Business Idea: ரூ. 3 லட்சம் முதலீடு மாதம் ரூ.50 ஆயிரம் வருமானம்; சூப்பரான தொழில்

3 லட்சம் ரூபாய் முதலீடு செய்து தொழில் தொடங்கினால், நீங்கள் 50 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கும் சூப்பரான தொழில் குறித்த தகவலை தெரிந்து கொள்வோம்.

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 27, 2022, 04:37 PM IST
  • சொந்தமாக தொழில் தொடங்க முயற்சிக்கிறீர்களா?
  • உங்களுக்கான அருமையான தொழில் வாய்ப்பு
Business Idea: ரூ. 3 லட்சம் முதலீடு மாதம் ரூ.50 ஆயிரம் வருமானம்; சூப்பரான தொழில் title=

Business Idea: நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க திட்டமிட்டால், பெரிய லாபம் ஈட்டக்கூடிய வணிக யோசனை ஒன்று இருக்கிறது. இந்த வணிகத்தின் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இதை உங்கள் வீட்டிலிருந்தும் தொடங்கலாம். அதிக முதலீடு தேவையில்லை. குறைந்த பணத்தில் இந்த தொழிலைத் தொடங்கலாம். அந்த தொழில் என்னவென்றால் தேன் ஜாம் தயாரிக்கும் தொழில். காதி கிராமத் தொழில்கள் ஆணையம் (KVIC) இந்த வணிகத்தைப் பற்றிய முழுமையான அறிக்கையைத் தயாரித்து வெளியிட்டுள்ளது. 

தேன் ஜாம் தயாரிக்கும் தொழில்

தேன் அதன் ஊட்டச்சத்து பண்புகளுக்கு பெயர் பெற்றது. பல்வேறு உணவு மற்றும் மருத்துவ பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. தேன் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், இந்தியாவில் பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு நல்ல கிராக்கி உருவாகியிருக்கிறது. பலதரப்பட்ட பொருட்களில் தேனைப் பயன்படுத்துவது மூலம் அதன் நுகர்வு அதிகரிக்கும். இது தேன் விற்பனையை அதிகரிக்க உதவுவதோடு, தேனீ வளர்ப்பவர்களின் வருமானத்தையும் அதிகரிக்கும். இதனால் தேன் அடிப்படையிலான மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தொழில் கிராமப்புறங்களில் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்கும். அத்தகைய சூழ்நிலையில், இந்த வணிகம் லாபகரமானதாக நிரூபிக்க முடியும்.

தேன் ஜாம் செய்யும் முறை 

தேன் ஜாம் செய்யும் முறை மிகவும் எளிதானது. 3 மாம்பழம், 1 நடுத்தர அளவிலான பப்பாளி, ஒரு அன்னாசி, 5 கொய்யாப்பழம் ஆகியவற்றை எடுத்து நன்கு சுத்தம் செய்து தண்ணீரில் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். மிக்சர் கிராண்டரின் உதவியுடன் அந்த பழங்களை ஜூஸாக மாற்ற வேண்டும். பழத்தின் ஜூஸை ஒரு பாத்திரத்தில் வைத்து சர்க்கரை மற்றும் சிட்ரிக் அமிலம் சேர்க்கவும். இதன்பின்னர் அதனை 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். அதனுடன் 25 மில்லி பெக்டின் சேர்த்து, தொடர்ந்து கிளறியவாறு 2 நிமிடம் கொதிக்க வைக்கவும். இப்போது கொதிப்பதை நிறுத்தி, அதில் 2 கிராம் பொட்டாசியம் மெட்டாபைசல்பைட் ப்ரிசர்வேடிவ்களை சேர்க்கவும். சிறிய அளவு தண்ணீர் சேர்த்த பிறகு, பாத்திரத்தை இறுக்கமாக மூடவும். ஜாம் ஆறியதும், அதனுடன் தேன் சேர்த்து நன்கு கலக்கவும். அதன் பிறகு, அதை 500 மில்லி கண்ணாடி பாட்டில்களில் ஜாமை நிரப்பி சீல் வைக்கவும்.

திட்ட செலவு

காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் (KVIC) தயாரித்த திட்ட சுயவிவர அறிக்கையின்படி, தேன் ஜாம் தயாரிக்கும் தொழிலைத் தொடங்க உங்களுக்கு சொந்த இடம் இருக்க வேண்டும். இடம் இல்லையென்றால் வாடகைக்கு விடலாம். 1.50 லட்சம் செலவில் உபகரணங்கள் வாங்க செலவிட வேண்டும். மேலும், ரூ.1.65 லட்சம் செயல்பாட்டு மூலதனம் தேவைப்படும். இதனால் மொத்த திட்ட செலவு ரூ.3,15,000 ஆகும். 

வருமானம் எவ்வளவு?

திட்ட அறிக்கையின்படி, 100 சதவீத திறனை பயன்படுத்தி உற்பத்தி செய்தால், ஆண்டுக்கு 7 லட்சம் ரூபாய் உற்பத்தி செய்ய முடியும். உத்தேசிக்கப்பட்ட விற்பனைச் செலவு ரூ.17,50,000. மொத்த உபரி ரூ.7,21,000 ஆக இருக்கும். மதிப்பிடப்பட்ட நிகர உபரி ஆண்டுக்கு ரூ.7,06,000. அதாவது, ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.60,000 சம்பாதிக்கலாம். கட்டிடம் கட்டுவதற்கு செலவழிக்காமல் வாடகைக்கு எடுத்தால், உங்கள் திட்டச் செலவு குறையும். மூலதனச் செலவினங்களின் மீதான வட்டியும் குறைந்து உங்கள் லாபம் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை வாய்ப்பு; கல்வித் தகுதி இதுதான் - உடனே விண்ணப்பியுங்கள்

மேலும் படிக்க | பஞ்சாப் வங்கியின் முக்கிய அறிவிப்பு; செப்டம்பர் 1 முதல் உங்கள் கணக்கு மூடப்படும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News