Budget 2024: சாமானியர்களுக்கு நிவாரணம் தரும் அறிவிப்புகள் வருமா? நிதி அமைச்சர் கூறியது என்ன?

Budget 2024: நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் இந்த பட்ஜெட் மீது அதிக எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர். வரவிருக்கும் பட்ஜெட்டைப் பொறுத்தவரை, இந்த முறை அரசாங்கத்திடமிருந்து ஓரளவு நிவாரணம் கிடைக்கும் என்று சாமானிய மக்கள் (Common Man) நம்புகிறார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 28, 2023, 03:12 PM IST
  • நாட்டின் அனைத்து தரப்பினரும் பொது பட்ஜெட் மீது அதிக எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர்.
  • வரி செலுத்துவோர் பிரிவு 80C -இன் வரம்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.
  • பழைய வரி விதிப்பு முறை தொடருமா?
Budget 2024: சாமானியர்களுக்கு நிவாரணம் தரும் அறிவிப்புகள் வருமா? நிதி அமைச்சர் கூறியது என்ன? title=

Budget 2024: இன்னும் சில நாட்களில் மத்திய பட்ஜெட் 2024 (Union Budget 2024) தாக்கல் செய்யப்படவுள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1, 2024 அன்று இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வார். அவர் தொடர்ந்து ஆறாவது முறையாக பொது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். மத்தியில் உள்ள மோடி அரசாங்கத்தின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின் கடைசி பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இதற்குப் பிறகு நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், 2024 பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் ஒரு இடக்கால பட்ஜெட்டாக இருந்தாலும், இதற்கான முக்கியத்துவமும் அதிகமாக உள்ளது. 

நாட்டின் அனைத்து தரப்பினரும் பொது பட்ஜெட் மீது அதிக எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர் (Budget 2024 Expectations)

நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் இந்த பட்ஜெட் மீது அதிக எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர். வரவிருக்கும் பட்ஜெட்டைப் பொறுத்தவரை, இந்த முறை அரசாங்கத்திடமிருந்து ஓரளவு நிவாரணம் கிடைக்கும் என்று சாமானிய மக்கள் (Common Man) நம்புகிறார்கள். இந்த பட்ஜெட் தேர்தலுக்கு முன் வருவதால், இந்த பட்ஜெட் அரசுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். தேர்தல் ஆண்டு என்பதால், பொது பட்ஜெட்டில் மக்களை மகிழ்விக்கும் வகையில், அரசு தனது ஓட்டு வங்கியை ஈர்க்க அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊதியம் பெறும் வகுப்பினர், பெண்கள், விவசாயிகள், வரி செலுத்துவோர் மற்றும் இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த பட்ஜெட்டில் அரசிடம் இருந்து நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது, ​​தங்களுக்கும் ஏதாவது சில சிறப்பு அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்று அனைவரும் நம்புகிறார்கள்.

வரி செலுத்துவோர் பிரிவு 80C -இன் வரம்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறார்கள்

நாட்டின் வரி செலுத்துவோர் 2024 பொது பட்ஜெட்டில் இருந்து அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர். வரி சுமையில் உள்ள மக்கள் கடந்த பல ஆண்டுகளாக வரி விதிப்பில் மாற்றங்களை எதிர்பார்க்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில், இந்த முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது, ​​தங்களுக்கு வருமான வரி பிரிவு 80சி வரம்பை (Tax Slab) அரசு அதிகரிக்கலாம் என வரி செலுத்துவோர் (Taxpayers) எதிர்பார்க்கின்றனர்.

மேலும் படிக்க | பெண்களுக்கு வீட்டுக்கடன் வழங்க காத்திருக்கும் இந்தியா! மகளிருக்கு மரியாதை தரும் கடன் வழங்குநர்கள்

பழைய வரி விதிப்பு முறை தொடருமா? 

2023-24 பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு முறையில் (New Tax Regime) அரசாங்கத்தால் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இருப்பினும், நிதி அமைச்சகம் பழைய வரி முறையை ரத்து செய்யவில்லை. பழைய வரி முறையே (Old Tax Regime) தொடர வேண்டும் என வரி செலுத்துவோர் எதிர்பார்க்கின்றனர்.

இது தவிர, நாட்டின் ஏழை மக்கள் மற்றும் விவசாயிகள் பட்ஜெட்டில் பணவீக்க அடிப்படையில் தங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று நம்புகிறார்கள்.

எதிர்வரும் 2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் பற்றி நிதியமைச்சர் கூறியது என்ன?

இம்முறை பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள் வெளியாகும் என்பது பற்றி அரசாங்கத்தினால் இதுவரை எதுவும் தெளிவுபடுத்தப்படவில்லை. ஆனால், 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன் இந்த பட்ஜெட் வருவதால், பட்ஜெட் 2024 இல் (Budget 2024) பெரிய அறிவிப்புகள் எதுவும் இருக்காது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) தெரிவித்துள்ளார்.

இருப்பினும் மக்களின் எதிர்பார்ப்பு என்னவோ எப்போதும் போலவே பெரிதாகவே உள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் தருணத்திற்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த முறை நிதியமைச்சரின் பட்ஜெட் பெட்டியில் இருந்து என்ன வெளிவரும் என்பது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகே தெரியவரும்.

மேலும் படிக்க | SSY, SCSS, NSC.. ஜாக்பாட் செய்தி!! சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களில் ஏற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News