Indian Railways முக்கிய அப்டேட்: இரவு பயணத்திற்கான விதிகளில் மாற்றம்.... பயணிகள் ஹேப்பி

Indian Railways: சமீபத்தில், பயணிகள் நிம்மதியாக உறங்குவதை உறுதி செய்யும் முயற்சியில் இந்திய ரயில்வே இரவு விதிகளை புதுப்பித்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 28, 2023, 01:28 PM IST
  • இந்திய இரயில்வேயின் இரவு நேர பயண விதிகள்.
  • இரவில் பயணிக்கும் பயணிகள் இந்த விதிகளை தெரிந்துகொள்வது அவசியமாகும்.
  • ஏசி கோச்சில் பயணிக்கும் பயணிகள் அதிகபட்சமாக 70 கிலோ லக்கேஜ்களை எடுத்துச் செல்லலாம்.
Indian Railways முக்கிய அப்டேட்: இரவு பயணத்திற்கான விதிகளில் மாற்றம்.... பயணிகள் ஹேப்பி title=

இந்தியன் ரயில்வே: இந்தியன் ரயில்வே நம் நாட்டு மக்களின் போக்குவரத்தின் உயிர் நாடியாக இருந்து வருகிறது. மக்கள் தொகை அதிகம் உள்ள நமது நாட்டில், மக்களின் போக்குவரத்தை பொறுத்தவரையில், ரயில்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. ரயிலில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக இந்தியன் ரயில்வே பல வித வசதிகளை செய்கிறது. அவ்வப்போது பல புதிய விதிகள் இயற்றப்படுகின்றன. சில விதிகள் மாற்றப்படுகின்றன. கோடிக்கணக்கான பயணிகளுக்கு சிறப்பு நிபந்தனைகளின் கீழ் சிறப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன.  

இந்திய இரயில்வேயின் இரவு நேர பயண விதிகள்

இந்திய இரயில்வே உலகின் பரபரப்பான நெட்வொர்க்குகளில் ஒன்றாகும். கோடிக்கணக்கான மக்கள் தினசரி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்க இதைப் பயன்படுத்துகின்றனர். கணிசமான அளவு பயணிகள் இரவில் பயணம் செய்கிறார்கள். இந்திய ரயில்வே பயணத்தின் போது வசதியை உறுதிப்படுத்த பல வசதிகளை வழங்குகிறது. பயணிகளின் வசதியை உறுதி செய்வதற்காக, அதிகாரிகளும் சில விதிகளை அமல்படுத்துகின்றனர். சமீபத்தில், பயணிகள் நிம்மதியாக உறங்குவதை உறுதி செய்யும் முயற்சியில் இந்திய ரயில்வே இரவு விதிகளை புதுப்பித்துள்ளது. இந்த விதிகள் வந்தே பாரத், ராஜ்தானி உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் பொருந்தும். இரவில் பயணிக்கும் பயணிகள் இந்த விதிகளை தெரிந்துகொள்வது அவசியமாகும்.

இரவு நேர பயணம் செய்யும் பயணிகள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விதிகள் இதோ:

- இரவு நேர விளக்கு (நைட் லேம்ப்) தவிர, எந்த விளக்குகளையும் பயன்படுத்த அனுமதி இல்லை.

- இரவு 10 மணிக்குப் பிறகு பயணிகள் சத்தமாகப் பேச அனுமதி இல்லை.

- நடு - பெர்த் (மிடில் பெர்த்) பயணிகள் தங்கள் இருக்கையைத் திறப்பதை கீழ்-பெர்த் (லோயர் பர்த்) சக பயணிகளை நிறுத்த முடியாது.

மேலும் படிக்க | ரயில்வே தந்த முக்கிய அப்டேட்: இந்த விதிகளில் மாற்றம்.. பயணிகளுக்கு இனி சிரமம்

- ஆன்லைன் உணவு சேவைகள் இரயிலில் இரவு 10 மணிக்குப் பிறகு உணவு வழங்க முடியாது. இருப்பினும், இ-கேட்டரிங் சேவைகள் மூலம் இரவிலும் இரயிலில் உங்கள் உணவு அல்லது காலை உணவை முன்கூட்டியே ஆர்டர் செய்யலாம்

- இரவு 10 மணிக்குப் பிறகு, TTE பயணிகளின் டிக்கெட்டை செக் செய்ய முடியாது

இந்தியன் ரயில்வே லக்கேஜ் விதி:

ஏசி கோச்சில் பயணிக்கும் பயணிகள் அதிகபட்சமாக 70 கிலோ லக்கேஜ்களை எடுத்துச் செல்லலாம். ஸ்லீப்பர் வகுப்பில் 40 கிலோ மற்றும் இரண்டாம் வகுப்பில் 35 கிலோ லக்கேஜ் வரை இலவசமாக எடுத்துச் செல்லலாம். ஏசி வகுப்பில் கூடுதல் லக்கேஜ் கட்டணத்தை செலுத்தி, பயணிகள் 150 கிலோ வரை எடுத்துச் செல்லலாம். இப்படு கூடுதல் கட்டணம் செலுத்தி ஸ்லீப்பரில் 80 கிலோ மற்றும் செகண்ட் சிட்டிங்கில் 70 கிலோ சமான்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த விதிகளை யாரேனும் பின்பற்றவில்லை எனில், அதிகாரிகள் அபராதம் விதித்து உரிய நடவடிக்கை எடுக்கலாம். சக பயணிகளால் ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால், பயணிகள் TTE (Travelling Ticket Examiner) இடம் உதவி பெறலாம்.

ரயில் அட்டவணை, PNR நிலை மற்றும் நேரலை ரயில் இயங்கும் நிலை பற்றிய விஷயங்களைத் தெரிந்துகொள்ள, 'ரயில் மித்ராவை' (RailMitra) பயன்படுத்துமாறு பயணிகளை இந்திய ரயில்வே கேட்டுக்கொள்கிறது. AI-இயக்கப்படும் இந்த செயலியைப் பயன்படுத்தி பயணிகள் உணவு ஆர்டர் செய்யலாம், ஏதேனும் புகார் இருந்தால், அவற்றையும் பதிவு செய்யலாம். 

மேலும் படிக்க | அடிச்சது ஜாக்பாட்.. மூத்த குடிமக்கள் இனி ரயிலில் இந்த வசதிகள் ஃப்ரீ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News