JanDhan Account: அரசின் பெரிய பரிசு, ரூ. 10,000 கிடைக்கும், இப்பவே இதை பண்ணுங்க

PM Jan Dhan Account: பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை நாடு முழுவதும் 47 கோடிக்கும் அதிகமான கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 15, 2023, 11:28 AM IST
  • இந்த அரசு கணக்கை நீங்கள் தனியார் அல்லது பொதுத்துறை அல்லது அரசு வங்கியில் எங்கு வேண்டுமானாலும் தொடங்கலாம்.
  • இது தவிர, உங்களிடம் ஏற்கனவே சேமிப்புக் கணக்கு இருந்தால், அந்தக் கணக்கையும் ஜன்தன் கணக்காக மாற்றலாம்.
  • இந்தக் கணக்கைத் திறக்க உங்களுக்கு 10 வயது அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
JanDhan Account: அரசின் பெரிய பரிசு, ரூ. 10,000 கிடைக்கும், இப்பவே இதை பண்ணுங்க title=

பிரதம மந்திரி ஜன்தன் கணக்கு:  நாட்டு மக்களின் நமைக்காக மத்திய அரசால் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் ஏழைகளுக்கு நிதி உதவி முதல் இலவச ரேஷன் வரை பல வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தற்போது பெரும் செய்தி வந்துள்ளது. ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு மொத்தமாக ரூ.10,000 -ஐ வழங்குகிறது. நாட்டில் ஜன் தன் கணக்கு வைத்திருக்கும் 47 கோடிக்கும் அதிகமானவர்கள் இதன் பலனைப் பெறுவார்கள். ஆனால் நீங்கள் இந்த தொகையை பெற விண்ணப்பிக்க வேண்டும். அரசாங்கம் வழங்கும் 10,000 ரூபாய் தொகை யாருக்கு கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

47 கோடி மக்கள் பயன் பெறுவார்கள்

பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை நாடு முழுவதும் 47 கோடிக்கும் அதிகமான கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்போது அரசு பிஎம் ஜன்தன் கணக்கில் 10,000 ரூபாய் தொகையை அளிக்கின்றது. இதனுடன், இந்தக் கணக்கில் காப்பீடு செய்யும் வசதியையும் அரசு வழங்கியுள்ளது.

10,000 ரூபாய் பெறுவது எப்படி?

நீங்களும் ஜன்தன் கணக்கைத் திறந்திருந்தால், அரசாங்கத்திடம் இருந்து உங்களுக்கு ஓவர் டிராஃப்ட் வசதி கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த வசதியின் கீழ், உங்கள் கணக்கில் ஒரு ரூபாய் கூட இல்லாவிட்டாலும், 10,000 ரூபாய் பெறலாம். முன்னதாக ஓவர் டிராஃப்ட் வசதியில் 5000 ரூபாய் மட்டுமே கிடைத்தது, ஆனால் அரசாங்கம் இந்த வரம்பை 10,000 ஆக உயர்த்தியுள்ளது.

மேலும் படிக்க | 7th Pay Commission அட்டகாசமான செய்தி: மீண்டும் ஒரு டிஏ ஹைக், மீண்டும் ஊதிய உயர்வு

திட்டத்தின் சிறப்பு என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்:

- 18 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைவரும் இதில் பங்கேற்கலாம்.

-  இந்த திட்டத்தின் பணம் 60 வயதில் கிடைக்கும்.

- இதில் ஆண்டுக்கு 36000 ரூபாய் டிரான்ஸ்ஃபர் செய்யப்படுகிறது.

- அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுகின்றனர்.

- உங்கள் மாத வருமானம் 15000 ரூபாய்க்கு குறைவாக இருந்தால் மட்டுமே நீங்கள் இதை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த கணக்கை எங்கு திறக்கலாம்?

இந்த அரசு கணக்கை நீங்கள் தனியார் அல்லது பொதுத்துறை அல்லது அரசு வங்கியில் எங்கு வேண்டுமானாலும் தொடங்கலாம். இது தவிர, உங்களிடம் ஏற்கனவே சேமிப்புக் கணக்கு இருந்தால், அந்தக் கணக்கையும் ஜன்தன் கணக்காக மாற்றலாம். இந்தக் கணக்கைத் திறக்க உங்களுக்கு 10 வயது அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | IRCTC: ரயில் தட்கல் டிக்கெட் எடுக்கும் முன்பு இதையெல்லாம் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News