தவிர, பல வங்கிகள் RD முதலீட்டு திட்டங்களை வழங்குகின்றன. இருப்பினும், தபால் அலுவலகம் மற்றும் வங்கிகளில் RD களின் வட்டி விகிதங்கள் வேறுபடலாம். ஒருவர் ரூ.5,000, ரூ.10,000, மற்றும் ரூ.15,000 என்ற அளவில் அஞ்சலக RD திட்டத்தில் முதலீடு செய்தால் முறையே ரூ.3.57 லட்சம், ரூ.7.14 லட்சம் மற்றும் ரூ.10.71 லட்சம் வரை பெறலாம். நாங்கள் உங்களை கணக்கீடுகளுக்கு அழைத்துச் செல்வதற்கு முன், தபால் அலுவலக RD திட்டத்தின் சில அம்சங்களை அறிந்து கொள்ளுங்கள்.

போஸ்ட் ஆஃபீஸ் ஆர்டி கணக்கை தொடக்கும் வழிமுறை

அஞ்சல் அலுவலக RD-யில் ஒருவர் தனிநபர் அல்லது கூட்டுக் கணக்கைத் திறக்கலாம். ஒரு மைனர் சார்பாகவோ அல்லது மனநிலை சரியில்லாத நபர் சார்பாகவோ அல்லது 10 வயதுக்கு மேற்பட்ட மைனர் சார்பாகவோ ஒரு பாதுகாவலர் ஒரு கணக்கைத் தொடங்கலாம்.

தபால் அலுவலகம் RD: வட்டி விகிதம்

தபால் அலுவலகத் RD திட்ட முதலீடுகளுக்கு ஆண்டுதோறும் 6.7 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும்.

தபால் அலுவலக RD: குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வைப்புத்தொகை

தபால் அலுவலகத் திட்டத்தில் குறைந்தபட்ச வைப்புத் தொகை ஒரு மாதத்திற்கு ரூ. 100 அல்லது ரூ. 10 இன் மடங்குகளில் ஏதேனும் ஒரு தொகை. இருப்பினும், அதிகபட்ச வைப்புத்தொகைகளுக்கு வரம்பு இல்லை. 

மேலும் படிக்க | HDFC Vs ICICI Vs Axis வங்கி ... எது பெஸ்ட் முதலீடு... ஒரு ஒப்பீடு..!

தபால் அலுவலக RD: முதிர்வு காலம்

RD கணக்கிற்கான முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள், ஆனால் கணக்கை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். கணக்கைத் தொடங்கிய நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, தேவைப்பட்டால் ஒருவர் முதர்வு காலத்திற்கு முன் கணக்கை மூடலாம். தபால் அலுவலக RD: RD கணக்கு வைத்திருப்பவர் கணக்கில் உள்ள இருப்புத் தொகையில் 50 சதவீதம் வரை கடன் வசதியைப் பெறலாம்.

தபால் அலுவலக RD: மாதம் ரூ 5000, ரூ 10000 மற்றும் ரூ 15000 மாத முதலீடுகளில், ஐந்து ஆண்டுகளுக்கு (60 மாதங்கள்) முதலீடு செய்தால் கிடைக்கும் வருமான விபரத்தை அறிந்து கொள்ளலாம்.

1. மாதம் 5,000 ரூபாய் முதலீடு செய்தால், உங்கள் மொத்த வைப்புத்தொகை ரூ. 3,00,000 ஆகவும், பெறும் வட்டி ரூ. 56,830 ஆகவும், உங்கள் மொத்த முதிர்வுத் தொகை ரூ. 3,56,830 என்ற அளவிலும் இருக்கும்.

2. ஐந்தாண்டுகளுக்கு மாதம் ரூ.10,000 முதலீடு செய்தால், உங்களின் மொத்த வைப்புத்தொகை ரூ.6,00,000 ஆகவும், பெறும் வட்டி ரூ.1,13,659 ஆகவும், முதிர்வுத் தொகை ரூ.7,13,659 என்ற அளவிலும் இருக்கும்.

3. உங்கள் முதலீட்டுத் தொகையை மாதம் ரூ.15,000 ஆக உயர்த்தி, அதை ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், உங்கள் மொத்த வைப்புத் தொகை ரூ.9,00,000 ஆகவும், வட்டித் தொகை ரூ.1,70,492 ஆகவும், முதிர்வுத் தொகை ரூ.10,70,492 என்ற அளவிலும் இருக்கும். 

மேலும் படிக்கEPFO Rule Change: பணம் எடுக்கும் விதிகளில் முக்கிய மாற்றம், சுற்றறிக்கை வெளியானது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News